நம்மில் பலர் காலை 9 முதல் மாலை 5 மணி வரை செய்யக்கூடிய வேலையை பார்த்துக் கொண்டிருப்போம். அப்படி உழைக்கும் நபர்களுக்கு மாத மாதம் குறிப்பிட்ட தொகை வருமானமாக கிடைக்கும். ஆனாலும் உங்களுடைய அதிகபட்ச செலவுக்காக கூடுதல் வருமானத்தை பெற விரும்புகிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்காகத்தான். கூடுதல் வருமானத்தை பெற முழு நேரமும் வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது. நீங்கள் வேலை பார்த்து முடித்த பிறகு இருக்கும் மீதி நேரத்தை பயன்படுத்தி உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.
"Passive Income" என்று சொல்லப்படுகிற கூடுதல் வருமானம் பெற பல்வேறு வேலைகளை செய்யலாம். மாத வருமானத்தோடு சேர்த்து கூடுதல் வருமானம் கிடைக்கும் பட்சத்தில் நிதி நிர்வாகத்தை திறம்பட கையாள முடியும். அது மட்டும் இன்றி சேமிக்கவும் கூடுதல் தொகை கிடைக்கும்.

உங்களுடைய திறமையை தெரிந்து கொள்ளுங்கள்: உங்களுடைய திறமை மற்றும் ஸ்கில்ஸ் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான திறமைகள் இருக்கும். சிலருக்கு கன்டென்ட் எழுதுவது பிடிக்கும். சிலருக்கு டான்ஸ் ஆடுவது பாடல் பாடுவது பிடிக்கும். சிலருக்கு கோடிங் எழுதுவதில் ஆர்வம் இருக்கும். இது போன்ற உங்களுடைய திறமை மற்றும் ஸ்கில் செட் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். இதன் மூலம் வீட்டிலிருந்தே மீதமுள்ள நேரங்களில் செய்யக்கூடிய வேலைகளைச் செய்யலாம். உதாரணமாக Fiverr, Upwork மற்றும் Freelancer போன்ற இணையதளங்களில் பகுதி நேரமாக வேலை செய்யலாம்.
இந்த தளங்களில் வேலை செய்வதன் மூலம் பகுதி நேரமாக வேலை பார்த்து 500 முதல் 1000 ரூபாய் வரை சம்பாதிக்க முடியும். ஆனால் அதற்கு தகுந்தார் போல் இருக்கும் வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
கன்டென்ட் கிரியேஷன்: சோசியல் மீடியா தளங்களின் ஆதிக்கம் தற்போது அதிகரித்து விட்டன. இதன் வழியாக நீங்களும் கன்டென்ட் கிரியேட்டராகலாம். உங்களுடைய கன்டென்ட் ஒரு குறிப்பிட்ட பார்வையாளர்களை கவரும் வகையில் இருந்தால் படிப்படியாக உங்களுக்கு பாலோவர்ஸ் அதிகரிக்கும். இதன் மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும். உதாரணமாக உங்களுக்கு மோட்டிவேஷன் தொடர்பான கன்டென்டுகளை சிறந்த முறையில் பதிவிட முடியும் என்றால்.. இது போன்ற வீடியோக்களை விரும்பி பார்க்கும் ஃபேன் பேஸை உருவாக்க முடியும். சிலருக்கு குக்கிங் டிப்ஸ் கொடுக்க தெரியும், சிலருக்கு நிதி சார்ந்த விஷயங்களை பிறருக்கு எளிதில் புரியும் வகையில் சொல்லத் தெரியும். உங்களுக்கு இதுபோன்ற விஷயங்களில் ஆர்வம் இருந்தால் ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து கன்டென்ட் கிரியேஷன் செய்யலாம்.
உங்களுடைய பாலோவர்ஸ் அதிகரித்து விட்டால் பெய்டு பிரமோஷன், ஆன்லைன் செல்லிங் ஆகியவற்றையும் செய்து வருமானம் ஈட்ட முடியும்.
