எல்லோரிடமும் முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால் பெரும் தொகையாக முடியாது என்பதால் முதலீடு செய்ய முடியாமல் இருப்பர்.
சிஸ்டமேட்டிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் என்பது மியூச்சுவல் ஃபண்ட்ஸின் மூலம் வழங்கப்படும் ஒரு சிறந்த முதலீட்டு திட்டமாகும்.
இதன் மூலம் ஒருவர் மாதம் 500 ரூபாயில் இருந்து கூட முதலீடு செய்ய முடியும்.
வருமானம் அதிகம்
அதேபோல இந்த எஸ்ஐபி (SIP) மூலம் மாத மாதம் முதலீடு செய்யலாம். ஆக ஒட்டுமொத்தமாக முதலீடு செய்வதற்கு பதிலாக, மாத மாதமோ அல்லது காலாண்டுக்கு ஒரு முறையோ, குறிப்பிட்டகால இடைவெளியில் முதலீடு செய்து கொள்ளலாம். இது வங்கிகளில் செய்யும் தொடர் வைப்பு போன்றே செய்யலாம். ஆனால் வங்கி தொடர் வைப்புகளில் கிடைக்கும் வருமானத்தினை விட, இதில் வருமானம் அதிகம்.
எப்படி கோடீஸ்வரர் ஆவது?
இந்த எஸ்ஐபி மூலம், அதிலும் மாதம் 1000 ரூபாய் மூலம் கோடீஸ்வரர் ஆக முடியுமா? இது குறித்து செபியில் பதிவு செய்த நிபுணர் கூறுகையில், சராசரியாக 15% வருமானம் கிடைக்கும் என்றால், உங்களது எஸ் இ பி மூலம் 25 - 30 ஆண்டு ஆண்டுகளில் உங்களது இலக்கினை அடைய முடியாது. இது உங்களது வருமானம் அதிகரிக்க அதிகரிக்க முதலீட்டினையும் அதிகரிக்கனும். இதன் மூலமே இலக்கினை அடைய முடியும் என கூறியுள்ளார்.
கணக்கீடு
உதாரணத்திற்கு மாதம் 1000 ரூபாய் முதலீடு செய்வதாக வைத்துக் கொள்வோம். இதனை 30 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், மாதம் சராசரியாக 15 சதவீதம் வருமானம் கிடைக்கிறது என வைத்துக் கொள்வோம்.
ஆரம்ப கால முதலீடு - ரூ.1000
மொத்த முதலீட்டு தொகை - ரூ.3,60,000
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
வருவாய் விகிதம் - ரூ.66,49,821
மொத்த மதிப்பு - ரூ.70,09,821
எப்படி ரூ.1 கோடி சாத்தியம்
மேற்கண்ட அதே முதலீட்டில் ஆரம்பித்து ஆண்டுக்கு ஆண்டு 10% ஸ்டெப் அப் செய்வதாக வைத்துக் கொள்வோம். இதன் மூலம் உங்களது இலக்கினை அடைய முடியும்.
ஆரம்ப கால முதலீடு - ரூ.1000
மொத்த முதலீட்டு தொகை - ரூ.19,73,928
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
வருவாய் விகிதம் - ரூ.1,19,47,305
மொத்த மதிப்பு - ரூ.1,39,21,233
ரூ.2 கோடி சாத்தியமா?
இதே மாதம் 1000 முதலீட்டில் ஆரம்பித்து, 15 சதவீதம் ஸ்டெப் அப் செய்தால், அதன் மூலம் முதிர்வு காலத்தில் மிகப்பெரிய கார்ப்பஸினை உருவாக்க முடியும்.
ஆரம்ப கால முதலீடு - ரூ.1000
மொத்த முதலீட்டு தொகை - ரூ.52,16,942
முதலீட்டு காலம் - 30 ஆண்டுகள்
வருவாய் விகிதம் - ரூ.1,86,59,432
மொத்த மதிப்பு - ரூ.2,38,76,373
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!



Click it and Unblock the Notifications