Home loan:நம்மில் பலருக்கும் சொந்த வீடு என்பது வாழ் நாள் கனவாகவே இருக்கும். இந்த கனவு நனவாக மிக முக்கிய தேவையாக இருப்பது வங்கிக் கடன் தான். இதன் மூலம் வீட்டுக் கனவு என்பது நிறைவேறினாலும், இதனாலேயே பல பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.
குறிப்பாக கடனை திரும்ப செலுத்தும் காலம் என்பது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதோடு மாத மாதம் எவ்வளவு தொகை? எவ்வளவு வட்டி என பலவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மலிவு கட்டணமா: பொதுவாக கடன் காலத்தினை தேர்வு செய்யும் முன்னர் உங்களின் நிதி ஸ்திரத்தன்மை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் திருப்பி செலுத்த முடியாத கடனை வாங்கவே கூடாது. கடன் காலத்தை தேர்தெடுப்பதற்கு முன், உங்கள் தற்போதைய வருமானம் மற்றும் ஏற்கனவே நிதிக் கடமைகளை கருத்தில் கொள்ள வேண்டும்.
வட்டி விகிதம்: கவனிக்க வேண்டிய இரண்டாவது காரணி வட்டி விகிதம். இது கடனுக்கு கடன் வேறுபடும். குறிப்பாக வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மாறுபடலாம்.

ரிஸ்க்: கடன் காலத்தை தேர்வு செய்யும்போது உங்களது ரிஸ்க் நிர்வாகத்தினையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உங்கள் கடனுக்கான கால அவகாசம் என்பது நினைவில் கொள்ள வேண்டும். ஆக உங்கள் ரிஸ்க் நிர்வாகத்திற்கு ஏற்ப கடனுக்கான காலம் தேர்வு செய்யப்பட வேண்டும்.
பணவீக்கம்: பணவீக்கம் என்பது கவனத்தில் கொள்ள வேண்டிய 4வது காரணியாகும். இது காலப்போக்கில் பொருட்கள் விலையில் அதிகரிப்[பினை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக பணத்தின் மதிப்பினை குறைக்கலாம். ஆக கடனுக்கான கால அவகாசத்தினை தேர்வு செய்வது அவசியமான ஒன்றாகும்.
வரிச் சலுகைகள்: கடன் காலத்தை தேர்தெடுக்கும்போது கருத்தில் கொள்ள வேண்டியது வரி சலுகை. வீட்டுக் கடனுக்கான வட்டி செலுத்துதலுக்கு வரி சலுகை கிடைக்கலாம். இது கால அளவை பொறுத்தது. ஆக வரி சலுகையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியமானது.

கடனை திரும்ப செலுத்தவில்லை எனில்: நீங்கள் சரியான சமயத்தில் உங்கள் கடனை திரும்ப செலுத்தவில்லை எனில், அது இன்னும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தலாம். ஆக கடனுக்கான திரும்ப செலுத்தும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அதனை சரியான முறையில் தேர்வு செய்ய வேண்டியது அவசிமான ஒன்று.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications