முதலீடு என்றாலே சிறு தொகையாக எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவர்கள் இருக்கிறார்கள் ஒரே முறையாக ஒரு கணிசமான தொகையை லம்ப்சம் முறையில் முதலீடு செய்பவர்களும் இருக்கிறார்கள். எது எப்படி இருந்தாலும் முதலீடு செய்வது என்பது எதிர்காலத்தில் நம்முடைய நிதி பாதுகாப்புக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
அந்த வகையில் நம்முடைய பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்கள் மத்தியில் பெரும்பாலும் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக காம்பவுண்டிங் முறையில் நாம் செய்யக்கூடிய முதலீடுகள் பெருமளவில் நமக்கு லாபம் ஈட்டி தருவதும் நேரடியாகவே நம்மால் பார்க்கவும் முடிகிறது . அந்த வகையில் இந்த கட்டுரையில் 6 லட்சம் ரூபாய் முதலீட்டை எப்படி 1 கோடி ரூபாயாக நம்மால் மாற்ற முடியும் என்பதை தெரிந்து கொள்ள போகிறோம் .

இதன்படி ஆண்டுக்கு 12 சதவீதம் வருமானம் தரக்கூடிய ஏதேனும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் . அதில் 6 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். இந்த முதலீடு முதல் நாளில் இருந்தே உங்களுக்கு காம்பவுண்டிங் முறையில் வளர தொடங்கிவிடும் . அந்த வகையில் பார்த்தால் உங்களுக்கு 19 ஆண்டுகளிலேயே இந்த ஆறு லட்சம் ரூபாய் என்பது 50 லட்சம் ரூபாய் என்ற அளவு உயர்ந்திருக்கும் . அதாவது உங்களுடைய 6 லட்சம் ரூபாய் 19 ஆண்டுகளில் உங்களுக்கு 45 லட்சம் ரூபாயை சம்பாதித்து கொடுத்திருக்கும்.
இதற்காக நீங்கள் எந்த ஒரு கூடுதல் பங்களிப்பும் செய்திருக்க வேண்டிய தேவையில்லை உங்கள் கையில் இருக்கும் பணத்தை சரியான ஒரு முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்தீர்கள் . அது மட்டும் தான் அடுத்த பத்தொன்பது ஆண்டு காலத்திற்கு நீங்கள் அதை மறந்து விடுங்கள். 19 ஆண்டு இறுதியில் உங்களுக்கு கிடைக்கும் தொகை 50 லட்சம் ரூபாய். ஒரு குழந்தை பிறக்கிறது எனும்போது இவ்வாறு நீங்கள் ஒரு பெரிய தொகையை முதலீடு செய்து விட்டால் அந்த குழந்தை பள்ளி படிப்பை முடித்து கல்லூரிக்கு செல்லும்போது உங்களுக்கு பெரிய உதவியாக இந்த பணம் இருக்கும்.
அடுத்ததாக எனக்கு ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும் என எண்ணுபவர்கள் இதே ஆறு லட்சம் ரூபாயை அடுத்த 25 ஆண்டு காலத்திற்கு தொடாமல் அப்படியே விட்டு விட வேண்டும். 25 ஆண்டுகளின் முடிவில் 1 கோடி ரூபாய் கிடைத்திருக்கும் அடுத்ததாக இந்த ஒரு கோடி ரூபாயை நாம் ஒன்றரை கோடி ரூபாயாக கூட மாற்றலா. 6 லட்சம் ரூபாயை ஒன்றரை கோடி ரூபாயாக கூட மாற்ற 29 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். எனவே ஆறு லட்சம் ரூபாய் முதலீடு செய்து 29 ஆண்டுகள் காத்திருந்தால் உங்கள் கையில் 1.5 கோடி ரூபாய் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications