பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் அரசாங்கத்தால் வழங்கப்படும் லாபகரமான முதலீட்டு திட்டமாகும். இதனை ஆங்கிலத்தில் "Public Provident Fund - PPF" என்று கூறுவர். பலர் தொடர்ந்து தாங்கள் முதலீடு செய்வதற்கு பாதுகாப்பான முதலீட்டு திட்டத்தை ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர். சிலருக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் லாபகரமானதாக தோன்றினாலும், அவற்றில் அபாயங்கள் இருப்பதால் தாங்கள் போடும் முதலீடு பத்திரமாக இருக்க வேண்டும் என்பதில் பலர் கவனம் செலுத்துகின்றனர். எனவே இது போன்ற நபர்களுக்கு PPF திட்டம் உதவிகரமானதாக இருக்கும். இந்தத் திட்டத்தில் மாதம் 2,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்? என்பதை இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
PPF திட்டத்தின் வட்டி எவ்வளவு?: சிறுசேமிப்பு திட்டங்கள் மற்றும் PPF திட்டம் போன்றவற்றிற்கு அரசாங்கம் காலாண்டுக்கு ஒரு முறை வட்டி விகிதத்தை மாற்றியமைத்து நிர்ணயிக்கும். அதன்படி இந்த காலாண்டுக்கு PPF திட்டத்திற்கு 7.1 % வட்டி வழங்கப்படுகிறது. அதாவது 2024-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்திற்கு இந்த வட்டி விகிதம் பொருந்தும்.

PPF திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக 1 வருடத்திற்கு 500 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம். அதிகபட்சமாக 1 வருடத்திற்கு 1.5 லட்சம் வரை முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. PPF திட்டத்திற்கான லாக்கின் பீரியட் 15 வருடங்கள். அதாவது இந்த 15 வருடங்களுக்கு உங்களால் முதலீட்டு தொகையை எடுக்க முடியாது.
அதன் பின்னர் முதிர்வு காலத்தில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். வேண்டுமானால் உங்கள் முதலீட்டை நீட்டிக்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் முதலீட்டின் 14-வது வருடத்தில் விண்ணப்பித்து மீண்டும் நீட்டித்துக் கொள்ளலாம்.
இந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் முற்றிலும் வரி இல்லாதது. இத்திட்டம் கூட்டு வட்டியின் நன்மையையும் வழங்குகிறது. கூடுதலாக, உங்கள் PPF முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம்.
ரூ. 2,500 மாதாந்திர PPF முதலீட்டுக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?: ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து 2,500 ரூபாய் பிபிஎஃப் திட்டத்தில் முதலீடு செய்து வருகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால் உங்களுடைய வருடாந்திர முதலீடு 30,000 ரூபாயாக இருக்கும். தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால் 7.1% வட்டி விகிதத்தில் மொத்தமாக 4,50,000 முதலீடு செய்திருப்பீர்கள். இதற்கான வட்டியாக உங்களுக்கு 3,63,642 ரூபாய் கிடைக்கும். அப்படியானால் முதிர்வு காலத்தில் நீங்கள் 8,13,242 ரூபாய் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் உங்களுடைய முதலீட்டை 5 ஆண்டுகள் அதிகரிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தற்போது உங்களுடைய மொத்த முதலீடு 6,00,000 ரூபாயாக இருக்கும். அதற்கு வட்டி மட்டும் 7,31,658 ரூபாய் கிடைக்கும். முதிர்வுக் காலத்தில் நீங்கள் 13,31,658 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் எப்படி மாதம் ரூ. 2500 ரூபாய் முதலீடு செய்து எப்படி 13 லட்சம் வரை வருமானம் பெறுவது என்ற ஐடியா மட்டுமே. இதன் மூலம் நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்துடன் முதலீடு செய்யவும்.
More From GoodReturns

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications