குழந்தையின் கல்வி, திருமணம், வீடு தான் இலக்கு.. எங்கு முதலீடு செய்யலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முதலீடு செய்ய வேண்டும், என்ற எண்ணம் பெரும்பாலானோருக்கும் இருக்கும். ஆனால் எதில் முதலீடு செய்வது என்பது யாருக்கும் தெரியாது. முதலில் முதலீடு எனும் போது அது எந்தளவுக்கு லாபம் கொடுக்கும் என்று யோசிப்போமே தவிர, அது பாதுகாப்பானதா என யோசிப்போமா?

நீங்கள் முதலீடு செய்யும்போது? நீண்டகால நோக்கில் முதலீடு செய்ய போகிறீர்களா? அல்லது குறுகிய காலத்திற்காக முதலீடு செய்ய போகிறீர்களா?

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

ரூ.13 கோடியா.. மாதம் 10 ஆயிரம் முதலீட்டில் இது சாத்தியமா.. அப்படி என்ன முதலீடு.. எவ்வளவு ஆண்டுகள்? ரூ.13 கோடியா.. மாதம் 10 ஆயிரம் முதலீட்டில் இது சாத்தியமா.. அப்படி என்ன முதலீடு.. எவ்வளவு ஆண்டுகள்?

லாபகரமான முதலீடு

லாபகரமான முதலீடு

பொதுவாக நீண்டகால முதலீடு என்பது நல்ல லாபகரமானதாக பார்க்கப்பட்டாலும், குறுகிய கால நோக்கிலும் சில இலக்குகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆக அவற்றிற்கு ஏற்ப திட்டமிட்டு செயல்படுவது நல்லது. அதோடு செய்யும் முதலீட்டில் ரிஸ்க் எப்படி இருக்கும்? அதிக பலன் தருமா? எல்லாவற்றுக்கும் மேலாக செய்யும் முதலீட்டிற்கு பாதுகாப்பானதாக அமையுமா? வாருங்கள் பார்க்கலாம்.

 வரிச் சலுகைக்காக முதலீடு?

வரிச் சலுகைக்காக முதலீடு?

33 வயதான ஐடி ஊழியர் (ரவி) ஒருவர், 27 வயதான அவரது மனைவி (கீதா) இருவரும் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் 5 ஆண்டுகளாக இபிஎஃப் கணக்கினை பராமரித்து வருகின்றன. தற்போது அவர்கள் பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்து வருகின்றனர். இதில் 80சியின் வரிச்சலுகை பெற முதலீடு செய்கிறார்கள்.

என்பிஎஸ் திட்டம்

என்பிஎஸ் திட்டம்

இவற்றுடன் என்பிஎஸ் டயர் 1 திட்டத்தில் 70% ஈக்விட்டி மற்றும் 30% கார்ப்பரேட் பத்திரங்கள் மூலமாகவும் முதலீடு செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் 50,000 ரூபாய் முதலீடு செய்து வருகின்றனர். இதோடு ஜனவரி 2022 முதல் ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் பண்டில் மாதம் 5000 ரூபாய் முதலீடு ம், 2019 முதல் HDFC taxsaverரெகுலர் திட்டத்தில் மாதம் 2000 ரூபாயும் முதலீடை, வரிசலுகைக்காக முதலீடு செய்கின்றனர்.

இனி செய்ய திட்டம்?

இனி செய்ய திட்டம்?

இது தவிர Mirae asset emerging bluchip fund direct growth மற்றும் ஐசிஐசிஐ புருடென்ஷியல் நிஃப்டி 50 இன்டெக்ஸ் ஃபண்டிலும் முதலீடு செய்து திட்டமிட்டுள்ளனர். இவற்றில் தலா 10,000 ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

 இன்சூரன்ஸ் திட்டம்

இன்சூரன்ஸ் திட்டம்

இது தவிர 2 எல்ஐசி பாலிசிகளும் இருப்பதாகவும் , ஒன்று ஜீவன் ஆனந்த் பிளான் - 149 லம்ப் சம் தொகையையும், இதில் 5 லட்சம் காப்பீட்டு தொகையாகவும், 1653 ரூபாய் அதற்கு பிரீமியமாகவும், ஜீவன் சாரல் பிளான் -165 திட்டத்தில் மாத பிரீமியம் 1021 ரூபாய் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளனர். இது 2013ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதனை நாங்கள் தொடரலாமா? அல்லது சரண்டர் செய்து விடலாமா?

இலக்கு என்ன?

இலக்கு என்ன?

எங்கள் இலக்கு 30 ஆண்டுகளில் 5 கோடி ரூபாயாகும். 20 ஆண்டுகளில் 2 கோடி ரூபாய் குழந்தைகளின் கல்விக்காகவும், 10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் வீடு கட்டவும், 5 ஆண்டுகளில் 20 லட்சம் ரூபாய் எனது வீட்டுக் கடனை முன் கூட்டியே கட்டவும் வேண்டும் என தெரிவித்துள்ளனர். ஆக நாங்கள் 5-10- 20-30 ஆண்டு இலக்குகளை அடையவும் இந்த முதலீடுகள் உகந்ததா? இதில் என்ன மாற்றம் செய்ய வேண்டும். எதனை சேர்க்கலாம்? எங்களது எஸ் ஐ பி-யை அதிகரிக்க வேண்டுமா? என கேட்டுள்ளனர்.

என்ன மாற்றம்?

என்ன மாற்றம்?

எல் ஐ சி ஜீவன் பாலிசியினை அப்படியே தொடர்ந்து வைத்திருக்கலாம். இது அவசியமான ஒன்று. ஆனால் ஜீவன் சாரல் திட்டத்தினை 10 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் சரண்டர் செய்யலாம். அதற்கு பதிலாக முதலீட்டினை ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட் பங்களிப்புக்கு பிரீமியத்தை மாற்றலாம். மைரே அசெட் எமர்ஜிங் பண்டில் எஸ் ஐ பி மூலம் மாதம் 2500 ரூபாய் செயலாம். மீதமுள்ள ஒரு மாதத்திற்கு 7500 ரூபாய் பராக் பரிக் ஃப்ளெக்சிகேப் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.

எஸ் ஐ பி முதலீடு

எஸ் ஐ பி முதலீடு

ஹெச் டி எஃப் சி டேக்ஸ் சேமிப்பு திட்டத்தில் இருந்து ஹெச் டி எஃப் சி Mirae asset tax பண்டுக்கு மாறலாம். வீட்டுக்கடனுக்கான மாத தவணை தொடரலாம். தவணைகளில் கடனை முன் கூட்டியே செலுத்த உபரியை செலுத்த பயன்படுத்தலாம். ஆண்டுக்கு எஸ் ஐ பி மூலம் 6% உங்கள் இலக்கினை அடைய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

How to invest for my short term, mid term and long term goals? check details

Our investment target is Rs 5 crore in 30 years. In 20 years Rs 2 crore for children's education, Rs 1 crore in 10 years for home repay Rs 20 lakh in 5 years.
Story first published: Friday, November 25, 2022, 22:08 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X