முதலீடு செய்வது முக்கியமில்லை, எப்போ செய்கிறோம் என்பதுதான் முக்கியம்! பணக்காரர்கள் பாலோ பண்ணும் விதி

முதலீடு செய்து அதிக லாபம் பெற வேண்டும் என்று வரும்போது 2 விஷயங்கள் மிக முக்கியமானது அதில் ஒன்று நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது மற்றொன்று முன்கூட்டியே முதலீடு செய்ய தொடங்குவது. ஒருவர் இளம் வயதிலிருந்தே முதலீட்டை தொடங்கும் போது எதிர்காலத்தை சிறப்பாக அமைக்க முடியும். அத்துடன் மட்டுமல்லாமல் ஓய்வூதியத்திற்காகவும் சேமிக்க முடியும். இந்தப் பதிவில் ஒருவர் 1 லட்ச ரூபாயை முன்கூட்டியே முதலீடு செய்யும்போது தங்களுடைய 60-ஆவது வயதில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.

20 வயதில் முதலீடு: உங்களுடைய 20 வயதில் 1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஒட்டுமொத்த முதலீட்டு காலத்திற்கும் உங்களுடைய ஆண்டு வருமானம் 12 சதவீதம் மற்றும் கூட்டு வட்டி முறையில் உங்களுடைய முதலீடு வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றால்.. உங்களுக்கு 60 வயதாகும் போது இந்த 1 லட்ச ரூபாய் முதலீடு சுமார் 100 மடங்கு அதிகரித்து 1 கோடியாக இருக்கும். அதற்கு 40 வருடங்கள் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும்.

முதலீடு செய்வது முக்கியமில்லை, எப்போ செய்கிறோம் என்பதுதான் முக்கியம்! பணக்காரர்கள் பாலோ பண்ணும் விதி

30 வயதில் முதலீடு: 20 வயதிற்கு பதிலாக 30 வயதில் 1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் 12 சதவீத ஆண்டு வருமானம் மற்றும் கூட்டு வட்டியின் மூலம் உங்களுடைய 1 லட்சம் முதலீடு சுமார் 30 மடங்கு அதிகரித்து உங்களுடைய 60-வது வயதிற்குள் 30 லட்சம் ஆக மாறி இருக்கும். 10 ஆண்டு காலத்திற்கு தாமதமாக சேமிக்கும் போது இறுதியில் கிடைக்கக்கூடிய முதிர்வு தொகை 20 வயதில் முதலீடு செய்வதைக் காட்டிலும் குறைவாக உள்ளதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.

40 வயதில் முதலீடு: நீங்கள் உங்களுடைய 40-வது வயதில் 1 லட்ச ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் 12 சதவீத ஆண்டு வருமானத்தில் உங்களுடைய 1 லட்ச ரூபாய் முதலீடு 10 மடங்கு மட்டுமே அதிகரித்து உங்களுடைய 60-வது வயதிற்குள் 10 லட்சமாக மாறி இருக்கும். இதிலிருந்து 20 வயதில் முதலீடு செய்தால் கிடைக்கக்கூடிய அதிக லாபத்தையும், 30 வயதிலிருந்து முதலீடு செய்தால் கிடைக்கக்கூடிய வருமானத்தையும், 40 வயதில் முதலீடு செய்தால் கிடைக்கக்கூடிய குறைந்த வருமானத்தையும் தெரிந்து கொள்ளலாம்.

ஆரம்ப முதலீடுகள் கூட்டு வட்டியின் நன்மையை வழங்குகின்றன. இதனால் தான் 20-வது வயதில் முதலீட்டை தொடங்கும் போது 1 லட்சம் முதலீடு 1 கோடியாக மாறியதைப் பார்த்தோம். இதிலிருந்து நாம் ஒரு சிறிய முதலீட்டின் மூலம் அதிக வருமானம் பெற வேண்டுமானால் சீக்கிரமே முதலீடு செய்ய தொடங்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

நீண்ட காலத்திற்கு பிற சேமிப்பு திட்டங்களை விட ஈக்விட்டிகள் அதிக வருமானத்தை வழங்குகின்றன. ஆனால் இவற்றில் ரிஸ்க்கும் அதிகம் தான். மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும். நீங்கள் எவ்வளவு முன்னதாக தொடங்குகிறீர்களோ? அவ்வளவு அதிகமான கூட்டு வட்டி வருமானத்தை பெற முடியும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+