சென்னை: நீண்ட கால அடிப்படையில் சொத்து சேர்க்க வேண்டும் என விரும்புபவர்கள் தற்போது பெரும்பாலும் எஸ்ஐபி முறையில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதை தான் தேர்வு செய்கின்றனர். அந்த வகையில் மாதந்தோறும் 10000 ரூபாய் முதலீடு செய்யும் ஒரு நபர் எத்தனை ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் ஒரு கோடி ரூபாய் என்ற நிதி தொகுப்பை பெற முடியும் என்பது குறித்து நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.
எஸ்ஐபி முறையில் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை நாம் மியூச்சுவல் ஃபண்டுகளில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் . இதன் மூலம் காம்பௌண்டிங் முறையில் நம்முடைய முதலீடானது பல மடங்கு உயர்கிறது. உதாரணமாக ஒரு நபர் மாதந்தோறும் 10000 ரூபாயை எஸ்ஐபி முறையில் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொண்டால்.

15 ஆண்டுகளிலேயே அவரால் ஒரு கோடி ரூபாயை எட்டி விட முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர் . 15 ஆண்டுகளில் அவர் செய்த முதலீடு 18 லட்சம், அவருக்கு கிடைத்த மொத்த நிதி 1, 00,27,601 ரூபாய் ஆகும். ஆண்டுக்கு 15 சதவீத லாபம் தரக்கூடிய ஒரு மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்து முதலீடு செய்தால் இது சாத்தியம் என தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில் நீண்ட கால அடிப்படையில் இந்தியாவில் தற்போது முன்னணியில் இருக்கும் சில மியூச்சுவல் ஃபண்டுகளை உதாரணமாக நாம் தெரிந்து கொள்ளலாம்.
எஸ்பிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் : ஆண்டுதோறும் 24.324% லாபம், 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் 1.35 கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும்
டிஎஸ்பி ஸ்மால் கேப் ஃபண்ட்: ஆண்டுதோறும் 22.33% லாபம், 15 ஆண்டுகளுக்கு மாதந்தோறும் 10,000 ரூபாய் முதலீடு செய்தால் 1.16 கோடி ரூபாய் திரும்ப கிடைக்கும்
எப்படி 1 கோடி ரூபாயை உருவாக்குவது:
முதலில் சரியான மியூச்சுவல் ஃபண்டை தேர்வு செய்ய வேண்டும்
அந்த மியூச்சுவல் ஃபண்டு கடந்த காலங்களில் எவ்வளவு வருமானம் தந்திருக்கிறது என்பதை கவனிக்க வேண்டும்
மியூச்சுவல் ஃபண்டின் எக்ஸ்பென்ஸ் ரேஷியோ என்ன அந்த மியூச்சுவல் ஃபண்ட் என்னென்ன நிறுவனங்களில் எல்லாம் முதலீடு செய்கிறது என்பதை கவனிக்க வேண்டும்
உங்களுடைய ஆபத்து ஏற்பு காரணியும் மதிப்பாய்வு செய்ய வேண்டும்
ஸ்மால் கேப் நிறுவனங்கள் அதிக லாபம் தரும் ஆனால் ஏற்ற இறக்கங்களும் அதிகமாக இருக்கும்
தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு எந்த இடையூறும் இல்லாமல் முதலீடு செய்ய வேண்டும்
ஆண்டுதோறும் எஸ்ஐபி தொகையை படிப்படியாக அதிகரித்தால் இன்னும் கூடுதலான நிதி தொகுப்பை பெற முடியும்.
15 ஆண்டுகளை நெருங்கும் போது குறைந்த ஆபத்துக் கொண்ட ஃபண்டுகளுக்கு அதிக தொகை ஒதுக்கி முதலீடு செய்ய வேண்டும்
இதையெல்லாம் சரியாக பின்பற்றினாலே 1 கோடி ரூபாய் என்ற இலக்கை எட்டி விட முடியும்.
More From GoodReturns

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications