உங்க எல்ஐசி பாலிஸி மீது கடன் வாங்குவது எப்படி..? ரொம்ப ஈசி, இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!

வங்கிக் கடன்களை வாங்குவதற்கு இப்போது இன்சூரன்ஸ் பாலிஸிகள் முக்கியமான ஈடாகக் கருதப்படுகிறது. குறிப்பாக அரசு இன்சூரன்ஸ் நிறுவனமான LIC பாலிசி மீது அரசு வங்கிகள் தாராளமாகவும், விரைவாகவும் கடன் வழங்குகிறது.

எல்ஐசி தவிர பிற காப்பீடு நிறுவனங்களான ஈடல்வெய்ஸ் டோக்கியோ லைப், எச்டிஎப்சி பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா ஆகியவையும் இன்சூரன்ஸ் பாலிஸிகள் மீது கடன்களை வழங்குகின்றன. மணி பேக், எண்டோவ்மென்ட் பிளான்கள் எடுத்திருந்தால் அந்த பாலிஸிகள் மீது கடன்கள் அளிக்கப்படுகிறது.

உங்க எல்ஐசி பாலிஸி மீது கடன் வாங்குவது எப்படி..? ரொம்ப ஈசி, இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!


இன்சூரன்ஸ் பாலிசிகளில் ஆயுள் காப்பீடு வழங்கப்பட்டுள்ள மட்டுமல்லாமல் இதில் சேமிப்பும் உள்ளடங்கியுள்ளதால் வங்கிகள் இந்த பாலிஸிகளை கடன் தருவதற்காக ஏற்றுக் கொள்கின்றன. யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பாலிஸி மற்றும் டெர்ம் இன்சூரன்ஸ்-களுக்கு வங்கிகள் கடன் வழங்குவதில்லை.

உங்களது லைப் இன்சூரன்ஸ் பாலிஸி மீது கடன் வாங்க நினைத்தால் உங்களது பாலிஸிக்கு பண மதிப்பு இருக்க வேண்டும். பண மதிப்பு என்பது நிரந்தர லைப் இன்சூரன்ஸ் பாலிஸிகளில் மட்டுமே இருக்கும். டெர்ம் இன்சூரன்ஸ் பாலிஸியில் பண மதிப்பு இல்லாததால் அதன் பேரில் கடன் தரப்படாது.

உங்களது லைப் இன்சூரன்ஸ் பாலிஸியில் உள்ள பண மதிப்பைத்தான் நீங்கள் வாங்கும் கடனுக்கு ஈடாக எடுத்துக் கொள்வார்கள். சில ஆயுள் காப்பீடு நிறுவனங்கள் கடனுக்காக ஆன்லைனில் விண்ணப்பிக்க அனுமதிக்கின்றன. மற்ற நிறுவனங்களுக்கு ஆப்லைனில் பேப்பரில் பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த நடைமுறையை எப்படித் தொடங்குவது என்ற விவரம் உங்களுக்குத் தெரியாவிட்டால் உங்களது காப்பீட்டாளரை அழைத்து கேட்கவும். உங்களது காப்பீடு நிறுவனத்தின் விதிமுறைகளைப் பொறுத்து நீங்கள் போனிலேயே கடன் விண்ணப்பத்தை செய்து முடித்து விடலாம்.

கடன் பெறத் தகுதி பெறுவதற்கு பாலிஸிகளின் சரண்டர் மதிப்பை விண்ணப்பதாரர்கள் பெற்றிருக்க வேண்டும். பாலிஸியை இன்சூரன்ஸ்தாரர் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு சாற்றியளிக்க வேண்டும். இதில் சரண்டர் மதிப்பில் 85 முதல் 90 சதவீதத்தை கடனாகத் தருவார்கள். இந்தக் கடனுக்கு எல்ஐசி 10 சதவீதம் வட்டி வசூலிக்கிறது. இதை அரையாண்டுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும்.

திருப்பிச் செலுத்தும் காலம் நெகிழ்வோடு இருக்கும். எல்ஐசி வெறும் வட்டியை மட்டும் கட்டும் தேர்வைத் தருகிறது. கடனை செட்டில் செய்யும்போது கிளைம் தொகையிலிருந்து கடன் தொகையைக் கழித்துக் கொள்ளலாம். நீங்கள் கடன் வாங்கும் வங்கி அல்லது கடன் தருபவரைப் பொறுத்து திருப்பிச் செலுத்தும் முறை மற்றும் வட்டி விகிதங்கள் மாறும்.

இருந்தாலும் வங்கிகள் வழக்கமான கடனுக்கான வட்டி விகிதத்தைவிட இந்தக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். பர்சனல் லோன்களுக்கான வட்டிவிகிதத்தை விட மிகவும் குறைவாக இருக்கும்.

லைப் இன்சூரன்ஸ் பாலிஸி மீது கடன் பெறும் முறை-

ஸ்டெப் 1: தகுதி

கடன் கேட்பவரின் பாலிஸியின் தகுதி சரிபார்க்கப்படும். பாரம்பரியமான மணி பேக் அல்லது எண்டோவ்மென்ட் பாலிஸிகள் மீதுதான் கடன் வழங்கப்படும்.

ஸ்டெப் 2: சரண்டர் மதிப்பு

நீங்கள் பாலிஸி வாங்கி குறைந்தபட்சம் மூன்று வருடங்களுக்கு பிரீமியம் செலுத்தியிருக்க வேண்டும். அப்படிப்பட்ட பாலிஸியின் சரண்டர் மதிப்புதான் கணக்கில் எடுக்கப்படும். ஏனென்றால் கடன் வாங்குவதற்கு சரண்டர் மதிப்பு உள்ள பாலிஸிகள்தான் தகுதி வாய்ந்தவை ஆகும்.

ஸ்டெப் 3: கடன் தொகையை கணக்கிடவும்

சரண்டர் மதிப்பைப் பொறுத்துதான் கடன் தொகை நிர்ணயிக்கப்படும். இன்சூரன்ஸ் நிறுவனங்கள் பொதுவாக சரண்டர் மதிப்பில் 85 முதல் 90 சதவீதம் வரை கடனாகத் தரும்.

ஸ்டெப் 4: சரியான கடன் நிறுவனம்

எப்போதுமே கடன் தருபவர்கள் சொல்லும் சலுகைகளை ஒப்பிட்டுப் பாருங்கள். அவர்களது நிபந்தனைகள், விதிகளை சரிபார்த்துவிட்டு பின்னர் கடன் கேட்டு விண்ணப்பிப்பது நல்லது.

ஸ்டெப் 5: விண்ணப்பம்

மேலே சொன்ன எல்லா விஷயங்களையும் செய்துவிட்டு உங்களது விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்யவும். அத்துடன் அசல் பாலிஸி ஆவணங்கள், கேன்சல் செய்யப்பட்ட செக், கடன் தொகைக்கான பேமென்ட் ரசீது ஆகியவற்றை இணைத்துத் தரவும்.

Story written by: I.jayachandran

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+