போஸ்ட் ஆபீஸ் திட்டங்கள் சாமானிய மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் செய்யும் முதலீட்டை வட்டியுடன் முதிர்வு காலத்தில் பெற்றுக் கொள்ளும் வகையில் பல திட்டங்கள் இருந்தாலும்.. மாதா மாதம் வருமானம் தரும் திட்டம் தான் "போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம்". இந்தத் திட்டத்தில் மொத்தமாக ஒருமுறை முதலீடு செய்து அதன் பின் 5 ஆண்டுகள் வரை வருமானம் பெற முடியும். இந்த பதிவில் மாதம் 5000 வருமானம் பெற எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்? என்பதை விரிவாக பார்ப்போம்.
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டம் (POMIS): இந்தத் திட்டத்திற்கு தற்போது 7.4 சதவீத ஆண்டு வட்டி வழங்கப்படுகிறது. POMIS திட்டம் என்பது அரசாங்கத்தால் வழங்கப்படும் சிறு சேமிப்புத் திட்டமாகும். POMIS திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ரூ. 1,000 முதல் டெபொசிட் செய்யலாம். மேலும் அதிகபட்ச வரம்பு ஒரு கணக்கிற்கு ரூ.9 லட்சமும் கூட்டுக் கணக்குகளுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் உங்கள் விருப்பதைப் பொறுத்து முதலீடு செய்யலாம். நீங்கள் செய்யும் முதலீட்டுக்கு ஏற்ப அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு வட்டி வழங்கப்படும்.

எனவே ஒரு முறை முதலீடு செய்த பிறகு எந்தவித முதலீடும் செய்ய வேண்டியிருக்காது. போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதாவது நீங்கள் முதலீடு செய்த நாளில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களுக்கு வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு மாதமும் கணக்கு துவங்கிய நாளிலிருந்து முதிர்வு காலம் வரை வட்டி வருமானம் உங்கள் கணக்கில் செலுத்தப்படும்.
POMIS திட்டத்தின் வரிச் சலுகைகள்: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு 80சி பிரிவின் கீழ் ஒரு நிதியாண்டிற்கு 1.50 லட்சம் வரையிலான வரி சலுகைகள் கிடைக்கும். மாதம் மாதம் முதலீடு செய்ய சிரமப்படுபவர்கள் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். சில நேரங்களில் ஒத்திகை வீட்டிலிருந்து வாடகை வீட்டிற்கு மாற வேண்டிய சூழ்நிலை சிலருக்கு ஏற்படலாம். இது போன்ற நபர்கள் அந்த தொகையை இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு உங்களால் வாடகைச் செலவை சமாளிக்க முடியும்.
போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமான திட்டத்தில் ரூ.5000 வருமானம் பெற என்ன செய்ய வேண்டும்?: போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருமானத் திட்டத்திற்கு தற்போது 7.4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதன்படி இந்தத் திட்டத்தில் 8 லட்ச ரூபாயை மொத்தமாக முதலீடு செய்தால் மாதம் 4,933 ரூபாயை வருமானமாகப் பெறலாம். இது தோராயமாக 5,000 ரூபாய். அதாவது அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர்ந்து இந்த திட்டத்தின் வட்டியின் மூலம் உங்களுக்கு வருமானம் கிடைக்கும்.
முன்பே கூறியது போல் தனிநபராக இருந்தால் இந்த திட்டத்தில் 9 லட்சம் ரூபாய் வரை மொத்தமாக முதலீடு செய்யலாம். அதுவே கூட்டு கணக்காக இருந்தால் 15 லட்சம் வரை முதலீடு செய்யலாம். உங்களுடைய முதலீடு அதிகரிக்க அதிகரிக்க உங்களுடைய மாத வருமானமும் அதிகரிக்கும். எனவே 1000 ரூபாயிலிருந்து 15 லட்சம் ரூபாய் வரை எவ்வளவு தொகை உங்களால் முடியுமோ? அதை முதலீடு செய்யலாம். அதற்கு ஏற்றார் போல் மாத வருமானம் கிடைக்கும்.
இதை தெரிந்து கொள்ள நீங்கள் ஆன்லைன் கால்குலேட்டர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக இந்த திட்டத்தின் பெயரோடு கால்குலேட்டர் என்ற வார்த்தையை சேர்த்து கூகுள் செய்தால் பல ரிசல்ட் கிடைக்கும். அதில் ஏதேனும் ஒரு கால்குலேட்டரை பயன்படுத்தி சரியான வட்டி விகிதத்தை கொடுத்து நீங்கள் செய்ய இருக்கும் முதலீட்டுத் தொகையையும் என்டர் செய்து பார்த்தால் உங்களுடைய வருமானம் எவ்வளவு இருக்கும் என்பது தெரிந்து விடும்.
மேலே கூறப்பட்டுள்ள விவரங்கள் 8 லட்ச ரூபாய் முதலீட்டுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும்? என்ற விவரங்களே. இதை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எந்த ஒரு முதலீட்டு திட்டத்திலும் முதலீடு செய்வதற்கு முன்பு.. உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!



Click it and Unblock the Notifications