ஓடி ஓடி உழைச்சாலும் இன்னும் ஏழையாகவே இருக்கேனே என வருத்தப்படுறீங்களா? இந்த ஒரு விஷயம் தான் காரணம்

உலக மக்கள் தொகையில் முதலிடத்தில் இருக்கும் ஒரு நாடு இந்தியா . அதிக எண்ணிக்கையில் மிடில் கிளாஸ் குடும்பங்கள் நிறைந்த ஒரு நாடு என்றும் கூறலாம். தன்னுடைய வாழ்நாள் உழைப்பையே குடும்பத்திற்காகவும் குழந்தைகளுக்காகவும் வழங்கக்கூடிய மனிதர்கள் நிறைந்த ஒரு நாடு .

இங்கே என்னதான் ஓடி ஓடி உழைத்தாலும் பெரும்பாலான மிடில் கிளாஸ் மக்கள் அதே நிலையில் தான் இருக்கிறார்கள், பணக்காரர்கள் தொடர்ந்து பணக்காரர்களாகவும் ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவுமே இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என்பதை தன்னுடைய யூடியூப் பதிவின் மூலம் விளக்கி இருக்கிறார் பிரபல நிதி ஆலோசகர் அக்சத் ஸ்ரீவாஸ்தவா.

ஓடி ஓடி உழைச்சாலும் இன்னும் ஏழையாகவே இருக்கேனே என வருத்தப்படுறீங்களா? இந்த ஒரு விஷயம் தான் காரணம்

இந்திய மிடில் கிளாஸ் மக்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ள வேண்டும் பணம் தான் உங்களுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கும் என்பதை நினைவு கொள்ள வேண்டும் என கூறுகிறார். அதே போல புதிதாக வேலைக்கு செல்பவர்கள் பெரிய நிறுவனங்களில் வேலைக்கு சேருங்கள் என்று அறிவுரை வழங்குகிறார். இதனை gold standard jobs என அவர் அழைக்கிறார்.

மெக்கன்சி, மைக்ரோசாப்ட் ,மெட்டா போன்ற நிறுவனங்களில் நீங்கள் வேலைக்கு செல்லுங்கள் அங்கே உங்களுடைய திறமை மட்டும் அல்ல உங்களின் ப்ரோபையே வளர்ந்துவிடும் எனக் கூறுகிறார் . மெட்டாவில் நீங்கள் வேலை செய்து பணிநீக்கம் செய்யப்பட்டால் உடனே மற்ற நிறுவனங்கள் உங்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளும் அதுவே டிசிஎஸ் போன்ற ஒரு நிறுவனத்தில் இருந்து உங்களை பணிநீக்கம் செய்கிறார்கள் என்றால் உடனடியாக உங்களுக்கு வேலை கிடைத்துவிடாது என்கிறார்.

நீங்கள் வேலைக்கு சேரக்கூடிய நிறுவனத்தின் பிராண்ட் வேல்யூ மிக முக்கியமானது என சுட்டிக்காட்டுகிறார். இது போன்ற நிறுவனங்களில் தான் உங்களால் குறுகிய காலத்திலேயே பெரிய அளவிலான சம்பளத்திற்கும் செல்ல முடியும் எனகிறார்.இவ்வாறு வேலைக்கு சென்று நல்ல சம்பளம் வாங்கும் பெரும்பாலானவர்கள் செய்யக்கூடிய தவறு, தவறான வழிகளில் அதனை முதலீடு செய்வது என்கிறார்.

பாதுகாப்பான முதலீடு என்பதை கருவில் ஃபிக்சட் டெபாசிட்களில் நாம் முதலீடு செய்வோம் ஆனால் அந்த முதலீடு வளர்ந்து இருக்கும் போது பணவீக்கம் காரணமாக அந்த பணம் நமக்கு போதுமானதாக இருக்காது. எனவே நாம் தொடர்ந்து ஏழையாகவே இருப்போம் என கூறும் அவர் கண்ணை மூடிக்கொண்டு ஏதோ ஒரு இன்ஃப்ளூயன்சர் சொல்கிறார் என்பதற்காக நீங்கள் எந்த திட்டங்களிலும் முதலீடு செய்யாதீர்கள் என கூறுகிறார்.

பாரம்பரியமான பிக்சட் டெபாசிட், ரியல் எஸ்டேட் முதலீடு உள்ளிட்டவற்றை கைவிடுங்கள் என அறிவுரை வழங்குகிறார். சிறுவயதில் தான் ரிஸ்க் எடுக்க முடியும் என்பதால் ஈக்விட்டி முதலீடுகள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள் அதில் முதலீடு செய்யுங்கள் என்ற அறிவுரையை அவர் வழங்குகிறார்.

பணக்காரர்களுக்கும் மிடில் கிளாஸ் மக்களுக்கும் இருக்கக் கூடிய வித்தியாசம் என்னவென்றால் பணக்காரர்கள் அதிக வருமானம் ஈட்டுவார்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சரியாக திட்டமிட்டு குறைப்பார்கள் ஆனால் மிடில் கிளாஸ் மக்களும் எவ்வளவு வரி வருகிறதோ அதை செலுத்துவார்கள் திட்டமிட்டு முதலீட்டையும் சேமிப்பையும் செய்தால் வரியையும் குறைவாக செலுத்தலாம் உங்களுடைய செல்வத்தையும் பெருக்கலாம் என கூறுகிறார்.

பெரும் பணக்காரர்கள் ஒரு நாளைக்கு 16 மணி நேரம் வேலை செய்வது கிடையாது, அவர்கள் பணத்தைக் கொண்டுதான் பணத்தைப் பெறுக்குகிறார்கள் எனவே உங்களுடைய பணத்தை சரியாக முதலீடு செய்யுங்கள் என்பது தான் இவர் கூறக்கூடிய முக்கியமான ஒரு அறிவுரையாகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+