சென்னை: குறைந்த முதலீட்டில் அதிக வருமானம் என கூறி மக்களை மோசடி செய்யும் கும்பல்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த மோசடிகளில் இருந்து தப்பிக்க ஒருவர் பாதுகாப்பான முதலீடுகள் குறித்து தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம்.
இந்தியாவை பொறுத்தவரை பாதுகாப்பான முதலீடு அதே வேளையில் கணிசமான அளவு வருவாய் தரக்கூடிய முதலீடு என்ற உடனே நம் அனைவரின் நினைவுக்கும் தபால் நிலையங்களில் வழங்கப்படும் சேமிப்பு திட்டங்கள் தான் நினைவுக்கு வர வேண்டும். தபால் நிலையத்தில் கிடைக்கும் ஒரு சிறப்பு வைப்பு தொகை திட்டம் எப்படி உங்களின் 10 லட்சம் ரூபாயை 30 லட்சம் ரூபாயாக மாற்றி காட்டும் என்பதை தான் நாம் இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தபால் நிலையங்களில் நிலையான வைப்பு தொகை திட்டங்கள் டைம் டெபாசிட் என்ற பெயரில் வழங்கப்படுகின்றன. இதில் 15 ஆண்டுகளுக்கு பின்வரும் முறைகள் படி ஒருவர் முதலீடு செய்தால் அவருடைய 10 லட்சம் ரூபாய் பணம் 30 லட்சம் ரூபாயாக வளர்ச்சி அடையும்.
தபால் நிலைய டைம் டெபாசிட் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீட்டு காலம் பொறுத்து வட்டி கிடைக்கும். அதிகபட்சமாக ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். இதில் உங்களுக்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி கிடைக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் தொகையை வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 சி- இன் கீழ் குறிப்பிட்டு வரிச்சலுகையும் பெற முடியும். இது அரசாங்கத்தால் நடத்தப்படக்கூடிய திட்டம் என்பதால் உங்களுடைய முதலுக்கு மோசம் ஏற்படாது.
முதல் 5 ஆண்டுகள்:
செய்யும் முதலீடு : 10 லட்சம்
முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள்
ஆண்டு வட்டி - 7.5%
5 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் மொத்த வட்டி - ₹4,49,948
முதிர்வின் போது கிடைக்கும் மொத்த தொகை- ₹14,49,948
இரண்டாவது 5 ஆண்டுகள்:
முதல் 5 ஆண்டுகள் முடிந்த உடன் பணத்தை எடுத்துவிட கூடாது, அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்த பணத்தை மீண்டும் முதலீடு செய்ய வேண்டும்.
செய்யும் முதலீடு : ₹14,49,948
முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள்
ஆண்டு வட்டி - 7.5%
5 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் மொத்த வட்டி - ₹6,52,401.
முதிர்வின் போது கிடைக்கும் மொத்த தொகை- ₹21,02,349
மூன்றாவது 5 ஆண்டுகள்:
மொத்தம் 10 ஆண்டுகளில் உங்களின் பணம் 21,02,349 ரூபாய் என வளர்ச்சி அடைந்திருக்கும். அதனை மேலும் 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும்.
செய்யும் முதலீடு : 21,02,349
முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள்
ஆண்டு வட்டி - 7.5%
5 ஆண்டுகள் முடிவில் கிடைக்கும் மொத்த வட்டி - ₹9,45,948
முதிர்வின் போது கிடைக்கும் மொத்த தொகை- ₹30,48,297
உங்களுடைய பணத்தை டைம் டெபாசிட் திட்டத்தின் கீழ் அடுத்தடுத்து முதலீடு செய்யும் போது காம்பௌண்டிங் முறையில் உங்களுடைய வட்டி வருமானம் அதிகரிக்கிறது. அது மட்டும் இன்றி நீங்கள் வருமான வரி சேமிப்புக்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் .அரசு திட்டம் என்பதால் இதில் எந்த ஒரு பாதகமும் கிடையாது.
Story Written by: Devika


Click it and Unblock the Notifications