மாதம் ரூ.500 SIP முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.50 லட்சம் என்ற இலக்கை எட்ட முடியும்?

மாதம் தோறும் குறிப்பிட்ட பணத்தை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை எஸ்ஐபி முதலீடு என அழைக்கிறோம். சிறு துளி பெரு வெள்ளம் என்பது தான் இது. நாம் சிறுக சிறுக பணத்தை முதலீடு செய்தால் பிற்காலத்தில் பெரிய தொகையாக அது நமக்கு கிடைக்கும்.

எஸ்ஐபி முதலீட்டில் மாதம் 500 ரூபாய் முதலே நாம் முதலீடு செய்ய முடியும். அப்படி ஒரு நபர் மாதம் 500 ரூபாய் முதலீடு செய்கிறார் என்றால் அவரால் எத்தனை ஆண்டுகளில் 50 லட்சம் ரூபாய் என்ற இலக்கை எட்ட முடியும் என்பதை தற்போது தெரிந்து கொள்ளலாம். எஸ்ஐபி முதலீடுகள் கூட்டு வட்டி முறையில் வளர்ச்சி அடைந்து நமக்கு லாபம் தருகின்றன. இதனால் கூட்டு வட்டியை 8ஆவது அதிசயம் என அழைக்கிறார்கள்.

மாதம் ரூ.500 SIP முதலீடு செய்தால் எத்தனை ஆண்டுகளில் ரூ.50 லட்சம் என்ற இலக்கை எட்ட முடியும்?

மாதம் 500 ரூபாய் மட்டும் முதலீடு செய்து 50 லட்சத்தை அடைய மிக நீண்ட காலம் தேவைப்படும். நீங்கள் மாதம் 500 ரூபாய் மட்டும் முதலீடு செய்கிறீர்க்கள் உங்கள் மியூச்சுவல் ஃபண்டு சராசரியாக 12% லாபம் தருகிறது என வைத்து கொண்டால் நீங்கள் ஓராண்டுக்கு 6000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். உங்கள் முதலீடு 50 லட்சத்தை அடைய உங்களுக்கு சுமார் 40 ஆண்டுகள் தேவைப்படும்.

இதுவே குறுகிய காலத்தில் இந்த இலக்கை எட்ட வேண்டும் என்றால் முதலீட்டை Step-up SIP முறையில் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீதம் (உதாரணமாக 10% அல்லது 15%) உயர்த்திக்கொண்டே செல்ல வேண்டும். அவ்வாறு செய்யும் போது 40 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய தேவைய இல்லை. 32 ஆண்டுகளிலேயே 50 லட்சம் ரூபாய் என்ற இலக்கை எட்டலாம்.

எஸ்ஐபி முதலீடுகளை பொறுத்தவரை நீங்கள் எவ்வளவு காலம் முதலீட்டில் இருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக லாபம் கிடைக்கும். பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் நீண்ட காலத்தில் சராசரியாக 12% முதல் 15% வரை வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. எனவே சிறந்த ஃபண்டினை தேர்வு செய்வது முக்கியம்.

மேலும் இன்று 50 லட்சம் என்பது பெரிய தொகையாகத் தெரியலாம். ஆனால் 30-40 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் மதிப்பு இன்றைய அளவிற்கு இருக்காது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே இன்றைய வாழ்க்கை செலவினத்தை அடிப்படையாகவும் பணவீக்கத்தை அடிப்படையாகவும் கொண்டு தான் நீங்கள் முதலீட்டை கணக்கிட வேண்டும்.

SIP-ன் வெற்றியே இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து முதலீடு செய்வதில் தான் உள்ளது. எனவே முதலீட்டை நிறுத்தாமல் இயன்ற அளவு பல ஆண்டுகள் தொடர வேண்டும். எஸ் ஐபி முதலீடுகள் முதல் குறுகிய ஆண்டுகளுக்கு எந்த ஒரு லாபத்தையும் தராது. ஆனால் குறிப்பிட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் அது தரும் லாபம் உங்களை பிரமிக்க வைக்கும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+