இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டு உள்ளிட்ட பல்வேறு முதலீடு திட்டங்களும் சிறுக சிறுக பணம் சேர்த்து வைத்து செல்வத்தை உருவாக்குவதற்கான ஒரு வாய்ப்பினை நமக்கு வழங்குகின்றன. நமக்கு வரக்கூடிய வருமானத்தில் ஒரு குறைந்த தொகையை படிப்படியாக முதலீடு செய்து அந்த முதலீட்டை தொடர்ந்து வரும் போது நமக்கு அவை பெரிய அளவில காம்பவுண்டிங் முறையில் வளர்ச்சி அடைந்து லாபத்தை தருகின்றன.
அந்த வகையில் மாதம் தோறும் 10000 ரூபாயை முதலீடு செய்தால் 10 ஆண்டுகளில் எவ்வளவு கிடைக்கும் 1 கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பை எட்ட எத்தனை ஆண்டுகள் தேவைப்படும் என்பதை தற்போது தெரிந்து கொள்ள போகிறோம். எஸ் ஐபி கால்குலேட்டர்கள் ஆன்லைனில் இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் நம் முதலீட்டையும் முதலீட்டு ஆண்டுகளையும் உள்ளீடு செய்தாலே நமக்கு தெரிந்து விடும்.

மாதம் 10,000 ரூபாய் எஸ்ஐபி முதலீடு செய்கிறீர்கள் அது ஆண்டுக்கு சராசரியாக 12% வளர்ச்சி அடைய கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டு என வைத்து கொள்வோம். அப்படி என்றால் 10 ஆண்டுகளில் நீங்கள் செய்த முதலீடு 12 லட்சம், உங்களுக்கு கிடைக்கும் மொத்த பணம் 22 லட்சம் . இதுவே 10,000 ரூபாய் முதலீட்டை 21 ஆண்டுகளுக்கு தொடர்ந்தால் நீங்கள் செய்த முதலீடு 25.20 லட்சம் , உங்களுக்கு கிடைக்கும் மொத்த பணம் 1 கோடி ரூபாய்.
அதாவது மாதம் 10000 ரூபாய் எஸ் ஐபி முறை முதலீட்டில் நீங்கள் 21 ஆண்டுகள் முதலீடு செய்தால் ரூ.1 கோடி என்பதே சாத்தியம். 10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வேண்டும் என்றால் மாதம் 45,000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
உங்கள் சம்பளத்தை மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் என்ன நடக்கும்? ஆச்சரியமான லாபத்தை பாருங்கள்!
இதுவே தொடக்கத்தில் 10,000 ரூபாய் முதலீடு செய்துவிட்டு ஆண்டு தோறும் ஸ்டெப் அப் முறையில் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். அதாவது ஆண்டு தோறும் 15% என முதலீட்டை அதிகரித்தால் 15 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் கிடைத்துவிடும்.
முதலில் 10000 ரூபாய் முதலீடு செய்யும் போது 5 ஆயிரம் மற்றும் 5 ஆயிரம் என அதை பிரித்து முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்கின்றனர். அதாவது ஒரு ஈகிவிட்டி ஃபண்ட் என மார்க்கெட்டுக்கு நிகரான லாபம் தரக்கூடிய ஒரு ஃபண்டையும் ஒரு மல்டி கேப் போன்ற ஒரு ஃபண்டையும் தேர்வு செய்து முதலீடு செய்யலாம் என அறிவுரை வழங்குகின்றனர்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications