ஓய்வு காலத்தில் ஒரு கணிசமான தொகையுடன் ஓய்வு பெற வேண்டும் என எண்ணுபவர்கள் சிறுவயதிலிருந்தே அதற்கான முதலீட்டினை தொடங்கி விட வேண்டும். இந்தியாவில் தற்போது மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் பிரபலமான முதலீடுகளாக மாறியிருக்கின்றன.
மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களில் நாம் இரண்டு முறைகளை முதலீடு செய்யலாம் . ஒன்று Lumpsum எனப்படும் ஒரு முறை முதலீடு, மற்றொன்று SIP எனப்படும் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் செய்யப்படும் முதலீடு. இந்த கட்டுரையில் நாம் Lumpsum முதலீடுகள் மூலம் 5 லட்சம் ரூபாயை எப்படி 5 கோடி ரூபாயாக மாற்றலாம் என்பது குறித்து விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் காம்பவுண்டிங் முறையில் தான் முதலீட்டாளர்களுக்கு கணிசமான லாபம் கிடைக்கிறது. எனவே நீண்ட கால முதலீடு தான் உங்களின் முதலீட்டை பல மடங்கு உயர்த்தப் போகிறது. உதாரணமாக மியூச்சுவல் ஃபண்டில் ஆண்டுக்கு 12 சதவீதம் லாபம் வரக்கூடிய ஒரு திட்டத்தை தேர்வு செய்ய வேண்டும், அதில் Lumpsum முறையில் 5 லட்சம் ரூபாயை முதலீடு செய்ய வேண்டும். பின்னர் 30 ஆண்டுகளுக்கு அந்த முதலீட்டை எடுக்கக்கூடாது.
30 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுடைய முதலீடு 5 கோடி ரூபாயாக உயர்ந்திருக்கும். இந்த ஐந்து கோடி ரூபாயை நீங்கள் ஒரே முறையாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம் அல்லது எஸ்டபிள்யூபி முறையில் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகையாக திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதில் காம்பவுண்டிங் தான் மாயாஜாலத்தை நிகழ்த்துகிறது. இதன் காரணமாகத்தான் முதலீட்டு நிபுணர்கள் எஸ்ஐபி முதலீடுகளை விட Lumpsum முதலீடுகள் சிறந்த லாபம் தருபவையாக இருக்கும் என கூறுகின்றனர்.
ஏனெனில் முதலீடு செய்த தொகை முதல் நாளில் இருந்தே காம்பவுண்டிங் முறையில் உங்களுக்கு லாபத்தை வழங்க தொடங்கிவிடும்.சரியான திட்டங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்து விட்டால் உங்களுடைய முதலீடு பல மடங்கு வளர்ந்திருக்கும். ஈக்விட்டி சந்தை ஏற்ற இறக்கங்கள் நிறைந்தது. ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை தேர்வு செய்தால் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப உங்களின் முதலீட்டின் வளர்ச்சி இருக்கும். எனவே இந்த அடிப்படையை புரிந்து கொண்டு தான் முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும்.
இந்த ஏற்ற இறக்கங்களை ஏற்க நான் தயாராக இல்லை என்பவர்கள், கடன் பத்திரங்களில் முதலீடு செய்யும் மியூச்சுவல் ஃபண்டுகளை தேர்வு செய்யலாம் என யோசனை வழங்கப்படுகிறது. அதிலும் ஆண்டுக்கு 12% லாபம் தரும் ஃபண்டுகளாக இருந்தால் கவலையே இல்லை. ஒரு வேளை ஆண்டு லாபம் குறைவாக இருந்தால் அதற்கேற்ப உங்கள் முதலீட்டின் வளர்ச்சி குறைவாக இருக்கும். ஆனால் இதில் உங்களின் முதலீடு சீரான வளர்ச்சியில் இருக்கும். பெரிய ஏற்ற இறக்கம் இருக்காது. சிறந்த முதலீட்டு ஆலோசகரின் வழிகாட்டுதலின் படி இதனை செய்வது சிறந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications