கோடீஸ்வரராக ஓய்வுபெற சிறந்த வழி.. எதில் முதலீடு.. எவ்வளவு முதலீடு..!

தற்போதைய காலத்தில் மியூச்சுவல் ஃபண்ட் பற்றிய விழிப்புணர்கள் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் இதன் மீதான ஆர்வம் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றது.

உண்மையில் இன்றைய காலகட்டத்தில் பலரும் தாங்கள் சம்பாதிக்கும் தொகையில், சிறிய தொகையையாவது முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்.

பல நடுத்தர குடும்பத்தினை சார்ந்த மக்களும் குழந்தைகளின் கல்வி, திருமணம், ஓய்வுகாலம் என மியூச்சுவல் ஃபண்டுகளில் திட்டமிட்டு முதலீடு செய்து வருகின்றனர்.

அதிகரித்து வரும் ஆர்வம்

அதிகரித்து வரும் ஆர்வம்

குறிப்பாக பலரும் எதிர்காலத்தில் நல்ல வீடு கட்ட வேண்டும். கார் வாங்க வேண்டும் என அதற்காக மியூச்சுவல் ஃபண்டுகளில் பலரும் முதலீடு செய்கின்றனர். பல இளைய தலைமுறையினரும் தங்களது ஓய்வுகாலத்தினை சுமூகமாக கழித்திட இளம் வயதில் இருந்தே மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர். இது உண்மையில் மிக வரவேற்கதக்க விஷயம் எனலாம்.

எஸ்ஐபி-யில் முதலீடு

எஸ்ஐபி-யில் முதலீடு

இன்றைய காலத்தில் பலரும் முதலீடுகளை பற்றி விவாதிக்கின்றனர். இதுவே ஒரு ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகின்றது. அதிலும் எஸ்ஐபி எனப்படும் சிஸ்டமேடிக் இன்வெஸ்ட்மென்ட் பிளான் எனப்படும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடுகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இது மாத மாதம் அல்லது காலாண்டுக்கு ஒரு முறை எனும்போது முதலீடு செய்ய வசதியாகவும் இருக்கின்றது. மேலும் மாதம் குறைந்தபட்சம் 500 ரூபாய் கூட இதில் முதலீடு செய்ய முடியும் என்பது இன்னொரு சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

திட்டமிட வேண்டும்

திட்டமிட வேண்டும்

இளம் வயதிலேயே ஒருவர் தனது ஓய்வுகாலத்திற்கான முதலீட்டினை திட்டமிடுகின்றார் எனில், பணவீக்கத்தினை கணக்கில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப திட்டமிட வேண்டும். உதாரணத்திற்கு ஓய்வு காலத்திற்கு முதலீடு செய்ய நினைக்கிறீர்கள் எனில். பணவீக்கத்தின் அடிப்படையில் திட்டமிட வேண்டும்.

15 வருடம் கழித்து எவ்வளவு தேவை?

15 வருடம் கழித்து எவ்வளவு தேவை?

உதாரணத்திற்கு மாதம் 50,000 ரூபாய் செலவாகிறது என வைத்துக் கொள்வோம். வருடத்திற்கு 6 லட்சம் ரூபாய் உங்களுக்கு தேவைப்படும். பணவீக்கம் 5% என வைத்துக் கொண்டால், 15 வருடம் கழித்து உங்களுக்கு 1.1 லட்சம் ரூபாய் மாதம் தேவைப்படும். வருடத்திற்கு 13 லட்சம் ரூபாய் உங்களுக்கு தேவைப்படும்.

25 வருடம் கழித்து எவ்வளவு தேவையிருக்கும்?

25 வருடம் கழித்து எவ்வளவு தேவையிருக்கும்?

மாதம் 50,000 ரூபாய் செலவாகிறது என வைத்துக் கொள்வோம். பணவீக்கம் 5% என வைத்துக் கொண்டால் 25 வருடம் கழித்து உங்களுக்கு 1.75 லட்சம் ரூபாயும், வருடத்திற்கு 21 லட்சம் ரூபாயும் தேவைப்படலாம்.
ஆக மொத்தத்தில் உங்களது வயது என்ன? ஓய்வுகாலத்திற்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பதை முதலில் தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

25 வயதில் முதலீடு

25 வயதில் முதலீடு

ஓரளவு ரிஸ்கில் அனைவருக்கும் ஏற்ற முதலீட்டு திட்டங்கள் என்றால் அது மியூச்சுவல் ஃபண்டுகள் தான். அதிலும் எஸ்ஐபி என்பது இன்னும் பாதுகாப்பான, முதலீடு செய்ய ஏற்றதொரு திட்டமாக பார்க்கப்படுகிறது.

உங்களுக்கு தற்போது 25 வயது என வைத்துக் கொள்வோம். உங்களது 60 வயதில் ஓய்வுபெறும்போது நீங்கள் 1 கோடி ரூபாய் வரை கார்பஸினை பெற என்ன வழி, எந்த ஃபண்டில் முதலீடு செய்யலாம். எவ்வளவு செய்யலாம் என பார்க்கலாம் வாருங்கள்.

எவ்வளவு முதலீடு

எவ்வளவு முதலீடு

தினசரி 50 ரூபாய் முதலீடு என வைத்துக் கொண்டால் மாதத்திற்கு 1,500 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். சராசரியாக 12 - 15% வருமானம் என வைத்துக் கொண்டால், 35 வருட காலத்திற்கு முதலீடு செய்ய வேண்டியிருக்கும். வட்டி விகிதம் என்பது சராசரியாக 12.5% ஆக இருக்கும்.

எஸ்ஐபி-யில் முதலீடு

எஸ்ஐபி-யில் முதலீடு


எஸ்ஐபியில் மாதம் 1,500 ரூபாய் முதலீடு செய்கிறது என வைத்துக் கொள்வோம்.
மாத வருமானம் சராசரியாக - 12.5%
மொத்த முதலீட்டு காலம் - 35 வருடம்
மொத்த முதலீட்டு தொகை - ரூ.6.3 லட்சம்
மொத்த ஓய்வூதிய மதிப்பு ரூ.1.1 கோடி

இது இரண்டாவது திட்டம்

இது இரண்டாவது திட்டம்

எஸ்ஐபியில் மாதம் 1,500 ரூபாய் முதலீடு செய்கிறது என வைத்துக் கொள்வோம்.
மாத வருமானம் சராசரியாக - 12.5%
மொத்த முதலீட்டு காலம் - 30 வருடம்
மொத்த முதலீட்டு தொகை - ரூ.5.4 லட்சம்
மொத்த ஓய்வூதிய மதிப்பு ரூ.59.2 லட்சம்

பொது வருங்கால வைப்பு நிதி

பொது வருங்கால வைப்பு நிதி

இதே மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் விருப்பமில்லாத முதலீட்டாளர்கள் அரசின் திட்டங்களான பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்யலாம். இது மிக பாதுகாப்பான திட்டங்களாகவும் பார்க்கப்படுகிறது. சந்தை அபாயம் இல்லாத ஒரு முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. அதோடு தற்போதைய நிலவரப்படி இந்த திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்படுகின்றது. இதே மற்ற திட்டங்களும் இதே போல வட்டி குறைவாக இருந்தாலும் பாதுகாப்பான திட்டங்களாக உள்ளன.

பிபிஎஃப் முதலீட்டு திட்டம்

பிபிஎஃப் முதலீட்டு திட்டம்

அரசின் இந்த முதலீட்டு திட்டம் 15 வருட திட்டம் என்றாலும், இதனை மேற்கொண்டு 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ள முடியும் என்பதால், இதிலும் 35 ஆண்டுகள் முதலீடு செய்தால் ஓரளவு லாபம் கிடைக்கும். இதில் வரிச்சலுகையும் உண்டு. ஆக ஓய்வுக்காலத்திற்காக இதிலும் முதலீடு செய்யலாம் என்பது நிபுணர்களின் கணிப்பு.

பிபிஎஃப்பில் எவ்வளவு கிடைக்கும்?

பிபிஎஃப்பில் எவ்வளவு கிடைக்கும்?

பிபிஎஃப்பில் மாதம் முதலீடு - ரூ.1,500
வருடத்திற்கு - ரூ.18,000
வட்டி விகிதம் - 7.1%
மொத்த முதலீட்டு காலம் - 35 வருடம்
மொத்த முதலீட்டு தொகை - ரூ.6.3 லட்சம்
மொத்த வட்டி விகிதம் - ரூ.20.93 லட்சம்
முதிர்வுக்கு பிறகு - ரூ.27.23 லட்சம் கிடைக்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+