அம்பானி, ஷிவ் நாடார் போல் சுயம்புவாக பில்லியனராவது எப்படி..?! பாலோ செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!!

நீ என்ன ஆகப் போகிறாய்? என யாராவது கேட்டால் கோடீஸ்வரன் ஆகப் போகிறேன் என சொல்லிப்பாருங்கள், அதெல்லாம் அவ்ளோ ஈசி இல்ல என்ற பதில் தான் உங்களுக்கு கிடைக்கும். ஏனெனில் நல்ல படிப்பு, நல்ல வேலை என்பதை தாண்டி சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்பது பலரது கனவு.

குறிப்பாக கல்லூரி படிப்பை முடித்த பட்டதாரிகள் மற்றும் வேலைக்கு செல்லும் ஒவ்வொருவரிடமும் இந்த கனவு இருக்கிறது. இந்த கனவை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும்? ஏதேனும் ஒரு துறையை தேர்வு செய்து அதில் நிபுணராவது, மக்களுக்கு சேவை செய்யும் ஒரு தயாரிப்பினை வழங்குவது ஆகியவை மட்டும் உங்களை கோடீஸ்வரராக மாற்றாது என்பது தான் இந்த உலகம் நமக்கு கற்றுத்தரும் பாடம்.

அம்பானி, ஷிவ் நாடார் போல் சுயம்புவாக பில்லியனராவது எப்படி..?! பாலோ செய்ய வேண்டிய 10 விஷயங்கள்..!!

நாம் மாற வேண்டும் அதற்கேற்ப நமது முயற்சிகளையும் மாற்றிக் கொள்ள வேண்டும் இது தான் கோடீஸ்வரர் என்ற இலக்கை அடைய நமக்கு உதவி செய்யும். கோடீஸ்வரராவதை விட அந்த நிலையை தக்க வைத்து கொள்வது தான் மிகக் கடினம் என்பது உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கும் போது உங்களுக்கு தெரிய வரும்.

சுயமாக சம்பாதித்து கோடீஸ்வரர் ஆவது எப்படி? அந்த நிலையை தக்க வைத்து கொள்வது எப்படி? தனது குடும்பத்தில் ஒற்றை ஆளாக உழைத்து கோடீஸ்வரரானவர்கள் எப்படி அந்த நிலையை அடைந்தனர்? அதற்கு அவர்கள் பின்பற்றிய வழிமுறைகள் என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம். இந்த 10 வழிமுறைகளும், இலக்கை நோக்கி தெளிவான பாதை அமைக்க நிச்சயம் உங்களுக்கு உதவும்.

விதிகளை கடுமையாக பின்பற்றுங்கள்: இந்த உலகில் பல கோடி மக்கள் வாழ்கின்றனர். இதில் 95% மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தீர்மானிப்பது 5% மக்கள். தனக்கென ஒரு கொள்கையை அமைத்து, அதற்கென விதிகளை தீர்மானித்து அவற்றை முறையாக யார் பின்பற்றுகிறார்களோ அவர்களால் தான் இந்த உலகம் ஆளப்படுகிறது.

எனவே, உங்களுக்கென கொள்கைகளை வகுத்து கொள்ளுங்கள். என்ன சவால்கள் வந்தாலும் உங்கள் கொள்கைகளை ஒரு போதும் கைவிடாதீர்கள். கொள்கைகளை இறுகப்பற்றி விதிகளை சரியாக பின்பற்ற நீங்கள் செய்யும் தியாகங்கள், கண்டிப்பாக உங்களை வெற்றி வாசலில் கொண்டு சென்று நிறுத்தும்.

மாற்றங்களை கவனித்து செயல்பட வேண்டும்: "அவுட் ஆஃப் தி பாக்ஸ்" சிந்தனை, அதாவது அனைவரும் சிந்திக்கும் வழியை விட்டு மாற்று முறையில் சிந்திப்பது கோடீஸ்வரராக விரும்புவோரிடம் இருக்க வேண்டிய முக்கியமான தகுதி.

வேகமாக செல்லும் இந்த உலகில் மக்கள் நாள்தோறும் பல்வேறு பிரச்னைகளை சந்திக்கின்றனர். அந்த பிரச்னைகளுக்கு எல்லாம் நீங்கள் தனித்துவமான தீர்வை தர வேண்டும். இதற்கு முதலில் மக்களை நீங்கள் கவனிக்க வேண்டும்.

தனித்துவமான கவனிக்கும் திறன், நம்மை சுற்றி நிகழும் அனைத்தையும் நமக்கு புரிய வைக்க உதவும். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எதற்கு பயன்படுத்துகின்றனர், மனித உளவியல், பாரம்பரியம், மனப்போக்கு, செயல்பாடுகள் ஆகியவற்றை உன்னிப்பாக கவனித்து, துல்லியமாக ஆய்வு செய்தவர்களே இன்று உலகின் தவிர்க்க முடியாத தொழில்முனைவோர்களாக உள்ளனர்.

ஏனெனில் முழுமையான தரவு ஆய்வுகள் தான், பல்வேறு தீர்வுகளை உருவாக்கவும், சிந்திக்கவும் வைக்கிறது. இதன் மூலம் மக்களுக்கு தேவையான புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உருவாக காரணமாக அமைகிறது.

தொடர் தோல்விகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்: "ஒரு தொழிலில் தோல்வி என்பதே கிடையாது, ஒன்று நாம் வெற்றி பெறுவோம் அல்லது நாம் கற்றுக் கொள்வோம், வெற்றி நமக்கு எதையுமே கற்றுத்தராது, தோல்வி மட்டுமே நமக்கு உண்மையை கற்றுத்தரும்" - ஸ்டார்ட் அப் நிறுவனர் ஒருவரின் இந்த கூற்று மிக பிரபலமானது.

கோடீஸ்வரனாக வேண்டும் என நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தோல்வியில் முடியலாம். அந்த தோல்வி தொடக்கத்திலே ஏற்படலாம் அல்லது பின்னாட்களில் ஏற்படலாம். ஆனால் அதற்காக துவண்டு விட கூடாது, என்ன தவறு நடந்தது? எங்கே தவறு நடந்தது? என கண்டறிந்து அதனை கடந்து வெற்றி பெற வேண்டும்.

உங்கள் முயற்சிக்கு பின் இருக்கும் நோக்கம் நேர்மறையாக இருக்க வேண்டும்: பணம் சம்பாதிக்க வேண்டும் என்பது முக்கியம் தான், ஆனால் அது மட்டுமே உங்களின் இலக்காக இருந்துவிடக் கூடாது என்பது தான் வரலாறு நமக்கு கற்றுத்தரும் பாடம்.

வெகுமதியை விட நோக்கத்தை உயர்வாக வைத்துக் கொண்டால், வெற்றி நிச்சயம் என்பதே நிதர்சனம். சமூகத்தின் எந்த பகுதியாக இருந்தாலும், பணப் பரிமாற்றம் நடைபெறும் இடமெல்லாம் அந்த பரிமாற்றத்தின் பின்னணியில் ஒரு நோக்கம் மறைக்கப்பட்டுள்ளது, இது பணத்தின் மதிப்புக்கு சமமாக கருதப்படுகிறது.

அதை போலவே, செல்வத்தை குவிக்க வேண்டும் என்ற உங்களின் தனிப்பட்ட நோக்கத்தை விட, தற்போது மக்கள் சந்திக்கும் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்ற நோக்கத்தை அதிகமாக கொண்டிருக்க வேண்டும். இது தான் உங்களை தொழில்ரீதியாக வெற்றி பெற வைத்து, தக்க வைக்க உதவும்.

ஒருபோதும் கற்றுக் கொள்வதை நிறுத்திக் கொள்ளாதீர்கள்: புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பது தான் தற்போதுள்ள பெரும்பாலான பணக்காரர்கள் நமக்கு கூறும் அறிவுரை. இந்த உலகம் மாறிக் கொண்டிருக்கிறது, நமது பிரச்னைகளும் மாறி கொண்டிருக்கிறது.

எனவே நமது தொழிலோ அல்லது சேவையோ சுமூகமாக செல்ல புது புது விஷயங்களை கற்று கொண்டு நம்மை அப்டேட் செய்து கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு துறையில் நிபுணராக இருந்தாலும் ஒரு சாமானியர் கூட புதிதான ஒன்றை உங்களுக்கு கற்றுத்தரக் கூடும்.

எனவே கற்றல் மனநிலையை வளர்த்துக் கொள்வது அடிப்படை. இத்தகைய சிந்தனை மட்டுமே பொதுமக்களின் பிரச்னைகள், சவால்களை முழுமையாக புரிந்து கொண்டு தீர்வினை காண முயற்சிக்கும். இது மிகப்பெரிய அளவிலான வாடிக்கையாளர்களை அளித்து உங்களை கோடீஸ்வரராக்க உதவும்.

சிக்கனம்: கோடீஸ்வரராக வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் முதலில் புரிந்து கொள்ள வேண்டியது சிக்கனம். தனிப்பட்ட முறையிலும் சரி, தொழில் ரீதியாகவும் சரி எதற்கு செலவு செய்ய வேண்டும், எதற்கு செய்ய கூடாது என்கிற புரிதல் அவசியம்.

