நீங்கள் ரூ.25,000 சம்பளம் பெறுபவரா? உங்களை பணக்காரராக்கும் 70:15:15 ஃபார்முலா!

சம்பாதிக்கும் சம்பாத்தியத்தை வைத்து தினசரி தேவைகளையே சரியாக கவனிக்க முடியாத குடும்பங்கள் பல உள்ளன. இப்படி இருக்கும் குடும்பங்களில் ஓய்வுக்காக சேமிப்பது மிகவும் கடினமானதாக தோன்றலாம். வாழ்க்கைச் செலவுகள், அவசரகால நிதி போன்ற பலவற்றுக்காகவும் சேமிப்பு இன்றியமையாததாகவுள்ளது. என்னதான் செலவுகள் புரட்டிப் போட்டாலும் ஒரு சிறு தொகையை சேமித்து வைப்பது பிற்காலத்தில் உதவிகரமானதாக இருக்கும். அதற்கு சில ஃபார்முலாக்களை பயன்படுத்தி அதன்படி செலவு செய்து சேமிக்கலாம். இந்த பதிவில் உங்களை பணக்காரராக்கும் ஒரு ஃபார்முலாவைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

70:15:15 என்ற பார்முலாவை பயன்படுத்தி சேமிப்பதன் மூலம் உங்களுடைய சம்பளத்தை வைத்தே கணிசமான அளவு சேமிக்க முடியும். இந்த ஃபார்முலாவில் முதலில் இருக்கும் 70 என்பது வாடகைச் செலவு, மளிகை சாமான்கள், எலக்ட்ரிசிட்டி பில் போன்ற அத்தியாவசிய செலவுகளைக் குறிக்கிறது. மீதமுள்ள 15 என்பது அவசர காலத்திற்காக ஒதுக்க வேண்டிய நிதியைக் குறிக்கிறது. மீதமுள்ள 15 சதவீதம் SIP முதலீடு செய்வதைக் குறிக்கிறது. செல்வத்தை அதிகரிக்க கூட்டு வட்டி மிகவும் முக்கியம். அப்படி கூட்டு வட்டியை வழங்கும் SIP முதலீடுகளில் முதலீடு செய்வது குறித்து பரிசீலிக்கலாம்.

 நீங்கள் ரூ.25,000 சம்பளம் பெறுபவரா? உங்களை பணக்காரராக்கும் 70:15:15 ஃபார்முலா!

70:15:15 ஃபார்முலாவை பயன்படுத்தி ஒருவர் எப்படி சேமிப்பது?: உங்களுடைய மாத வருமானம் 25,000 ரூபாய் என வைத்துக் கொள்வோம். இதில் 70% அதாவது 17,500 வாழ்க்கைச் செலவுகள். இதில் அவசர தேவைக்காக ரூ.3,750-ஐ ஒதுக்குகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். மீதமுள்ள ரூ.3,750-ஐ நீங்கள் SIP முதலீடுகளில் முதலீடு செய்யலாம். இது போன்ற ஃபார்முலாக்களை கடைப்பிடிப்பதன் மூலம் உங்கள் வருமானம் அதிகரிக்கும்போதும் தொடர்ந்து பங்களிப்புகளை செய்து உங்கள் வருமானத்தை அதிகரிக்க முடியும்.

ஸ்டெப் அப் SIP-கள்: SIP முதலீட்டில் காலாண்டுக்கு ஒரு முறையோ அரையாண்டுக்கு ஒரு முறையோ உங்களின் தேர்வுக்கு ஏற்ப முதலீடு செய்யலாம். நீங்கள் விருப்பப்பட்டால் ஸ்டெப் அப் SIP முதலீட்டையும் தொடங்கலாம். ஸ்டெப் அப் SIP என்பது ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட சதவீதம் உங்கள் முதலீட்டை அதிகரிப்பதை குறைக்கிறது. உதாரணமாக முதல் ஆண்டு 1,000 ரூபாய் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் அடுத்த ஆண்டு அதில் 10% அதிகரித்து முதலீடு செய்ய வேண்டும். இதே போல ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உங்களுடைய முதலீட்டை கூட்டிக் கொண்டே போக வேண்டும்.

உதாரணமாக ரூ.25,000 சம்பளம் பெறுபவர் ஆரம்பத்தில் ஃபார்முலாவில் கூறப்பட்டது போல் 70 சதவீதம் வாழ்க்கைச் செலவுகளுக்காக, 15 சதவீதம் அவசர நிதிக்காக, மீதமுள்ள 15 சதவீதமான 3,750-ஐ SIP முதலீட்டில் முதலீடு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இதை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் அதிகரிக்க வேண்டும். 10 சதவீதம் அதிகரித்து தொடர்ந்து 25 ஆண்டுகளுக்கு முதலீடு செய்தால் உங்களுடைய மொத்த முதலீடு ரூ.2.95 கோடியாக இருக்கும்.

ஒட்டு மொத்த முதலீட்டுக்கும் வருடாந்திர வருவாயாக 12 சதவீதம் வழங்கப்பட்டால் உங்களுடைய முதலீட்டிற்கு ரூ.7.73 கோடி வட்டி மட்டும் கிடைக்கும். அப்படியானால் இறுதியாக ரூ.10.68 கோடி வருமானம் பெறலாம். SIP என்பது கூட்டு வட்டி முறையில் செயல்படுகிறது. கூட்டு வட்டி என்பது உங்களுடைய வட்டிக்கு வட்டி வழங்குவதை குறிக்கிறது. உங்கள் வாழ்க்கைச் செலவுகளுக்கு ஏற்ற ஃபார்முலாவை பயன்படுத்தி சேமிப்பதன் மூலம் எளிதில் உங்கள் வருமானத்தை அதிகரிக்கலாம்.

ஆனால் எஸ்ஐபி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. மேலே கூறப்பட்டுள்ள விவரங்களை வைத்து நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. எனவே எந்த ஒரு முதலீட்டு முடிவையும் எடுப்பதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்தின் பேரில் முதலீடு செய்யவும்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+