சென்னை: இந்தியாவில் தற்போது பாதுகாப்பான முதலீட்டை தேடி பணத்தை முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது . என்னுடைய பணம் எனக்கு ஒரு கணிசமான அளவிலான வருமானம் தந்தால் போதும் என்னுடைய முதலுக்கு மோசம் வந்து விடக்கூடாது என சிந்தித்து முதலீடு செய்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அப்படி பாதுகாப்பான முதலீட்டை தேடுபவர்களுக்காகவே இந்திய ரிசர்வ் வங்கி வழங்கக்கூடிய மிக சிறப்பான ஒரு முதலீடு திட்டம் குறித்து நாம் தற்போது விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.
பொதுவாக நண்பர்களோ உறவினர்களோ கையில் பணம் இல்லை என வந்து கடன் கேட்டால் நாம் எப்படி கொடுப்போமோ அதேபோல அரசுக்கு நாம் கடன் கொடுக்கலாம். இதை தான் அரசு கடன் பத்திரங்கள் என அழைக்கிறோம் . இந்த முறையில் நம்முடைய பணம் பாதுகாப்பாக இருக்கும் நமக்கு வட்டி வருமானம் உத்தரவாதமாக கிடைக்கும் என்பதால் எந்த ஒரு அச்சமும் இல்லாமல் நாம் அரசுக்கு பணத்தை கடனாக கொடுக்கலாம் .

இந்த அரசு பத்திரங்கள் குறைந்த ஆபத்துக் கொண்ட முதலீட்டு வாய்ப்புகளாக இருக்கின்றன. என்னிடம் கணிசமான பணம் இருக்கிறது, ஆனால் பெரிய அளவில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை என்ற முதலீட்டாளர்களுக்கு அரசு பத்திரங்கள் ஒரு நிம்மதியான முதலீட்டு வாய்ப்புகளை தருகின்றன. குறிப்பாக ஓய்வூதியதாரர்கள் தங்களுடைய பணத்தை நம்பி அரசு பத்திரங்களில் முதலீடு செய்யலாம் .
பங்குச் சந்தைகள் போல பெரிய அளவு லாபம் இல்லை என்றாலும் உங்களுடைய முதல் அப்படியே இருக்கும் என்பது தான் இதில் இருக்கக்கூடிய மிக முக்கியமான ஒரு அம்சம். பொதுவாக அரசு ஏதேனும் நலத்திட்டங்களை செயல்படுத்துகிறது அல்லது ஏதாவது பணம் தேவைப்படுகிறது என்றால் இப்படி கடன் பத்திரங்களை வெளியிடும்.
ஆர்பிஐ மூலம் இந்த கடன் பத்திரங்கள் வெளியிட்டு நிதி திரட்டும். ஐந்தாண்டுகள் பத்து ஆண்டுகள் என ஒரு முதிர்ச்சி தேதியை கொண்டிருக்கும் நாம் ஆர்பிஐ வழியாக பணம் கொடுத்து இந்த கடன் பத்திரங்களை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் நாம் அரசுக்கு அந்த பணத்தை கடனாக கொடுக்கிறோம் . அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட அளவிலான வட்டியை நமக்கு அந்த கடன் பணத்திற்காக தரும். ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் என அந்த கடனுக்கான காலம் முடியும் போது நம்முடைய பணமும் நம் கைகளுக்கு வந்து சேர்ந்துவிடும்.
உதாரணமாக அரசு 100 ரூபாய் முக மதிப்பு கொண்டு ஒரு பத்திரத்தை வெளியிடுகிறது என்றால் நீங்கள் 97 ரூபாய்க்கு அந்த பத்திரத்தை வாங்கலாம் .இதில் மூன்று ரூபாய் உங்களுக்கு லாபம். ஏனெனில் அரசு 100 ரூபாய் கொடுத்து இந்த பத்திரத்தை திரும்ப வாங்கிக் கொள்ளும் . இத்துடன் உங்களுக்கு வட்டி வருமானமும் கிடைக்கும் .
அரசு 5 ,10 மற்றும் 20 ஆண்டுகள் என நீண்ட கால பத்திரங்களை வெளியிடுகிறது அதேபோல ஓராண்டு காலத்திற்குள் மெச்சூரிட்டியாக கூடிய பத்திரங்களையும் வெளியிடுகிறது. ஆர்பிஐ டைரக்ட் என்ற இணையதளத்திற்கு சென்றாலே நாம் எளிமையாக இந்த அரசு பத்திரங்களில் முதலீடு செய்ய முடியும்.
இதற்கு முதலில் ஆர்பிஐ டைரக்ட் இணையதளத்திற்கு செல்ல வேண்டும் . அங்கே நமக்கென ஒரு கணக்கை உருவாக்கி பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனை அடுத்து நம்முடைய அடிப்படை தகவல்கள் அனைத்தையும் உள்ளிட வேண்டும். இவ்வாறு பதிவு செய்த பிறகு தற்போது என்னென்ன அரசு பத்திரங்கள் இருக்கின்றன எவற்றையெல்லாம் வாங்க முடியும் அதன் மெச்சூரிட்டி தேதி என்ன வட்டி விகிதம் என்பன உள்ளிட்டவை பட்டியலாக காட்டும்.
அதில் உங்களுடைய நிதி இலக்குகளுக்கு ஏற்ப உங்கள் கையில் இருக்கும் பணத்திற்கு ஏற்ப நீங்கள் அரசு பத்திரங்களின் முதலீடு செய்து கொள்ளலாம். ஆர்பிஐ டைரக்ட் ரீடெய்ல் பக்கத்தில் சென்று பத்திரங்களின் நிலை கூட நீங்கள் தெரிந்து கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பத்திரங்களை செகண்ட்ரி மார்க்கெட்டுகளில் விற்று கூட பணமாக்கலாம்.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications