சென்னை: இந்தியாவில் அண்மைக்காலமாக மியூச்சுவல் ஃபண்டு தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் ஓய்வு காலத்திற்கு தேவையான தொகையை மியூச்சுவல் ஃபண்டு மூலம் பெறுவது எப்படி என கேள்விக்கான பதிலை இதில் காணலாம்..
ஃபின்ஹெஜ் என்ற முதலீட்டு மேலாண்மை நிறுவனத்தின் தலைவர் சிவான்ஸ் தந்துனா வெளியிட்டுள்ள தகவலின் படி, மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் எஸ்ஐபி முறையில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்பவர் 8 கோடி ரூபாய் வரை லாபமாக பெற முடியும் எனக் கூறியுள்ளார்.

அதாவது எஸ்ஐபி முறையில் 20 ஆண்டுகளுக்கு முதலீடு செய்யும் ஒரு நபர் ஒவ்வொரு ஆண்டிலும் தங்களுடைய எஸ் ஐ பி முதலீட்டினை 8% என்ற முறையில் ஸ்டெப்அப் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். இதன் மூலம் 19 ஆண்டுகால முடிவில் கணிசமான தொகையை லாபமாக பெற முடியும் என தெரிவித்துள்ளார்.
தனி நபரின் வருமானம், வயது, அவர்களின் ஆபத்து ஏற்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் பிரித்து மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் போது அதிக லாபத்தை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளார் . 20 ஆண்டு காலம் என கணக்கில் கொண்டு பார்க்கும்போது சமமான ஆபத்து கொண்ட ஒரு ஈக்விட்டி போர்ட்போலியோவை தேர்வு செய்வது நல்ல லாபத்தை தரும் என பரிந்துரை செய்திருக்கிறார்.
இதற்கு லார்ஜ் கேப் ஃபண்டுகளில் 50 சதவீத முதலீட்டை மேற்கொள்ள வேண்டும் என்கிறார். நீண்ட கால அடிப்படையில் இவை நிலையான வளர்ச்சியை தர கூடும் என்பதால் 50 சதவீத முதலீடு செய்ய வேண்டும். அதேபோல 25 சதவீத தொகை மிட்கேப் ஃபண்டுகளில் முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறார்.
மிட் கேப் ஃபண்டுகள் அதிக லாபத்தை தரக்கூடிய வாய்ப்பு இருப்பதால் 25 சதவீத தொகையை அதில் முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும் என கூறுகிறார். அதே போல ஸ்மால் கேப் ஃபண்டுகளில் 25 சதவீத தொகை முதலீடு செய்ய வேண்டும். இவை ஆபத்து மற்றும் ஏற்ற இறக்கங்கள் நிறைந்தவையாக இருந்தாலும் இதில் ஏதேனும் சரிவு ஏற்பட்டால் மற்ற இரண்டு ஃபண்டுகளில் கிடைக்கும் லாபங்கள் இதனை ஈடு செய்துவிடும் எனக் கூறியுள்ளார்.
இவ்வாறு மியூச்சுவல் ஃஃபண்டு திட்டங்களில் முதலீடு செய்யும் போது அடிக்கடி அவற்றின் செயல் திறனை ஆய்வு செய்து நம்முடைய இலக்கினை எட்டுவதற்கு இது போதுமானதாக இருக்கிறதா? அல்லது நமது போர்ட் போலியோவில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டு வர வேண்டுமா என்பது குறித்து முடிவெடுத்து அவ்வப்போது மாற்றங்களை செய்து வரும் போது நாம் எதிர்பார்த்த தொகையை ஓய்வு காலத்திற்கு பெற்றுவிட முடியும் என கூறுகிறார்.
Story Written by: Devika
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

எஸ்பிஐ-யின் மெகா பிளான்: மாதம் ரூ.11,000 கியாரண்டி வருமானம்! முதலீடு எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தைய விடுங்க பிட்காயின் முதலீட்டாளர்கள் நிலைமை இன்னும் மோசம்..! ஈரான் போர் யாரையும் விட்டு வைக்கல..!

வேலைக்கு போகாமலே மாதம் ரூ50,000 - 1 லட்சம் வரை பாசிவ் வருமானம் வேண்டுமா? எப்படி சாத்தியம்?

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் வட்டி உயர்த்தப்படுகிறதா? மக்களவையில் முக்கிய தகவலை வெளியிட்ட அரசு…!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!



Click it and Unblock the Notifications