தற்போது இருக்கக்கூடிய இந்திய குடும்பங்களில் பெரும்பாலான இளம் தம்பதிகள் இருவருமே வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கிறார்கள். இவர்களின் பலரும் தங்களுடைய ஓய்வு காலத்திற்கு என திட்டமிட்டு முதலீடு செய்ய வேண்டும் எனவும் சிந்திக்க தொடங்கி இருக்கின்றனர்.
நிதி திட்டமிடல் தொடர்பான விழிப்புணர்வு தற்போதுள்ள இளம் தலைமுறையினர் மத்தியில் அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம். பொதுவாக இவ்வாறு ஓய்வு காலத்திற்கு என திட்டமிடும்போது குறிப்பிட்ட சில விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சரியான முறையில் திட்டமிட்டு ஓய்வு காலத்திற்கு என பணத்தை முதலீடு செய்து வைத்தால் நிச்சயம் நம்முடைய ஓய்வு கால வாழ்க்கை என்பது சிறப்பானதாக இருக்கும். முதலில் ஓய்வு காலத்திற்கு என எவ்வளவு தொகை நமக்கு தேவைப்படுகிறது என்பதை கணக்கீடு செய்வது அவசியம் .

மாத செலவு : முதலில் உங்களுடைய வீட்டில் மாதம் எவ்வளவு செலவாகிறது என்பதை கணக்கிட வேண்டும். வீட்டிற்க்கான மளிகை பொருட்கள் ,பல்வேறு பில்கள், போக்குவரத்து செலவு மற்றும் வாழ்க்கைச் செலவுகள் உள்ளிட்டாவற்றைக் கொண்டு உதாரணமாக மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என வைத்துக் கொள்வோம் . தற்போது உங்களுடைய குழந்தைகள் வளரும் நிலையில் பள்ளி கல்வி கட்டண செலவுகள் இருக்கும் ஆனால் உங்களுக்கு நீங்கள் ஓய்வு பெறும்போது குழந்தைகள் வளர்ந்து ஆளாகி இருப்பார்கள் சுயமாக சம்பாதிக்க தொடங்கி இருப்பார்கள் ஆனால் அதே சமயத்தில் உங்களுக்கு மருத்துவ செலவினங்கள் அதிகரித்திருக்கும். அப்போது உங்களுக்கு வருமானமும் இருக்கிறது. எனவே இதையெல்லாம் கொண்டுதான் நாம் மாதந்தோறும் எவ்வளவு பணம் செலவாகிறது என்பதை முடிவெடுக்க வேண்டும் .
பணவீக்கம்: தற்போது ஒரு குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் செலவாகிறது பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே நிலைமை இருந்திருக்குமா என்றால் நிச்சயம் கிடையாது. இதில் பாதி தொகையை மட்டுமே செலவு செய்திருப்பார்கள். இன்னும் 20 ஆண்டுகளுக்கு நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள் எனும் போது இந்த 50,000 ரூபாய் அப்போது உங்களுக்கு போதாது.
ஏனெனில் இந்தியாவில் பணவீக்க விகிதம் சராசரியாக 6 சதவீதமாக கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் இது இரண்டு மடங்கு ஆகிறது என சொல்லப்படுகிறது. 20 ஆண்டுகள் கழித்து நீங்கள் ஓய்வு பெறுகிறீர்கள் என்றால் உங்களுடைய மாதாந்திர செலவினும் 1.6 லட்சம் ரூபாய்.அதாவது இப்போது 50,000 ரூபாயில் நீங்கள் வாழக்கூடிய வாழ்க்கையை 20 ஆண்டுகள் கழித்து மாதம் 1.6 லட்சம் ரூபாய் இருந்தால் தான் வாழ முடியும்.
ஓய்வுகாலத்தில் எவ்வளவு பணம் தேவை: ஓய்வு காலத்தில் நீங்கள் ஒரு மாதத்திற்கு 1.6 லட்சம் ரூபாய் செலவு செய்கிறீர்கள் என்றால் ஓராண்டுக்கு உங்களுக்கு சராசரியாக 20 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது . இந்த 20 லட்சம் ரூபாயை 25 ஆண்டுகளுக்கு என பெருக்கிக் கொள்ள வேண்டும் . அப்படி என்றால் ஐந்து கோடி ரூபாய் அதாவது உங்கள் ஓய்வு காலத்தில் நீங்கள் தற்போது இருக்கும் ஒரு வாழ்க்கை முறையை ஓய்வு காலத்தில் வாழ வேண்டும் என்றால் உங்களுக்கு கட்டாயம் ஐந்து கோடி ரூபாய் நிதி தொகுப்பு தேவை .
முதலீடு: எனவே தற்போது முதலே ஒரு கணிசமான தொகையை முதலீடு செய்ய தொடங்குங்கள் . அந்த முதலீடு காம்பவுண்டிங் முறையில் வளரக்கூடிய முதலீடாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் 30 வயது ஆகக்கூடிய நபர் மாதம் 25 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்தால் அடுத்த 30 ஆண்டுகளில் இந்த ஐந்து கோடி ரூபாய் என்ற பணத்தை எட்டி விட முடியும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!



Click it and Unblock the Notifications