இது டெக்னாலஜியின் காலம். இந்தியா என்கிற நாட்டை இன்று உலக நாடுகள் எல்லாம் வாயைப் பிழந்து கொண்டு பார்க்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம், இந்தியா டெக்னாலஜி மூலம் தன்னை வளர்த்துக் கொண்டது தான்.
இன்று உலகின் டாப் டெக்னாலஜி கம்பெனிகளான கூகுள், மைக்ரோசாஃப்ட், அடோப், மாஸ்டர் கார்ட் போன்ற நிறுவனங்களின் மிகப் பெரிய பதவிகளில் கூட இந்தியர்கள் இருக்கிறார்கள்.
இப்படி டெக்னாலஜி ஒரு பக்கம் அசுரத் தனமாக வளர்ந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில் தான், டிஜிட்டல் சம்பந்தப்பட்ட திருட்டுகளும் அதிகமாக நடந்து கொண்டு இருக்கின்றன.
வங்கி & நிதி நிறுவனங்கள்
குறிப்பாக வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களிடம் இருந்து சில நூறு ரூபாய்கள் தொடங்கி லட்சக் கணக்கில் திருடு போனதை எல்லாம் நாம் செய்திகளில் படித்துக் கொண்டு தான் இருக்கிறோம். இந்த பிரச்சனைகளைச் சமாளிக்க, அவ்வப் போது வங்கிகளும் நிதி நிறுவனங்களும் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறார்கள்.
எஸ்பிஐ ஓடிபி ஏடிஎம்
இப்படி ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக நடக்கும் திருட்டுத்தனங்களைத் தடுக்க, எஸ்பிஐ வங்கி, கடந்த 01 ஜனவரி 2020 முதல் ஓடிபி ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளைக் கொண்டு வந்தார்கள். இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை, 10,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்கும் போது ஓடிபி வசதியைப் பயன்படுத்தித் தான் பணம் எடுக்க வேண்டி இருக்கும்.
எந்த ஏடிஎம்
இந்த ஓடிபி எண்ணைக் கொடுத்து ஏடிஎம் பணப் பரிவர்த்தனைகளைச் செய்வதை எல்லா வங்கி ஏடிஎம்-களிலும் செய்ய முடியாது. எஸ்பிஐ வங்கியின் டெபிட் கார்ட் வைத்திருப்பவர்கள், மற்ற வங்கியின் ஏடிஎம்களில் இருந்து பணம் எடுத்தால் இந்த ஓடிபி பணப் பரிவர்த்தனை வசதியைச் செயல்படுத்த முடியாது.
ஓடிபி ஏடிஎம் பணப் பரிவர்த்தனையை எப்படி செய்வது
எஸ்பிஐ வாடிக்கையாளர், எஸ்பிஐ வங்கி ஏடிஎம்-ல் 10,000 ரூபாய்க்கு மேல் பணத்தை வெளியே எடுக்க முயல்கிறார் என்றால், அவர் வங்கிக் கணக்குகளோடு இணைத்து இருக்கும் செல் எண்ணுக்கு ஒரு ஓடிபி எண் வரும். ஏடிஎம் இயந்திரத்தின் திரையில் ஓடிபியை பதிவிடச் சொல்லும். அந்த குறிப்பிட்ட இடத்தில் எஸ்பிஐ வாடிக்கையாளரின் செல் எண்ணுக்கு வந்த ஓடிபியை சரியாக பதிவு செய்தால் மட்டுமே ரொக்கப் பணம் வெளியே வரும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications