வாழ்க்கையில் எப்படியாவது பணத்தை சம்பாதித்து, சேர்த்து வைத்து, ஒரு குறிப்பிட்ட தொகையுடன் செட்டிலாகிவிட வேண்டும். இது தான் உங்களது ஆசை என்றால் இந்த கட்டுரை உங்களுக்கானது தான்.
பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முறையாக திட்டமிட்டு முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் உங்களுக்கு ரூ.1 கோடி கிடைக்கும் தெரியுமா?

மத்திய அரசு வழங்கும் 100 சதவீதம் பாதுகாப்பு கொண்ட ஒரு சேமிப்பு திட்டம் தான் பொதுவருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த திட்டத்தில் 7.1% வட்டி வழங்கப்படுகிறது. இதில் முறையாக திட்டமிட்டு முதலீடு செய்தால் 25 ஆண்டுகளில் ரூ.1 கோடி முதிர்வு தொகை கிடைக்கும்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் ஒரு நாளைக்கு ரூ.416 முதலீடு செய்ய வேண்டும், அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.12,500 முதலீடு செய்ய வேண்டும். இது ஒரு வருடத்திற்கு ரூ.1,50,000 என வைத்துக் கொள்வோம்.
தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு இதே முறையில் இந்த திட்டத்தில் முதலீடு செய்தால், 15 ஆண்டுகளின் முடிவில் உங்களுக்கு முதிர்வு தொகையாக ரூ.40.68 லட்சம் கிடைக்கும். இதில் உங்களின் முதலீட்டு தொகை என்பது ரூ.22.50 லட்சம் உங்களுக்கு கிடைத்த வட்டி ரூ.18.18 லட்சம் . அரசு தற்போது வழங்கும் 7.1% வட்டி என்ற அளவில் இந்த கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வட்டி விகிதங்களை அரசு மாற்றினால் அதற்கு ஏற்ப ரிட்டன்ஸும் மாறும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். 15 ஆண்டுகள் முடிவில் உங்களிடம் 40 லட்சம் ரூபாய் இருக்கிறது. இந்த 40 லட்சம் ரூபாயை எடுக்கக் கூடாது, அதே கணக்கில் வைத்து மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் பணம் வளரும். 20 ஆண்டுகள் முடிவில் மேலும் 5 ஆண்டுகள் என நீட்டிக்க வேண்டும்.
இவ்வாறு திட்டத்தை நீட்டிக்க, முதிர்வு காலம் வருவதற்கு ஓராண்டுக்கு முன்பாகவே வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். இப்படி 25ஆவது ஆண்டின் முடிவில், முதிர்வு தொகையாக ரூ.1 கோடி உங்களுக்கு கிடைக்கும். இதில் உங்களது முதலீடு ரூ. 37.50 லட்சம் உங்களுக்கு கிடைத்த வட்டி ரூ.65.50 லட்சம்.
பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கு கிடைக்கக்கூடிய மிகப்பெரிய சலுகை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80சி-யின் கீழே கிடைக்கும் வரி விலக்காகும். ஒரு நிதியாண்டில் ரூ.1.50 லட்சம் வரை வரி விலக்கு கிடைக்கிறது. அது மட்டுமின்றி இதில் கிடைக்கும் வட்டிக்கு எந்த வரியின் செலுத்த தேவையில்லை. இது அரசின் திட்டம் என்பதால் உங்களது பணம் பாதுகாப்பாக இருக்கும் என்பது உறுதி.
Story Written by: devika
More From GoodReturns

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

EPF, NPS அல்லது PPF: நிம்மதியான ஓய்வுக் காலத்துக்கு நம்பர் 1 சாய்ஸ் எது?

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!



Click it and Unblock the Notifications