அஞ்சல் துறையின் RD.. மாதம் ரூ.10,000 முதலீடு.. ரூ.7 லட்சம் வரையில் வருமானம்.. எப்படி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அஞ்சல் துறையின் தொடர்வைப்புக் கணக்குக்கு ஒரு பாதுகாப்பான முதலீட்டு திட்டம், சிறுசேமிப்பு திட்டம் எனலாம். ஏனெனில் இது அஞ்சலக துறையானது மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் ஒரு அரசு அமைப்பாகும்.

 

அதோடு இன்றைய காலகட்டத்தில் முன்னணி வங்கிகள் கூட வட்டி விகிதத்தினை குறைவாகத் தான் வழங்கி வருகின்றன.

அதனுடன் ஒப்பிடும்போது அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் என்பது அதிகம் எனலாம். எளிதிலும் அணுக முடியும் என்பதால், இன்றளவிலும் அஞ்சலக திட்டங்கள் நல்லதொரு ஆப்சனாக பார்க்கப்படுகிறது.

முதலீடு செய்ய தயார்?

முதலீடு செய்ய தயார்?

அதெல்லாம் சரி அஞ்சலகத்தில் தொடர் வைப்பு நிதி கணக்கு என்றால் என்ன? இதில் யார் யார் முதலீடு செய்யலாம். நான் மாதம் 10,000 ரூபாய் முதலீடு செய்ய தயாராய் இருக்கிறேன். எனக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும். இதனை எப்படி செய்வது? தொடர் வைப்பு நிதியில் எது பெஸ்ட்? வாருங்கள் பார்க்கலாம்.

வட்டி அதிகம்

வட்டி அதிகம்

இன்றைய காலகட்டங்களில் பெண்கள் தைரியமாக நம்பிக்கையுடன் போகக் கூடிய இடங்களில் அஞ்சல் அலுவலகமும் ஒன்று. இங்கு நீங்கள் 10 ரூபாயைக் கூட சேமிக்க முடியும். மற்ற முதலீட்டு திட்டங்களான ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, தங்கம் உள்ளிட்டவற்றில் உள்ளது போன்ற ஏற்ற தாழ்வுகள் இதில் இல்லை. அதோடு 100% பாதுகாப்பானது. எல்லாவற்றிற்கும் மேலாக வட்டி விகிதம் வங்கிகளை விட அதிகம். தற்போது 5.8% வரை உள்ளது.

யார் யார் தொடங்கலாம்
 

யார் யார் தொடங்கலாம்

இந்த திட்டத்தில் குறைந்தபட்ச 100 ரூபாயில் இருந்து முதலீடு செய்து கொள்ளலாம். தபால் அலுவலக தொடர்வைப்பு நிதி கணக்கினை பெரியவர்கள் தனியாக தொடங்கிக் கொள்ளலாம். அப்படி இல்லையெனில் ஜாய்ண்ட் அக்கவுண்டாகவும் தொடங்கிக் கொள்ளலாம். இதே 10 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் இந்த கணக்கினை பாதுகாவலர் துணையுடன் தொடங்கிக் கொள்ளலாம்.

முன் கூட்டியே செலுத்தினால் சலுகை?

முன் கூட்டியே செலுத்தினால் சலுகை?

தொடர் வைப்பு நிதி திட்டத்தில் குறைந்தபட்சம் 6 மாதங்களுக்கான வைப்பு தொகையை முன் கூட்டியே செலுத்தினால் தள்ளுபடி சலுகையினை பெறலாம். குறிப்பாக 6 மாதங்கள் முதல் 11 மாதங்கள் வரையிலான தவணைகளை முன் கூட்டியே செலுத்தினால் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடி பெறலாம்.

 இதனையும் கவனியுங்கள்

இதனையும் கவனியுங்கள்

12 மாதங்களுக்கான தொகையினை முன் கூட்டியே செலுத்தினால், ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 4 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும்.

12 டொபாசிட்டுகளுக்கு பிறகு டெபாசிட் செய்யப்படும் ஒவ்வொரு 10 ரூபாய்க்கும் 1 ரூபாய் தள்ளுபடியாக கிடைக்கும். எனினும் இப்படி முன் கூட்டியே செலுத்தப்படும் தொகையானது குறிப்பிட்ட காலங்களில் செலுத்த முடியும்.

இடையில் பணம் எடுக்கலாமா?

இடையில் பணம் எடுக்கலாமா?

இந்த தொடர் வைப்பு நிதி திட்டத்தில் ஒரு வருடத்திற்கு பிறகு நிலுவையில் 50% அனுமதிக்கப்படுகிறது. அதன் பிறகும் தொடர விரும்பினால் விண்ணப்பத்தினை கொடுத்து தொடரலாம். இவ்வாறு நீட்டிக்கப்படும் கணக்கினை எப்போது வேண்டுமானாலும் முடித்துக் கொள்ளலாம். எனினும் இதன் முதிர்வு காலம் 5 வருடங்களாகும்.

கடனும் பெறலாம்

கடனும் பெறலாம்

12 தவணை தொகை செலுத்திய பிறகு அதற்கு எதிராக, நீங்கள் இந்த தொடர் வைப்பு கணக்கின் மூலம் கடன் பெற்றுக் கொள்ளலாம். இது உங்களது நிலுவையில் 50% பெற்றுக் கொள்ளலாம்.

இந்த கடனை ஒரே தவணையாகவும் அல்லது மாத தவணையாகவும் கூட செலுத்திக் கொள்ளலாம்.

இதற்கு வ

ட்டி விகிதமாக 2% + RD வட்டி விகிதமும் சேரும். ஒரு வேளை இந்த கடனை உங்களது திட்டம் முதிர்வு அடையும் வரை செலுத்தவில்லை எனில், உங்களது கணக்கில் இருந்து பிடித்தம் செய்யப்படும். இந்த கடனை நீங்கள் கணக்கு வைத்துள்ள அஞ்சல் அலுவலகத்திலேயே பெற்றுக் கொள்ளலாம்.

எவ்வளவு கிடைக்கும்?

எவ்வளவு கிடைக்கும்?

நீங்கள் மாதம் 10,000 ரூபாய் டெபாசிட் செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். வட்டி விகிதம் 5.8% என வைத்துக் கொண்டால், உங்களது முதிர்வு தொகை 6,96,967 ரூபாயாக 5 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும். டெபாசிட் 6 லட்சம் ரூபாயும், வட்டி விகிதம் 96,967 ரூபாயும் முதிர்வுக்கு பிறகு, கிட்டதட்ட 7 லட்சம் ரூபாய் வரையில் கிடைக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to earn up to Rs.7 lakh in Recurring deposit scheme; check full details here

Recurring deposit comes with a maturity period of 5 year, if you deposit Rs.10,000 monthly in this scheme, your money will increase at Rs.6,96,967
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X