நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வாடிக்கையாளர்களுக்கு தங்களது சேவையினை எளிதாக்கும் வகையில் பல சேவைகளை அளித்து வருகிறது.
அதிலும் தற்போது தனியார் வங்கிகள் கூட ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் போட்டி போட முடியாமல் தவித்து வருகின்றன.

அந்த வகையில் இன்று நாம் பார்க்கவிருப்பது எஸ்பிஐ-யில் எப்படி உங்களது பேலன்ஸினை தெரிந்து கொள்ளலாம். அதிலும் இண்டர்நெட்டினை பயன்படுத்தாமல் எப்படி தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் அதனை பற்றித் தான் பார்க்க இருக்கிறோம்.
எஸ்பிஐ சேமிப்பு கணக்கு அல்லது வேறு எந்த வகையான கணக்கு வைத்திருந்தாலும், ஒரு மிஸ்ட் கால் மூலம் தங்களது வங்கி கணக்கில் உள்ள இருப்பு தொகையை சரிபார்த்துக் கொள்ளலாம். எஸ்பிஐ-யின் balance inquiry number 09223766666 மூலம் எஸ்பிஐ வங்கி கணக்கு வைத்திருப்பவர் mini statement மற்றும் கணக்கு தொடர்பான இதர விவரங்களையும் அறிந்து கொள்ள முடியும்.
SBI Quick app
எஸ்பிஐ-யின் SBI Quick app மூலமாக நாம் இணைய வங்கியினை பயன்படுத்தாமலேயே வங்கி இருப்பு தொகையினை தெரிந்து கொள்ள முடியும். இந்த சேவையினை பயன்படுத்த எஸ்பிஐ-யில் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரினை மட்டுமே பயன்படுத்த முடியும்.
உங்களது ஸ்மார்ட்போனில் SBI Quick ஆப்பை பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்த பின்பு லாகின் செய்து கொள்ளவும். இந்த SBI Quick ஆப்பில் உள்ள வசதிகளை பயன்படுத்த இணைய சேவை தேவை இல்லை. ஏனென்றால் அனைத்து விவரங்களையும் ஒரு மிஸ்டு கால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
SBI SMS Banking and mobile services
இந்த சேவையினை பயன்படுத்திக் கொள்ள எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அவர்களது வங்கிக் கணக்கினை கொடுத்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனை வாடிக்கையாளர்கள் REG Account number 09223488888 என்ற எண்ணிற்கு அனுப்ப வேண்டும். உதாரணத்திற்கு REG என டைப் செய்து, அதனை தொடர்ந்து உங்களது வங்கி கணக்கு எண்ணினை டைப் செய்து 1234566788980 அனுப்ப வேண்டும். அதாவது REG 1234566788980 என்று அனுப்ப வேண்டும். இதன் பிறகு உங்களுக்கு கன்பர்மேஷன் செய்தியொன்று கிடைக்கும்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications