நீங்கள் புதிதாக வங்கிக் கடன் அல்லது கடன் பெறப்போகும் நபரெனில் CIBIL ஸ்கோர் எனும் சொல்லை கண்டிப்பாக அறிந்திருப்பீர்கள்.
சிலருக்கு CIBIL ஸ்கோர்கள் பற்றியும், அதை எப்படி கணக்கிடுவது என்பது பற்றியும் போதுமான விவரங்கள் தெரியாமல் இருக்கலாம். இது எப்படி இருந்தாலும் நீங்கள் வாங்கும் கடனுக்கான வட்டி சிபில் ஸ்கோர் அடிப்படையில் தான் நிர்ணயம் செய்யப்படும்.
உதாரணமாக ஒரு நிறுவனத்தில் இரண்டு பேர், ஒரே சம்பளத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம். இருவரிடமும் கிரெடிட் கார்டு உள்ளது. இப்போது புதிதாக வீட்டுக்கடன் வாங்கும் போது கிரெடிட் கார்டு-ஐ யார் சரியான முறையில் பயன்படுத்தி அதை விரைவாக செலுத்துகிறாரோ அவருக்கு தான் குறைவான வட்டியில் கடன் கிடைக்கும், மற்றொருவர் ஒரு பேமெண்ட்-ஐ மிஸ் செய்திருந்தால் கூட சிபில் ஸ்கோர் பெரிய அளவில் பாதிக்கும்.
CIBIL or Credit Score என்றால் என்ன?
கிரெடிட் ஸ்கோர் என்பது உங்களுடைய கடன் வரலாற்றைப் பிரதிபலிக்கும் மூன்று இலக்க எண்ணாகும். வங்கிகளில் நீங்கள் பெற்றுள்ள கடன், அதைத் திருப்பிச் செலுத்திய வரலாறு, கடன் பெறுவதற்கான தகுதி, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் போன்றவற்றை வைத்தே இந்த சிபில் ஸ்கோர்கள் கணக்கிடப்படுகிறது.
வங்கியில் கடன்
வங்கிகள் உங்களுக்கு கடன் கொடுப்பதாக இருந்தால் உங்களுடைய சிபில் அல்லது கிரெடிட் ஸ்கோர் நன்றாக இருந்தால் மட்டுமே கடன் கொடுக்கும். அது குறைவாக இருந்தால் கடன் பெற முடியாது, இந்த ஸ்கோர் பென்ச்மார்க் அளவிற்கு குறைவாக இருக்கும் பட்சத்தில் அதிக வட்டியில் கடன் பெறலாம்.
CIBIL அமைப்பு
வங்கிகள், நிதி நிறுவனங்கள், கிரெடிட் கார்டு நிறுவனங்களும் முதலில் கிரெடிட் ஸ்கோரை அடிப்படியாக கொண்டுதான் கடன் அல்லது கிரெடிட் கார்டுகளை வழங்கும். இந்தியாவில் இந்த கிரெடிட் ஸ்கோரை CIBIL, Equifax, Experian உள்ளிட்ட அமைப்புகள் கணக்கிடுகின்றன. மற்ற நிறுவனங்களும் கிரெடிட் ஸ்கோரை கணக்கிட்டு கூறுகின்றன. ஆனால் அது துல்லியமாக இருக்காது.
சிபில் ஸ்கோர்!
உங்கள் சிபில் ஸ்கோர் 600க்கு கீழே இருந்தால் அது மிகவும் குறைவான மதிப்பெண்ணாகும். அதே 600 முதல் 649 மதிப்பெண் எனில் அது குறைவான ஸ்கோர்களிலேயே சேரும்.
உங்கள் சிபில் ஸ்கோர் 650 - 699 வரை இருப்பின் அது ஓகே என்று தான் கருதப்படும், அதாவது கடன் வாங்க போதிய அளவுக்கு இன்னும் கூடுதல் மதிப்பெண் தேவை என்பதுதான் அர்த்தம்.
ஆனால் உங்கள் சிபில் ஸ்கோர் 700 முதல் 749 வரை இருப்பின் அது நல்ல ஸ்கோர்தான்.
மேலும் 750 முதல் 900 வரை உங்கள் சிபில் மதிப்பெண் இருப்பின் மிகவும் நல்ல ஸ்கோராக வங்கிகள், நிதி நிறுவனங்கள் கருதும்.
சிபில் ஸ்கோர் குறைந்தால் என்ன ஆகும்!
சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடம் நீங்கள் கடன் வாங்குவதை அது சிக்கலாக்கும். சிபில் ஸ்கோர் சரியில்லை அல்லது வங்கி வரையறுக்கப்பட்ட மதிப்பெண்ணைவிட குறைவாக இருப்பின் பெரும்பாலான வங்கிகள் கடன் விண்ணப்பத்தை நிராகரித்துவிடுவார்கள். அல்லது அதிக வட்டி விகிதத்துக்கு கடன் வழங்குவர்.
என்ன பிரச்சனை
கடன் EMI தொகையை தாமதமாக செலுத்துவது, நிறைய கிரெடிட் கார்டு வைத்திருப்பது, கட்டணங்களை தாமதமாக செலுத்துவது ஆகிய காரணங்களால் உங்கள் சிபில் ஸ்கோர் அடிபடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
கடன் விண்ணப்பம்
மேலும் உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் உடனடியாக கடனுக்கு மற்றொரு வங்கியை அணுகாமல் இருப்பதுதான் நல்லது. ஏனெனில் முன்னர் நீங்கள் விண்ணப்பித்த வங்கியில் உங்கள் கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணங்களை மற்றொரு வங்கிக்கும் செல்லும். அதனால் நீங்கள் மீண்டும் நிராகரிப்பட்டு, உங்கள் சிபில் ஸ்கோர் இன்னும் மோசமாக செல்ல வாய்ப்புள்ளது.
சிபில் ஸ்கோரை உயர்த்துவது எப்படி?
அதிகப்படியான கடன்களை வாங்காதிருப்பது, கிரெடிட் கார்டு நிலுவைத் தொகையை குறைவாக வைத்திருப்பது, சரியான நேரத்தில் EMI தொகையை செலுத்துதல், அடிக்கடி லோனுக்காக விண்ணப்பிக்காமல் இருப்பது போன்றவை மூலம் உங்கள் சிபில் ஸ்கோரை உயர்த்தலாம்.
எளிய வழிகள்
முதலில் கிரெடிட் கார்டு நிலுவைகளை செலுத்து பல கார்டுகளை வைத்திருப்பதை தவிர்த்து ஒன்று அல்லது இரண்டு கார்டு மட்டுமே வைத்துக்கொண்டு செய்லபட்டாலே கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முடியும்.
வருமானம்
இதேபோல் அதிக வட்டி கொண்ட கடன்களை முதலில் குறைக்கவும், இத உங்கள் நிதி நிலையை மேம்படுத்த முடியும். கடன்களையும், அதற்கான வட்டி செலுத்துவதையும் குறைத்தாலே போதும் இல்லையெனில் உங்கள் வருமானத்தை 50 முதல் 100 சதவீதம் உயர்த்தினாலும் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்த முடியும்.


Click it and Unblock the Notifications