அதற்கேற்றப்படி சிந்தனையும், செயல்பாடுகளையும் வைத்து கொண்டால் குறைந்த செலவில் தயாரிப்புகளை கொண்டு வர முடியும். குறிப்பாக பணம் என வரும் போது நாம் அதிகம் செலவு செய்ய விரும்ப மாட்டோம் என்பதே மனித இயல்பு என்பதை உணர வேண்டும்.

வாடிக்கையாளர் அதிக பணம் கொடுக்க விரும்ப மாட்டார், விற்பனையாளர் குறைந்த பணத்தை ஏற்க மாட்டார் இதற்கிடையே உள்ள உளவியலை புரிந்து கொண்டால் உங்கள் சிந்தனை மாற்றமடைவதை நீங்களே உணர்வீர்கள்.

பொருளாதாரத்தை புரிந்து கொள்ளுங்கள்: பொருளாதார புரிதல் இல்லாதவரால் கோடீஸ்வரராக முடியாது. பொருளாதார அறிவை வளர்த்து கொள்ளுங்கள். உலகம் தொடங்கி உள்ளூர் பொருளாதாரம் வரை எது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டு நடப்பு , அரசின் அறிவிப்புகள், நம்மை சுற்றியுள்ள கட்டுமான முன்னேற்றங்கள் ஆகியவற்றை புரிந்து கொண்டு அதற்கேற்ப தொழிலை வழிநடத்தினால் தான், செல்வந்தனாவதற்கான அடித்தளத்தை பலமாக அமைக்க முடியும். பொது பிரச்னைகளை புரிந்து பொதுவெளியில் செயல்பட்டு முதலீடு செய்வதன் மூலம் பணக்காரர் ஆக முடியும்.

சொத்துக்களை கவனமாக கையாள வேண்டும்: கோடீஸ்வரராக கடுமையான முயற்சி மட்டும் போதாது, பணத்தை பெருக்குவதற்கு நம் முன் இருக்கும் அனைத்து சரியான வழிமுறைகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

பாதுகாப்பான முதலீடு எது, அரசு திட்டங்கள் என்னென்ன , முதலீட்டு பத்திரங்கள் , முதலீட்டு நடைமுறைகள் ஆகியவற்றை கவனமாக ஆய்வு செய்து கற்றுக் கொள்ள வேண்டும். இது, வேலைக்கு செல்வோர் படிப்படியாக முன்னேறி ,நீடித்த நிலையான முறையில் இலக்கை அடைய உதவி செய்யும்.

பெரிய கண்டுபிடிப்பாளராகவோ, தொழில்முனைவோராகவோ இல்லாத தனிநபர்கள் பலர் பெரும் பணக்காரர்கள் ஆகி இருப்பதை வரலாற்றில் கண்டிருக்கிறோம். இதற்கு என்ன காரணம் தெரியுமா? சொத்துகள் குறித்து அவர்கள் முறையாக திட்டமிட்டு தங்கள் பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் செல்வத்தை குவித்துள்ளனர்.

பின்னடைவுகளை தாங்கி கொள்ளும் திறன்: தோல்வியும், தடைகளும் நமது வெற்றிப் பாதையில் பலமுறை குறுக்கிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். தவிர்க்க முடியாத பிரச்னைகளை சமாளிக்க விடா முயற்சியுடன் செயல்பட வேண்டும். திறந்த மனதுடன் புது புது விஷயங்களை கற்று கொள்ளும் தயாராக இருக்க வேண்டும்.

வெற்றி அடையும் நாளுக்காக காத்திருக்க வேண்டாம், தோல்விகளில் இருந்து பாடம் கற்று கொண்டு அதற்கான பாதையை முழு மனதுடன் பின்பற்ற வேண்டும்.

ஸெடாகா: உலகெங்கிலும் வாழும் யூதர்கள் பின்பற்றும் ஒரு பாரம்பரியமே ஸெடாகா (TZEDAKAH). இதற்கு திரும்ப தருவது என பொருள். இன்றைய சமுதாயத்தின் அடிப்படை தேவைகளில் ஒன்று தொண்டு. கஷ்டப்பட்டு சேர்த்த செல்வத்தை அடுத்தவர்களுக்கு தருவதா என நினைக்க வேண்டாம்.

தொண்டு செய்யும் பழக்கத்தை ஆரம்பத்தில் இருந்தே வளர்த்துக் கொள்ளுங்கள். பணம் சம்பாதித்து கோடீஸ்வரர் ஆன பலரும் இன்றும் அறக்கட்டளை தொடங்கி நிதியுதவி அளித்து வருகின்றனர்.

உங்கள் செல்வம், தேவையில் இருப்பவர்களுக்கு பயன்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். தொண்டு மனப்பான்மை உங்கள் இலக்கை நோக்கி பயணிக்க ஊக்குவிக்கும் மற்றும் நல்ல மனிதராக உங்களை உருவாக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+