பணி ஓய்வுக் காலத்தில் எந்த கவலையும் இன்று மகிழ்ச்சியாக வாழ்வதற்கு , சம்பாதிக்கும் காலத்திலேயே முறையாக திட்டமிட்டு முதலீடு செய்திட வேண்டும். ஏனென்ன்றால் ஓய்வுக்குப் பிறகு நமக்கு வருவாய் என்பதே இருக்காது.
ஆனால் உடல் நல பிரச்னை, விலை வாசி உயர்வு என பல்வேறு செலவுகளை நாம் எதிர்கொள்ள நேரிடும். எனவே ஓய்வுக்காலத்தில் மாதம் 1 லட்சம் ரூபாய் பெற எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

20 ஆண்டுகளுக்கு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?: உதாரணத்திற்கு 40 வயதாகும் அருண் என்பவர் 60 வயதில் பணி ஓய்வை பெற இருக்கிறார். இதுவரை அவர் ஓய்வு காலத்திற்கு என எதையும் சேமிக்கவில்லை.
இன்னும் 20 ஆண்டுகளில் அவர் சேமிக்கும் பணம் அல்லது செய்யும் முதலீடு தான் அவரது ஓய்வுகாலம் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கப் போகிறது. எனவே நிபுணர்கள் பரிந்துரைப்படி 40 வயதாகும் அருண், அடுத்த 20 ஆண்டு காலத்திற்கு மாதம் 63 ஆயிரம் ரூபாயை முதலீடு செய்தால், 60 வயதிற்கு பின் அவருக்கு மாதம் 1 லட்சம் ரூபாய் கிடைக்கும்.
இப்போ ரூ.1 லட்சம் அப்போ ரூ.2.50 லட்சமாகும்: ஓய்வு காலம் என கணக்கிடும் போது பெரும்பாலானவர்கள் செய்யும் தவறு பணவீக்கத்தை பெரிதாக கவனத்தில் கொள்ளாதது தான். விலை வாசி உயர்வு, நமது அன்றாட தேவைகள் ஆகியவற்றை கொண்டு பணவீக்கத்தை 5% என கணக்கில் கொண்டால் கூட , தற்போது மாதம் 1 லட்சம் ரூபாய் செலவு ஆகிறவர்களுக்கு 20 ஆண்டுகளுக்கு பின் 2.50 லட்சமாக உயர்ந்திருக்கும்.
எனவே அருணின் உதாரணத்தில் நிபுணர்கள் பரிந்துரைப்பது என்னவெலில் மாதம் 63,000ஐ சேமிக்க வேண்டும். அதில் 40% ஐ தேசிய ஓய்வூதிய திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பது தான். மீதமுள்ள 60%ஐ மற்ற முதலீட்டு வழிகளில் முதலீடு செய்திட வேண்டும்.
முதலீட்டில் உள்ள அபாயம் மற்றும் பலன்கள் ஆகியவற்றை கணக்கீடு செய்து தான் முதலீடு செய்ய வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். SWP (Systematic Withdrawal Plan)இல் முதலீடு செய்வது சால சிறந்தது ஆகும்.
பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்யலாம்: பணவீக்கத்தை கருத்தில் கொண்டு பார்த்தால் அருண் ஓய்வு பெறும் போது அவரிடம் கார்ப்பஸாக 4.85 கோடி ரூபாய் இருக்க வேண்டும். ஏனெனில் அவரது ஓய்வூதிய நிதி திட்டத்தில் 40 % தேசிய ஓய்வூதிய திட்டத்தில் போடப்பட்டுள்ளது.
அது ஆண்டுக்கு 5 அல்லது 6%க்கு மேல் வருவாய் தராது. எனவே ஓய்வுபெற்ற பின், ஆண்டுக்கு 8%க்கும் அதிகமான வருமானத்தை திரட்டும் முதலீடு தான் எதிர்பார்த்த பணத்தை கொடுக்க முடியும். எனவே அருண் , தனது 60 % முதலீட்டை பரஸ்பர முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும். சற்று அதிக ரிஸ்க் கொண்ட பரஸ்பர முதலீட்டு திட்டங்களை தேர்வு செய்வது எதிர்பார்த்த வருமானத்தையும் கார்ப்பஸையும் கொடுக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications