பலரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து தங்களுடைய லாபத்தை அதிகரிக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அப்படி 20 ஆண்டுகளில் 5 கோடி ரூபாய் வருமானம் பெற வேண்டும் என்றால் எந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம். 12 முதல் 15 ஆண்டுகள் வரை நீண்ட காலத்தில் அதிக வருமானம் தரும் சில மியூச்சுவல் ஃபண்டுகள் குறித்து பஜாஜ் கேப்பிட்டலின் ஜே.டி. தலைவர் மற்றும் MD-யான சஞ்சீவ் பஜாஜ் கூறியுள்ளார்.
சஞ்சீவ் பஜாஜின் கூற்றுப்படி, "முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டு எல்லை, ஆபத்தை தாங்கும் திறன் மற்றும் தங்களுடைய இலக்கு ஆகியவற்றை புரிந்து கொண்டு தான் முதலீடு செய்ய வேண்டும். உங்களுடைய முதலீடு பெரியதாகவும் ஆபத்தை தாங்கும் திறன் அதிகமாகவும் இருந்தால் ஈக்விட்டி சார்ந்த போர்ட்போலியோவில் முதலீடு செய்யலாம். அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் ரூ.5 கோடி உருவாக்குவதே டார்கெட் என்றால் பிரித்து பிரித்து முதலீடு செய்யலாம்.

ரூ.5 கோடி உருவாக்க விரும்பினால் அடுத்த 20 ஆண்டுகளுக்கு 50,000 ரூபாய்க்கான மாதாந்திர SIP முதலீட்டை தொடங்கலாம். இதற்கு 12 சதவீத வருடாந்திர வருமானம் கிடைக்கிறது என்று வைத்துக் கொண்டால் விரைவில் ரூ.5 கோடி என்ற இலக்கை அடைந்து விடலாம். அதோடு டாப் அப் SIP-ஐ கருத்தில் கொண்டால் இன்னும் விரைவாக இலக்கை அடைய முடியும்.
டாப் அப் SIP என்பது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் முதலீட்டை அதிகப்படுத்துவது. உதாரணமாக முதல் வருடம் ரூ.50,000 என்றால் மறு வருடம் 10% அதிகரித்து முதலீடு செய்ய வேண்டும். இதுபோல ஒவ்வொரு வருடமும் முதலீட்டைப் 10 சதவீதம் அதிகரிக்க இலக்கை சீக்கிரம் அடைந்து விடலாம்.
எந்த ஃபண்டுகளில் முதலீடு செய்யலாம்?: நீங்கள் உங்கள் எஸ்ஐபி தொகையை கோட்டக் மல்டி கேப் ஃபண்டு, நிப்பான் இந்தியா மல்டி கேப் ஃபண்டு, மோதிலால் ஓஸ்வால் மிட் கேப் ஃபண்டு, நிப்பான் இந்தியா கிரோத் ஃபண்டு, HDFC ப்ளக்சி கேப் பண்டு, மோதிலால் ஓஸ்வால் ப்ளக்சி கேப் பண்டு, பந்தன் ஸ்மால் கேப் ஃபண்டு ஆகியவற்றில் சமமாக பிரித்து முதலீடு செய்யலாம்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் 20 ஆண்டுகளில் ரூ.5 கோடி திரட்டுவதற்கான ஐடியா மட்டுமே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் மட்டும் முதலீடு செய்யுங்கள்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications