இன்று உங்கள் கையில் ரூ.1 கோடி இருப்பதாக வைத்துக்கொள்வோம், இதை 15 சதவீதம் வருமானம் அளிக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால், அடுத்த ஐந்தே ஆண்டுகளில் உங்கள் முதலீடு 2 கோடி ரூபாய் உயர்ந்திருக்கும். இதே முதலீட்டை அடுத்த ஐந்து வருடங்களுக்குத் தொடாமல் வைத்திருந்தால் கிட்டத்தட்ட ரூ.4 கோடி கிடைக்கும்.
இதுதான் காம்போன்டிங் திட்டத்தின் மகிமை. எல்லாம் சரி தான் ஆனா அந்த முதல் 1 கோடி ரூபாயை சம்பாதிப்பது எப்படி..? எனக் கடுப்பில் நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. 4 கோடி ரூபாய் சம்பாதிக்கும் ஐடியாவை கூறிவிட்டு 1 கோடி ரூபாயை ஈட்டும் மந்திரத்தை சொல்லிக்கொடுக்காமல் போகமுடியுமா..?

ஒவ்வொரு முதலீட்டாளருக்கும் கனவு டார்கெட் எண் என்றால் அது ஒரு கோடி ரூபாய் தான். இது ஒரு மேஜிக் நம்பர், காரணம் நீங்கள் முதல் ஒரு கோடி ரூபாயை சம்பாதித்துவிட்டால் போதும், அடுத்தடுத்து பல கோடிகளை எளிதாக உங்களால் சம்பாதிக்க முடியும். குழந்தை முதல் அடி எடுத்து வைப்பது தான் தாமதமாகும், அடுத்து ஓட துவங்கிவிட்டால் பிடிக்க முடியாது. அதேபோலத் தான் முதல் 1 கோடி ரூபாய்.
முதல் ஒரு கோடி ரூபாயை சம்பாதிக்க நீங்கள் பாலோ செய்ய வேண்டியது 15x15x15 பார்மூலாவை தான். அதாவது மாதம் 15000 ரூபாய் முதலீட்டை, வருடம் 15 சதவீதம் வருமானம் கிடைக்கக் கூடிய முதலீட்டுத் திட்டத்தில், 15 வருடத்திற்கு முதலீடு செய்ய வேண்டும். இது மட்டும் செய்தாலே போதும் உங்க கையில் 1 கோடி ரூபாய் இருக்கும்.
ஆனால் இது எல்லா முதலீட்டாளர்களுக்கும், எல்லாச் சந்தை சூழ்நிலைக்கும் பொருந்துமா என்பது பெரிய கேள்விக்குறி. உங்களுடைய எஸ்ஐபி முதலீடு அடுத்த 15 வருடத்திற்கு 15 சதவீதம் என்ற நிலையான லாபம் கொடுக்க வேண்டுமாயின் உங்கள் போர்ட்போலியோ டக்கராக இருப்பது மட்டும் அல்லாமல் வலிமையாகக் கட்டமைக்க வேண்டும்.
ஸ்மால் கேப் பங்குகள் முதல் லார்ஜ் கேப் பங்குகள் வரை, தங்கம் முதல் வங்கி வைப்பு நிதி வரை ரிஸ்க் எடுக்கத் தெம்புக்கு ஏற்ப உங்கள் முதலீட்டை பன்முகத்தன்மை இருக்க வேண்டும். இதேபோல் அடுத்த 15 வருடம் அதாவது 180 மாதம் 15000 ரூபாய் முதலீடு செய்யும் வகையில் உங்களின் நிதி ஆதாரத்தை வலிமை அடைய செய்ய வேண்டும்.
நீண்ட கால முதலீடு என்பதால் ரிஸ்க் எடுப்பதைச் சமாளிக்க இளமை காலத்தில் இருந்தே முதலீடு செய்யத் துவங்குவது சரியான தேர்வாக இருக்கும். உதாரணமாக 10 லட்சம் ரூபாயை 25 வயதில் 15 சதவீத லாபம் கிடைக்கும் திட்டத்தில் முதலீடு செய்தால் 55 வயதில் 5.1 கோடி ரூபாய் கிடைக்கும் (30 வருட முதலீட்டு காலம்).
இதுவே 10 லட்சம் ரூபாயை 45 வயதில் முதலீடு செய்தால் 55 வயதில் வெறும் 40 லட்சம் ரூபாய் கிடைக்கும் (10 வருட முதலீட்டுக் காலம்).
இது முதலீட்டுத் தொகை, காலம் ஆகியவற்றை அட்ஜெஸ்ட் செய்வது மூலம் உங்கள் இலக்கை அடைய முடியும். ஆனால் நீண்ட கால முதலீடு மூலம் ரிஸ்க் பாதிப்புகள் குறைந்து எளிதாக இலக்கை அடைய முடியும்.
எஸ்ஐபி வழியில் 5 வருடத்தில் 1 கோடி ரூபாய் பெற என்ன செய்ய வேண்டும்..?
நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு 10% வட்டி வருமானம் தான் கிடைக்குமெனில் மாதம் 1.25 லட்சம் முதலீடு செய்ய வேண்டும். சரியாகச் சொல்ல வேண்டுமெனில் 128071 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதுவே 12 சதவீதமெனில் 1.20 லட்சம், 14 சதவீதமெனில் 1.15 லட்சம்.
மொத்தமாக முதலீடு (Lumpsum) செய்து 5 வருடத்தில் 1 கோடி ரூபாய் பெற என்ன செய்ய வேண்டும்..?
10% வட்டி வருமானம் எனில் 60 லட்சம் முதலீடு செய்ய வேண்டும், இதன் மூலம் 5 வருடத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்கும். இதுவே 12 சதவீதமெனில் 55 லட்சம், 14 சதவீதமெனில் 48 லட்சம் முதலீடு செய்ய வேண்டும்.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications