நடுத்தர வர்க்கத்தினருக்கு தங்களுடைய வாழ்க்கையில் திருமணம், அவர்களுடைய குழந்தைகளின் கல்விச் செலவு, குடும்பச் செலவுகள் கடைசியாக ஒரு வீடு என இதைச் சுற்றி மட்டுமே தான் சிந்தனை இருக்கும். இதெல்லாம் முடிவதற்குள் முதுமை வந்துவிடும். பல வீடுகளின் கதை இதுதான். இதை நீங்கள் நம்பவில்லை என்றால் உங்களை சுற்றி இருக்கும் நபர்களை மட்டுமே சற்று சிந்தித்துப் பாருங்கள். கண்டிப்பாக 2 பேராவது இதே போல இருப்பார்கள். சிலர் வீடு கட்டுவதற்கு ஹோம் லோன்களை நம்பி இருந்தாலும் அவற்றுக்கு EMI கட்டியே வாழ்நாள் முழுவதும் செலவாகிவிடும். இதனால் கடன் வாங்கலாமா? வேண்டாமா? என யோசித்துக் கொண்டே இருப்பார்கள்.
பிளாட் வாங்கி வீடு கட்டுவது இன்னும் சிரமம். இதனால் தான் பெரும்பாலானோர் அடுக்குமாடி குடியிருப்புகளில் பிளாட் வாங்க விரும்புகின்றனர். அதிலும் சில சிரமங்கள் இருக்கத்தான் செய்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பிளாட்களின் மதிப்பு குறைந்து வருவதாக சில நிபுணர்கள் கருதுகின்றனர். இது போன்ற சமயங்களில் ஒரு சிறிய யோசனையை பின்பற்றினால் 10 வருடங்கள் கழித்து கடன் வாங்காமலேயே வீடு வாங்கலாம். அது எப்படி என்பதை இந்த பதிவில் விரிவாக பார்ப்போம்.

நீங்கள் வாங்க விரும்பும் பிளாட் ரூ.50 லட்சம் என்று வைத்துக் கொள்வோம். முன்பணமாக ரூ.10 லட்ச ரூபாயை செலுத்த நீங்கள் தயாராக இருந்தால் இன்னும் 40 லட்சம் மட்டுமே கடன் வாங்க வேண்டும். அதற்கு பதிலாக முதலில் மியூச்சுவல் ஃபண்டுகளில் ரூ.10 லட்சத்தை ஒரே நேரத்தில் முதலீடு செய்யுங்கள்.
இது ஆண்டுக்கு 15 சதவீத வட்டி விகிதத்தில் 10 வருடங்கள் முதலீடு செய்தால் சுமார் ரூ.40 லட்சம் வருமானம் கிடைக்கும். அதுவே 40 லட்சம் கடன் வாங்கி வீடு வாங்கினால் 20 ஆண்டுகளுக்கு தொடர்ந்து EMI செலுத்த வேண்டும். அதாவது 9 சதவீத வட்டி விகிதத்தில் மாதம் 36,000 ரூபாயை EMI-யாக செலுத்தியாக வேண்டும். மாறாக அதே தொகையை சேமிக்க தொடங்குகிறீர்கள்? என்றால் எந்தவித EMI தொகையும் செலுத்தாமல் உங்கள் சொந்த பணத்திலேயே வீடு வாங்கலாம்.
எனவே உங்கள் ஆரம்ப சேமிப்பான ரூ.10 லட்சத்தை மொத்தமாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதன் மூலம் 10 ஆண்டுகள் கழித்து ரூ.40 லட்சம் வரை வருமானம் கிடைக்கும். அதே போல EMI செலுத்துவதாக நினைத்துக் கொண்டு மாதம் 26,000 ரூபாயை முதலீடு செய்து வந்தால் மொத்தமாக ரூ.68 லட்சம் ரூபாய் வரை 10 ஆண்டுகள் கழித்து பெற்றுக் கொள்ளலாம்.
அப்படியானால் உங்கள் கையில் மொத்தமாக 10 லட்சத்தை முதலீடு செய்ததற்காக கிடைத்த ரூ.40 லட்சமும் மாதம் ரூ.26,000 ரூபாயை முதலீடு செய்ததற்காக கிடைத்த ரூ.68 லட்சமும் சேர்த்து 1.08 கோடி ரூபாய் இருக்கும். நீங்கள் நினைக்கலாம் பிளாட்டின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
10 வருடங்களுக்கு முன்பு ரூ.50 லட்சம் ரூபாயாக இருந்த பிளாட் அதே விலையில் தொடருமா? என்று. இது உண்மைதான் ரியல் எஸ்டேட் ஏற்றத்திற்கு ஏற்ப அவற்றின் மதிப்பு 10 ஆண்டுகளுக்குப் பிறகு கண்டிப்பாக உயரத்தான் செய்யும். இப்போது 50 லட்சத்தில் இருக்கும் வீடு இன்னும் 10 ஆண்டுகளில் 1 கோடிக்கு விலை போகும் என்பதில் சந்தேகமே இல்லை. இருப்பினும் 10 ஆண்டுகள் பிறகு நீங்கள் 1 கோடி ரூபாய்க்கு மேல் சேமித்திருப்பீர்கள். அதனால் பிரச்சனை இல்லாமல் பிளாட் வாங்கிக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள். கடன் வாங்காமலேயே சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற கனவை நினைவாக்க இந்த வழியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரி விதிப்பு: மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் வரிக்கு உட்பட்டவை ஒரு வருடத்திற்கு 1.25 லட்சத்திற்கும் மேல் வருடாந்திர வருமானம் ஈட்டும் பட்சத்தில் அதற்கு வரி விதிக்கப்படும்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் அனைத்தும் கடன் வாங்காமல் மியூச்சுவல் ஃபண்ட் மூலம் எப்படி வீடு வாங்குவது? என்பதற்கான ஐடியா மட்டுமே. இதனை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகளை எடுக்கச் சொல்லவில்லை. மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. நீங்கள் செய்யும் முதலீடு இந்த லாபத்தை அடையவும் வாய்ப்பு உள்ளது அதே நேரத்தில் லாபம் இல்லாமல் போவதற்கும் வாய்ப்புள்ளது. எனவே எந்த ஒரு முதலீட்டு முடிவும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications