வயதான காலத்தில் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நன்றாக இருக்க வேண்டும். இப்போது கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை வயதான காலத்திலாவது நிம்மதியாக இருக்க வேண்டும். இது தான் இன்று பலரின் ஆசையாக இருக்க வேண்டும்.
இதற்கு ஒரு பெஸ்ட் ஆப்சன் என்பது பிபிஎஃப் முதலீடு தான். இதன் மூலம் உங்களது பிரச்சனைகளை நீங்களே ஓரளவு நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
அஞ்சலகத்தின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். எவ்வளவு முதலீடு செய்தால் வயதான காலத்தில் 1 கோடி ரூபாய் முதிர்வு தொகையினை பெற முடியும். இந்த திட்டத்தில் எப்படி இணைவது? வாருங்கள் பார்க்கலாம்.
பிபிஎஃப் திட்டம்
இந்தியாவினை பொறுத்தவரையில் பல ஆயிரம் முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், அரசின் முதலீட்டு திட்டங்கள் என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. ஏனெனில் பாதுகாப்பானது. கணிசமான வருவாயும் உண்டு. எல்லாவற்றிற்கும் மேலாக முதலீட்டுக்கு எந்த பங்கமும் இல்லை. அதிலும் பிபிஎஃப் திட்டம் என்பது மக்கள் மத்தியில் மிக வரவேற்பை பெற்ற ஒரு நல்ல திட்டமாகும்.
வரிச்சலுகை உண்டா?
இந்த திட்டம் 15 ஆண்டுகால திட்டம். இந்த திட்டத்தின் மூலம் முதிர்வு காலத்தில் 1 கோடி ரூபாய் கிடைக்குமா? இது எப்படி சாத்தியம்? அதற்காக எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும். 15 வருடம் முதலீடு செய்தால் போதுமானதா? இதில் வரிச்சலுகை உண்டா? வேறு என்ன சலுகைகள் எல்லாம் உண்டு. இதற்கான வட்டி விகிதத்தினை அரசு சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு காலாண்டிலும் மாற்றியமைப்பதால், வட்டி விகிதம் அதிகரிக்கும் போது உங்களது வருவாய் சற்று அதிகரிக்கலாம், வட்டி குறையும் போது வருவாய் சற்று குறையலாம். எனினும் பெரியளவில் முதிர்வில் மாற்றம் இருக்காது.
முதிர்வு காலம் எவ்வளவு?
தற்போதைய நிலவரப்படி, இந்த திட்டத்தில் வட்டி விகிதம் 7.1% ஆகும். இந்த திட்டத்தில் முதிர்வுக்கு பின்னரும் 5 வருட தொகுப்புகளாக மீண்டும் தொடரலாம் என்பதால், இது இன்னும் கூடுதல் நன்மையாக பார்க்கப்படுகிறது. அதோடு இந்த கணக்கினை வங்கிக் கணக்கு மூலமாகவோ அல்லது அஞ்சலகம் மூலமாகவோ, மற்ற சேமிப்பு கணக்குகளை எளிதில் தொடங்கிக் கொள்ளலாம்.
குறைந்தபட்ச முதலீடு
பிபிஎஃப் கணக்கில் வருடத்திற்கு குறைந்தபட்சம், 500 ரூபாய் முதல் செலுத்திக் கொள்ளலாம், அதிகபட்சமாக 1.5 லட்சம் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். உங்களது தவணைகளை 12 தவணையாக கூட செலுத்திக் கொள்ளலாம். ஒரு தனி நபர் கட்டாயம் 1.5 லட்சத்திற்கு மேல் செலுத்த முடியாது. அப்படி அதிகமாக செலுத்த வேண்டும் எனில், நீங்கள் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் கணக்கினை தொடங்கி செலுத்திக் கொள்ளலாம். ஆக அதன் மூலம் கூடுதலாக வருமானம் பார்க்க முடியும்.
எங்கு தொடங்கலாம்?
அரசின் இந்த பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை அஞ்சலகம், பொதுத்துறை வங்கிகள் மற்றும் சில முன்னணி தனியார் வங்கிகள் மூலமும் தொடங்கிக் கொள்ளலாம். துரதிஷ்டவசமாக பிபிஎஃப் அக்கவுண்ட் ஹோல்டர் இறந்து விட்டால், அவரது மனைவியோ அல்லது சட்டபூர்வமாக யார் வாரிசுதாரரோ அவர்கள் க்ளைம் செய்து கொள்ளலாம்.
இடையில் எடுக்கலாமா?
உங்களது கணக்கு தொடங்கப்பட்ட ஆண்டில் இருந்து 7வது நிதியாண்டில் உங்களது பிபிஎஃப் கணக்கில் இருந்து ஓரளவு தொகையினை பெறலாம். அவ்வாறு எடுக்கப்படும் தொகையானது ஒரு நிதியாண்டில் ஒரு முறை மட்டுமே எடுக்க அனுமதிக்கப்படுகிறது. அதுவும் நடப்பு ஆண்டின் முந்தைய ஆண்டின் நிலுவையில் 50% மட்டும் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு பிறகு பிணையமாக வைத்துக் கொண்டு கடனும் பெற்றுக் கொள்ள முடியும்.
எவ்வளவு முதலீடு?
பிபிஎஃப் திட்டத்தில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் அதிகபட்ச முதலீடான 1,50,000 ரூபாய் முதலீடு செய்வீர்கள். இதன் மூலம் 15 வருடத்தில் நீங்கள் 22,50,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். தற்போதைய வட்டி விகிதம் - 7.1% என்பதைக் கணக்கில் வைத்துக் கொண்டால், வட்டி வருமானம் 18,18,209 ரூபாயாகும். மொத்த முதிர்வு தொகை 40,68,209 ரூபாயாகும்.
ரூ.1 கோடி எப்படி சாத்தியம்
பிபிஎஃப் திட்டத்தில் மாதம் 12,500 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். இதன் மூலம் அதிகபட்ச முதலீடான 1,50,000 ரூபாய் முதலீடு செய்தால். இதன் மூலம் 30 வருடத்தில் நீங்கள் 45,00,000 ரூபாய் முதலீடு செய்திருப்பீர்கள். தற்போதைய வட்டி விகிதம் - 7.1% என்பதைக் கணக்கில் வைத்துக் கொண்டால், வட்டி வருமானம் 1,09,50,911 ரூபாயாகும். மொத்த முதிர்வு தொகை 1,54,50,911 ரூபாயாகும்.
More From GoodReturns

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

போர் பதற்றத்திலும் லாபம் தரும் பக்கா பிளான்! பங்குச்சந்தை வீழ்ச்சியில் நீங்கள் கவனிக்க வேண்டிய SIP!

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

மாதம் ரூ.4 லட்சம் சம்பளம் தரும் வேலையை விட்டு ரோட்டு கடை போட்ட டெக்கி..!! சாதித்தாரா? சறுக்கினாரா?

HDFC பங்கினை வாங்க இது பொன்னான நேரமா? - பங்கு மதிப்பு சரிந்துள்ள நிலையில் நிபுணர்கள் டிப்ஸ்

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?



Click it and Unblock the Notifications