தற்போதுள்ள இளம் தம்பதிகள் மத்தியில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகமாகி இருக்கிறது. தங்களது ஓய்வு காலம், குழந்தைகளின் மேற்படிப்பு என பல காரணங்களுக்காக முதலீடு செய்கிறார்கள். உங்களுக்கு குழந்தை இருக்கிறது அந்த குழந்தை காலேஜ் போகும் போது மேற்படிப்புக்காக ரூ.1 கோடி தேவை என்றால் பின்வரும் வழிமுறையை பின்பற்றினால் எளிதாக அந்த இலக்கை அடையலாம்.
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது தற்போது வாடிக்கையாக உள்ளது. அந்த வகையில் நாம் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்யும் போது உங்கள் குழந்தையின் கல்லூரி படிப்புக்காக முதலீடு செய்ய போகிறீர்கள் என்றால் ரூ.1 கோடி என இலக்கு வைத்து கொள்ளுங்கள்.

உங்களுக்கு தான் தற்போது தான் குழந்தை பிறந்துள்ளது, குழந்தை 18 வயதில் கல்லூரிக்கு செல்ல போகிறார் என்றால் அடுத்த 18 ஆண்டுகளுக்கும் நீங்கள் ஒவ்வொரு மாதமும் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தவறாமல் ஒழுக்கமான முறையில் முதலீடு செய்தால் இந்த இலக்கை எட்டிவிட முடியும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முதலீடு செய்யும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு காத்திருந்தால் தான் நல்ல லாபம் கிடைக்கும். அதற்காக தான் சிறு வயதிலேயே முதலீடு செய்துவிடுங்கள் என இத்துறை சார்ந்தவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக எஸ்ஐபி முறையில் Systematic investment plan எனப்படும் எஸ்ஐபி முறையில் மாதந்தோறும் ஒரு தொகையை நாம் முதலீடு செய்ய வேண்டும்.
காம்பவுண்டிங் முறையில் உங்களுடைய முதலீட்டை பல மடங்கு உயர்த்த எஸ்ஐபி முதலீடுகள் தான் உதவுகின்றன. எனவே உங்கள் குழந்தை பிறந்த ஆண்டு முதலே மாதம் தோறும் 15,000 ரூபாயை நீங்கள் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய தொடங்க வேண்டும். அடுத்த 18 ஆண்டுகளுக்கு அதனை தொடர வேண்டும்.
உங்களின் முதலீடு ஆண்டுக்கு 12% வளர்ச்சி அடைகிறது என வைத்து கொண்டால் 18 ஆண்டுகள் முடியும் போது நீங்கள் செய்த மொத்த முதலீடு 32, 40,000 ரூபாயாக இருக்கும். அத்துடன் கூடுதலாக உங்களுக்கு 74, 35,000 ரூபாய் சேர்த்து மொத்தம் 1 கோடி ரூபாய் கிடைக்கும். மியூச்சுவல் ஃபண்டு முதலீடுகள் எத்தனை ஆண்டுகள் அதிகமாக வைத்திருக்கிறோமோ அவ்வளவு அதிக லாபத்தை நமக்கு தரும்.
உங்களுக்கு குழந்தை பிறந்திருக்கிறது என்றால் அவர்கள் பிறந்த உடனே இந்த எஸ்ஐபி முதலீட்டை தொடங்கலாம், அவர்கள் கல்லூரிக்கு செல்லும் போது 1 கோடி ரூபாய் உங்களுக்கு கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர். கல்லூரி படிப்புக்கு எவ்வளவு பணம் தேவையோ அதனை மட்டும் எடுத்து கொண்டு மீதமுள்ள பணத்தை அப்படியே வைத்திருந்தால் அது இன்னும் பல ஆண்டுகளில் பல மடங்கு பெருகி லாபம் தரும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