அஃபிலியேட் மார்க்கெட்டிங்: கூடுதல் வருமானம் பெற வேண்டும் என்று நினைத்தால் அஃபிலியேட் மார்க்கெட்டிங் செய்யலாம். இதனை எந்தவித இ-காமர்ஸ் தளங்களின் மூலமாக வேண்டுமானாலும் செய்ய முடியும். அதற்கு நீங்கள் அமேசான், பிளிப்கார்ட் போன்ற தலங்களில் ஒரு அக்கவுண்ட்டை உருவாக்க வேண்டும், நீங்கள் வாடிக்கையாளராக பயன்படுத்தும் போது அவற்றிற்கு தனியாக அக்கவுண்ட் கிரியேட் செய்திருப்பீர்கள், ஆனால் அஃபிலியேட் மார்க்கெட்டராக உள்நுழையும் போது அதற்கு தனியாக அக்கவுண்ட் கிரியேட் செய்ய வேண்டும்.
சரி இதில் எப்படி பணம் சம்பாதிக்க முடியும்? என்பதைப் பார்ப்போம். ஒவ்வொரு பொருளுக்கும் லிங்க் தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். நீங்கள் அனுப்பக்கூடிய லிங்கை பயன்படுத்தி பிறர் பொருட்களை வாங்கினால்.. அதற்கு குறிப்பிட்ட சதவிகிதம் தொகை கமிஷனாக வழங்கப்படும். இது பிறர் வாங்கும் பொருட்களின் அடிப்படையில் மாறுபடும்.
எவ்வளவு கமிஷன் எந்தெந்த பொருட்களுக்கு வழங்கப்படும் என்பதை நீங்கள் அந்தந்த இ-காமெர்ஸ் தளங்களிலேயே பார்த்துக் கொள்ள முடியும். இந்த முறையை தான் பிரபல யூட்டியூபர்கள் மற்றும் கன்டென்ட் கிரியேட்டர்கள் பயன்படுத்துகின்றனர். பல நேரங்களில் இன்ஸ்டாகிராம் மற்றும் யூட்டியூப்களின் வீடியோவில் குறிப்பிட்ட பொருளில் லிங்க் இருப்பதாக பலரும் கூற கேட்டிருப்போம். இவர்களும் இதே அஃபிலியேட் மார்க்கெட்டிங்-ஐ தான் பயன்படுத்துகின்றனர். ஒரு பொருளை பார்க்கும் மக்களுக்கு பிடித்து விட்டால் அவர்கள் அனுப்பும் லிங்கின் மூலம் பொருட்களை வாங்கும் போது குறிப்பிட்ட சதவீதம் வழங்கப்படும்.
ஸ்டால் போடலாம்: கூட்டம் அதிகமாக இருக்கும் இடத்தைத் தேர்வு செய்து அங்கு ஸ்டால் தொடங்கலாம். அவற்றில் மாலை நேர தின்பண்டங்களை விற்பனை செய்யலாம். உதாரணமாக சமோசா. வடை போன்றவற்றையும் விற்கலாம். நம் நாட்டில் இது போன்ற தின்பண்டங்களுக்கு என்றுமே மவுசு குறையாது.
சூப் கடையையும் தொடங்கலாம். இதற்கெல்லாம் பெரிதாக முதலீடு தேவைப்படாது முதலில் ஸ்டால் போடுவதற்கு சற்று செலவாகலாம். அதன் பிறகு நீங்கள் குறைந்த முதலீட்டிலேயே இந்த தொழிலை செய்ய முடியும். காலை நேரங்களிலும் சூப் தொழிலை செய்ய முடியும். வாழைத்தண்டு, கீரை சூப் என மூலிகை சூப் வகைகளை காலை நேரங்களில் ஜிம்முக்கு அருகில் அல்லது வாக்கிங் செல்பவர்கள் கண்ணில் படும் வகையில் அமைத்தால்.. கண்டிப்பாக இதிலிருந்து கூடுதல் வருமானத்தை பெற முடியும்.
கோழிப் பண்ணை: கோழி வளர்ப்பு நல்ல லாபத்தை தரக்கூடிய ஒரு தொழில். இதற்கு நீங்கள் எப்பொழுதுமே அமர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றெல்லாம் கிடையாது. காலை மாலை என சுத்திகரிப்பு மற்றும் பிற விஷயங்களை மட்டும் செய்து வந்தால் கோழிப்பண்ணையின் மூலம் நல்ல லாபம் பெறலாம். இன்றும் பிராய்லர் கோழிகளை விட நாட்டுக்கோழிக்கு அதிக டிமாண்ட் உள்ளது. எனவே இதன் மூலம் ஒரு கோழிக்கு 230 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை அதன் எடையைப் பொறுத்து சம்பாதிக்க முடியும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications