டெல்லி: இந்தியாவில் வேலைக்கு செல்பவர்களின் ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி ஊழியர்களின் ஊதியத்தில் 12 சதவீத தொகை அவர்கள் பெயரில் ஒரு பிஎஃப் கணக்கு தொடங்கப்பட்டு அதில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதே அளவிலான தொகையை அவர்கள் வேலை செய்யும் நிறுவனமும் அந்த பிஎஃப் கணக்கில் ஊழியரின் பெயரில் டெபாசிட் செய்கின்றன.
ஒரு ஊழியர் ஓய்வு பெறும் வரை பிஎஃப் கணக்கில் பணமானது டெபாசிட் செய்யப்பட்டு, ஓய்வு பெறும்போது அவருக்கு ஒரு பெரிய தொகையாக வழங்கப்படுகிறது. இவ்வாறு பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு அரசு சார்பாக ஆண்டுதோறும் 8.25% வட்டி தொகையும் வழங்கப்படுகிறது.

எனவே கூட்டு வட்டி கணக்கு முறையில் ஒரு நபர் ஓய்வு பெறும்போது மிகப்பெரிய தொகையை பெற்றுக் கொள்ள முடியும். இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் குறிப்பிட்ட தொகையை அவர்கள் மாத மாதம் ஓய்வூதியமாக பெற முடியும்.
ஒரு ஊழியர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் தன்னுடைய பிஎஃப் கணக்கில் பணத்தை வரவு வைத்தால் அவர் பென்ஷன் எனப்படும் ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதி பெறுகிறார். ஊழியர் தன் சம்பளத்தில் இருந்து பங்களிப்பு செய்யப்படும் 12% தொகை நேரடியாக பிஎஃப் கணக்கிற்கும், நிறுவனம் வரவு வைக்கும் 12% தொகையில் 3.67% பிஎஃப் கணக்கிலும், மீதமுள்ள 8.33% தொகை ஓய்வூதியத்திற்காகவும் சென்று விடும். இந்த ஊழியர் பணி ஓய்வு பெற்ற பிறகு மாதந்தோறும் ஓய்வூதியமாக இது வழங்கப்படும்.
ஆனால் இதில் சில விதிவிலக்குகள் இருக்கின்றன. உதாரணமாக ஒரு நபர் 10 ஆண்டுகளுக்கு மேலாக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறார். அவருடைய பிஎஃப் கணக்கில் மாதம்தோறும் பணம் வரவு வைக்கப்படுகிறது ,10 ஆண்டுகள் முடிந்த பிறகு அவர் ஓய்வூதியம் பெறுவதற்கும் தகுதி பெற்றவராக மாறுகிறார். 12ஆவது ஆண்டில் அவர் திடீரென வேலையை விட வேண்டிய சூழல் ஏற்படுகிறது எனும்போது அவருக்கு ஓய்வூதிய தொகை கிடைக்குமா என்றால் இபிஎப்ஓ அதற்கு சில நிபந்தனைகளை முன்வைக்கின்றனர்.
அந்த ஊழியர் வேலையை விட்ட பிறகு தன்னுடைய பிஎஃப் கணக்கில் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தை எடுக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். அவர் 50 வயதை கடந்த பிறகு முறையாக விண்ணப்பம் செய்து அந்த பணத்தை ஓய்வூதியமாக பெறலாம்.
ஆனால் அந்த ஊழியர் வேலையை விட்ட உடனே பிஎஃப் கணக்கில் இருந்த பணத்தையும், அதில் ஓய்வூதியத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தையும் முழுமையாக எடுத்துவிட்டார் என்றால் அவர் ஓய்வூதியம் பெற தகுதியற்றவராக மாறிவிடுகிறார்.
எனவே ஊழியர்கள் வேலையை விட்டாலும் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்தை எடுக்காமல் அப்படியே விட்டு வைப்பது பின்னாளில் அவர்களுக்கு பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
Story Written by: Devika
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications