EPF தொழிலாளர் வைப்பு நிதி திட்டம், இதில் ஒவ்வொரு மாதமும் தொழிலாளர்களின் பங்கு மற்றும் அவர்கள் வேலை செய்யும் நிறுவனத்தின் பங்கு என முதலீடு செய்யப்படுகிறது. பொதுவாக ஒருவரது அடிப்படை ஊதியத்தில் 12% ஈபிஎஃப் பணமாக பிடித்தம் செய்யப்படுகிறது.
அதேபோல உங்களை பணிக்கு அமர்த்திய நிறுவனமும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஈபிஎஃப்-இல் உங்களது பெயரில் போடுகிறது. இந்த இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் பணத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையானது பிஎஃப் கான்ட்ரிபியூஷன் மற்றும் குறிப்பிட்ட தொகையானது ஓய்வு காலத்துக்கான பங்காக அதாவது எம்ப்ளாயி பென்ஷன் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படுகிறது. தற்போது இபிஎப் பேலன்ஸை ஆன்லைனில் எப்படி சரி பார்ப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

EPFO தளத்தில்: உங்களின் ஈபிஎஃப் பேலன்ஸை சரி பார்க்க, EPFO Member Passbook என்ற அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்ல வேண்டும். அங்கே உங்களின் UAN எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும். இந்த எண் உங்களின் பே சிலிப்பில் இடம்பெற்றிருக்கும். இதனை அடுத்து பாஸ்வேர்டை உள்ளீடு செய்து சைன் இன் செய்யலாம். பின்னர் நீங்கள் பிஎஃப் கணக்கின் மீது கிளிக் செய்து, அதில் View PF Passbook என்பதை கிளிக் செய்தால் உங்களது பேலன்ஸ் தெரிந்துவிடும்.
உமாங் செயலி (Umang App): உமாங் செயலி மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஒரு செயலி ஆகும். பொதுமக்கள் அரசு துறை சம்பந்தமான சேவைகளுக்கு எளிதான முறையில் இந்த செயலியை பயன்படுத்தலாம். முதலில் உமாங் செயலியை பதவிறக்கம் செய்யுங்கள். அதில் EPFO என்பதை தேர்வு செய்யுங்கள். அடுத்ததாக உங்களின் UAN எண் மற்றும் பாஸ்வேர்டை உள்ளீடு செய்து சைன் இன் செய்யவும். இப்போது உங்களின் ஈபிஎஃப் பேலன்ஸ் மற்றும் பிற தகவல்களை காணலாம்.
எஸ்.எம்.எஸ்.(SMS ) : உங்களது UAN எண் , இணைக்கப்பட்ட மொபைல் எண் உங்களிடம் இருக்கிறது எனில், அதில் இருந்து எஸ்.எம்.எஸ் அனுப்புதன் மூலம் பேலன்ஸ் குறித்த தகவலை அறியலாம். உங்கள் மொபைல் எண்ணில் இருந்து 7738299899 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பிய உடன் பேலன்ஸ் விவரங்கள் தெரிந்துவிடும்.
மிஸ்டு கால்: உங்களது UAN எண், இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து, மிஸ்டு கால் அனுப்புவதன் மூலம் உங்களின் பிஎஃப் பேலன்ஸை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். 011-22901406 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுங்கள். உடனே உங்களின் கணக்கிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் வந்துவிடும், அதில் பிஎஃப் பேலன்ஸ் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications