இத்தனை காலமும் பிள்ளைகளுக்காகவும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் ஓயாமல் உழைத்து விட்டோம். கடமைகள் முடிந்து, இப்போதுதான் நமக்காக வாழப்போகும் பொற்காலம் தொடங்கியிருக்கிறது. அந்த பொற்காலத்தை எவர் உதவியுமின்றி, சுயமரியாதையுடனும் நிம்மதியுடனும் கழிக்க வேண்டும் என்பதே ஓய்வு காலத்தை எட்டும் ஒவ்வொருவரின் வாழ்நாள் கனவு.
நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்த 1 கோடி ரூபாய் என்பது வெறும் சேமிப்பு அல்ல, அது உங்கள் முதுமைக் காலத்தின் ஊன்றுகோல். 2026-ன் தற்போதைய விலைவாசி உயர்வில், அந்தப் பணத்தை பீரோவில் வெறுமனே பூட்டி வைத்திருந்தால் அதன் மதிப்பு குறையக்கூடும். ஆனால் அதை சரியாகத் திட்டமிட்டு முதலீடு செய்தால், அதுவே உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் கௌரவமான சம்பளம் போன்ற ஒரு தொகையை அள்ளிக் கொடுக்கும். அப்படி கிடைத்தால் வயதான காலகட்டத்தில் யாரிடமும் கைநீட்டி நிற்கத் தேவையில்லை என்ற நிம்மதி கிடைக்கும். அப்படி நிம்மதியை தரும் அந்த 4 மேஜிக் முதலீட்டு வழிகள் என்னென்ன? வாருங்கள் பார்க்கலாம்.

வழக்கமாக ஓய்வுக் காலத்துக்கு வங்கி வைப்பு நிதி திட்டங்கள், வருடாந்திர திட்டங்கள் போன்றவை பாதுகாப்பானவையாக பார்க்கப்படுகின்றன. ஆனால் அவற்றில் போதுமான வருமானம் கிடைப்பதில்லை. பணவீக்கம் அதிகரித்து வரும் சூழலில், அதற்கு எதிரான பாதுகாப்பு முழுவதும் கிடைப்பதில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக நீண்ட காலத்திற்கு பணத்தின் மதிப்பை தக்க வைப்பதில்லை. வங்கி வைப்பு நிதியை பொறுத்தவரை பாதுகாப்பானது. ஆனால் பணவீக்கத்திற்கு ஏற்ப வருமானம் கொடுக்காது. வருடாந்திர திட்டத்தில் ஆயுள் முழுவதும் நிலையான பென்ஷன் தொகையானது கிடைக்கும். ஆனால் பணவீக்கத்திற்கு ஏற்ப அதிகரிப்பு இருக்காது.
எஸ் டபிள்யூ பி எனப்படும் சிஸ்டமேட்டிக் வித்டிராயல் பிளான் மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து தேவைக்கேற்ப பணம் எடுக்கும் முறையாகும். இது நல்ல வருமானத்தை பெற உதவும். இதேபோன்று சயின்டிஃபிக் பே என்ற கணக்கீடுகளின் அடிப்படையில், சந்தை நிலவரத்துக்கு ஏற்ப வருமானத்தைப் பெறுவதும் புதிய உத்தியாகும். மேற்கண்ட 4 உத்திகளையும் ஒப்பிடும் நிபுணர்கள், ஆம்னி சயின்ஸ் கேபிடல் நிறுவனம் வெளியிட்டுள்ள The Science of Retirement Planning: Navigating Hidden Risks in a Long Retirement என்ற அறிக்கை, ஓய்வுக்கால முதலீட்டில் நாம் செய்யும் வழக்கமான தவறுகளையும், எதிர்கொள்ள வேண்டிய சவால்களையும் மிக நுணுக்கமாக விளக்குகிறது என சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஓய்வு பெற்றவர்கள் பெரும்பாலும் பணத்தை இழப்பதை குறித்து மட்டுமே பயப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் பயப்பட வேண்டியது இதுவல்ல. ஒன்று பணவீக்க அபாயம். விலைவாசி உயர்வால் இன்று ஒரு ரூபாய் வாங்கும் பொருளை, 10 ஆண்டுகள் கழித்து வாங்க முடியாது. பாதுகாப்பான எஃப்டி போன்ற முதலீடுகள் பணவீக்கத்தை முறியடிக்கத் தவறி விடுகின்றன. ஆக இதில் முதலீடு செய்ய திட்டமிடும் போதே கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஏர்டெல் தடாலடி சரிவு! 3 மாதங்களில் இல்லாத மிகப்பெரிய இன்ட்ராடே சரிவு! புது அவதாரம் கைகொடுக்குமா?
இரண்டாவதாக கவனத்தில் கொள்ள வேண்டிய அம்சம் நீண்ட ஆயுள் அபாயம். இன்றைய காலகட்டத்தில் மருத்துவ வசதிகள் மேம்பட்டுள்ளதால், மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. நீங்கள் சேர்த்த பணம் உங்கள் ஆயுள் முடிவதற்கு முன்பே தீர்ந்துவிடும் அபாயம் இதில் உண்டு.ஆக உங்கள் முதலீட்டு திட்டமிடலில் இதையும் கவனத்தில் கொள்ளுதல் நல்லது. மூன்றாவதாக வாழ்க்கை முறை அபாயம். ஓய்வுக்கு பிறகும் மருத்துவச் செலவுகள் மற்றும் பிற சமூக கடமைகளுக்காக வருமானம் ஆண்டுதோறும் அதிகரிக்க வேண்டியது அவசியம் உள்ளது. ஆக உங்கள் முதலீட்டில் இதையும் கருத்தில் கொண்டு திட்டமிடுதல் அவசியம். இந்த அறிக்கையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நீங்கள் வாழ்நாள் முழுவதும் வருமானம் பெறுவது மட்டுமல்லாமல், உங்களுக்குப் பிறகு நீங்கள் ஈட்டி வைத்துள்ள 1 கோடி அப்படியே அல்லது வளர்ந்து உங்கள் வாரிசுகளுக்கு சேர வேண்டும் என்கிறது. அது எஃப்டி மற்றும் வருடாந்திர திட்டத்தில் சாத்தியமில்லை. ஆனால் ஈக்விட்டி சார்ந்த சயின்டிஃபிக் பே அல்லது SWP முறைகளில், உங்கள் வருமானத்தையும் தாண்டி அசல் தொகை கோடிகளாக வளர வாய்ப்புள்ளது.
பாதுகாப்பு மட்டுமே முக்கியம் என்று நினைத்து வெறுமனே எஃப்டி-ல் மட்டும் முதலீடு செய்வது நீண்ட கால ஓய்வு காலத்திற்கு ஆபத்தானது. ஆக வருமானத்தில் ஒரு பகுதியை ஈக்விட்டி சார்ந்த திட்டங்களில் வைப்பது மட்டுமே பணவீக்கத்தை வென்று, நிம்மதியான வாழ்க்கையை உறுதி செய்யும் என்கிறது இந்த அறிக்கை.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications