சென்னை: இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகள் எனப்படும் பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்தே வருகிறது. குறிப்பாக கடந்த சில ஆண்டுகளாக இந்த எண்ணிக்கை கணிசமான அளவு உயர்ந்து இருக்கிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் எஸ்ஐபி முறையில் முதலீடு செய்வது மற்றும் அதில் கிடைக்கும் லாபம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்திருப்பதே இதற்கு முக்கிய காரணம்.
பொதுவாக பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டும் என ஆர்வம் இருக்கும் ஆனால் அது பற்றிய புரிதலோ அல்லது அதற்கான நேரமோ இல்லை என்பவர்கள் தங்களது பணத்தை ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் சென்று முதலீடு செய்வார்கள்.

மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டு பங்குச்சந்தைகள், பத்திரங்கள் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வார்கள். முதலீட்டில் கைதேர்ந்த ஒரு நிதி நிர்வாக அமைப்பு கொண்ட இந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் இதில் கிடைக்கும் ஒரு லாபத்தை நமக்கு வழங்குகின்றன.
இவ்வாறு நாம் செய்யப்படும் பரிவர்த்தனைகளானது நமது கணக்கில் யூனிட்டுகளாக கணக்கீடு செய்யப்படுகிறது. நாம் முதலீட்டை திரும்ப பெற நினைக்கும் போது அன்றைய தேதியில் அந்த ஃபண்டின் ஒரு யூனிட்டின் விலை எவ்வளவோ அதற்கு ஏற்ப விற்பனை செய்யப்படுகிறது.
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை எஸ்ஐபி எனப்படும் மாதாந்திர முதலீட்டு திட்டமும் இருக்கிறது லம்ப்சம் எனப்படும் ஒரே முறை முதலீடு செய்யக்கூடிய திட்டங்களும் இருக்கின்றன. தற்போது மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களை பொறுத்தவரை வெறும் 100 ரூபாயிலிருந்து நாம் தொடங்க முடியும். அந்த வகையில் ரூ.1000 முதலீடு செய்து கோடிகளில் லாபம் பெறுவது எப்படி என்பது குறித்து பார்க்கலாம்..
உங்களுக்கு 20 வயது ஆகிறது என வைத்துக் கொள்வோம். மாதம் ரூ.1000 ஐ நீங்கள் அடுத்த 40 ஆண்டுகளுக்கு என எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறீர்கள். இதில் ரிட்டர்ன்ஸ் விகிதம் 12 % என வைத்துக் கொண்டால் 60 வயதில் உங்களுக்கு கிடைக்கும் தொகை ரூ. 1.14 கோடி ஆகும். நீங்கள் செய்த மொத்த முதலீடு 4.80 லட்சம் தான் ஆனால் உங்களுக்கு கிடைத்த தொகை ரூ.1.14 கோடி. இது காம்பவுண்டிங் முறையின் மகிமை.
20 வயதில் நீங்கள் மாதம் ரூ.1000 முதலீடு செய்து ஒவ்வொரு ஆண்டும் இதனை 10% என உயர்த்தி இருந்தால், 40 வயதிலேயே ரூ.3.50 கோடியை நீங்கள் எட்டி இருப்பீர்கள்.
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்தவரை எவ்வளவு சீக்கிரம் தொடங்குகிறீர்கள் என்பதும் முக்கியமானது. சிறிய வயதில் சிறிய தொகையில் தொடங்கினாலே உங்களுக்கு பெரிய லாபத்தை தரும். ஆண்டுதோறும் முதலீட்டை அதிகரித்தால் விரைவாக அதன் பலனை அனுபவிக்கவும் முடியும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications