PPF என்று சொல்லப்படுகிற, பொது வருங்கால வைப்பு நிதி அரசாங்கத்தால் மக்களுக்கு பயன்படும் வகையில் வழங்கப்படும் லாபகரமான முதலீட்டு திட்டமாகும். இதில் முதலீடு செய்வதன் மூலம் ஒரு நபர் நல்ல வருமானத்தை பெற முடியும். பலர் தங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணத்தை விடாமுயற்சியுடன் சேமிக்க விரும்புகின்றனர். இதுபோன்ற நபர்களுக்கு இந்தத் திட்டம் சிறந்த தேர்வாக இருக்கும். இந்தப் பதிவில் ரூ. 5,000 மாத முதலீட்டை எப்படி ரூ. 42 லட்சமாக மாற்றுவது? என்பது குறித்து விரிவாக பார்ப்போம்.
PPF திட்டத்தின் வட்டி விகிதம் என்ன?: இந்திய அரசாங்கம் PPF திட்டத்தின் வட்டி விகிதத்தை காலாண்டுக்கு ஒரு முறை நிர்ணயிக்கிறது. இந்த வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை மாறுபடும். அதாவது 2024-ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டிற்கு PPF திட்டத்திற்கு 7.1 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.

இந்த முதலீட்டில் இருந்து கிடைக்கும் வருமானம் முற்றிலும் வரி இல்லாதது. இத்திட்டம் கூட்டு வட்டியின் நன்மையையும் வழங்குகிறது. கூடுதலாக, உங்கள் PPF முதலீடுகளுக்கு வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் வரி விலக்குகளைப் பெறலாம்.
PPF திட்டத்தில் குறைந்தபட்சமாக ரூ. 500 முதல் அதிகபட்சமாக வருடத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். PPF திட்டத்திற்கான லாகின் காலம் 15 வருடங்கள். அதன் பின்னும் உங்களுடைய முதலீட்டை நீட்டிக்க வேண்டுமானால், முதலீட்டின் 14-வது வருடத்தில் விண்ணப்பித்து நீட்டித்துக் கொள்ளலாம்.
ரூ. 5,000 மாதாந்திர முதலீட்டில் எப்படி ரூ. 42 லட்சம் பெறுவது?: மாதத்திற்கு ரூ. 5,000 முதலீடு செய்வதன் மூலம், நீங்கள் உங்கள் வருமானத்தை ரூ. 42 லட்சம் வரை உருவாக்கலாம். இந்தத் திட்டம் தற்போது 7.1% வட்டி விகிதத்தை வழங்குகிறது. எனவே இத்திட்டத்தில் மாதத்திற்கு ரூ. 5000 டெபாசிட் செய்து வந்தால், ஆண்டுக்கு ரூ. 60,000 சேமித்திருப்பீர்கள்.
இதன் மூலம் 15 ஆண்டுகளில் ரூ.9,00,000 லட்சம் மொத்தம் டெபாசிட் செய்திருப்பீர்கள். மேலும் கூட்டு வட்டியின் நன்மையுடன் உங்களுடைய சேமிப்பிற்கு ரூ.7,27,284 ரூபாய் வட்டி கிடைக்கும். அப்படியானால் உங்களுடைய வருமானம் ரூ. 16,27,284 ஆக இருக்கும்.
உங்கள் முதலீட்டை கூடுதலாக 10 ஆண்டுகளுக்கு, அதாவது மொத்தமாக 25 ஆண்டுகள் நீட்டித்தால், உங்கள் சேமிப்பு தோராயமாக ரூ. 42 லட்சத்தை எட்டும். இந்தக் காலகட்டத்தில், உங்கள் வட்டி வருவாய் மட்டும் ரூ. 26,00,000-ஐத் தாண்டி இருக்கும். PPF திட்டத்தில் மொத்தமாகவோ அல்லது மாத தவணைகளாகவோ முதலீடு செய்யலாம்.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல் எப்படி மாதம் ரூ. 5000 ரூபாய் முதலீடு செய்து எப்படி 42 லட்சம் வரை வருமானம் பெறுவது என்ற ஐடியா மட்டுமே. இதன் மூலம் நாங்கள் உங்களை முதலீட்டு முடிவுகள் எடுக்கச் சொல்லவில்லை. நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பு உங்களுடைய நிதி ஆலோசகரை அணுகி ஆலோசனை பெற்று சுய விருப்பத்துடன் முதலீடு செய்யவும்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications