தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்கில் உங்களது இருப்பு எவ்வளவு உள்ளது என எப்படி தெரிந்து கொள்வது? முந்தைய காலத்தில் எல்லாம் எதற்கெடுத்தாலும் அலுவலகம் சென்று வர வேண்டிய கட்டாயம் இருந்தது ஆனால் இன்று அனைத்தையும் ஆன்லைனிலேயே தெரிந்து கொள்ளும் வசதி வந்துவிட்டது.
அதிலும் சில வசதிகளை மொபைல் எஸ் எம் எஸ் வழியாகவே பெற முடியும். அந்த வகையில் உங்களது வருங்கால வைப்பு நிதி கணக்கில் எவ்வளவு இருப்பு உள்ளது என எப்படி தெரிந்து கொள்வது? வாருங்கள் பார்க்கலாம்.
ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை உமாங் ஆப் (Umang App) மூலமும் தெரிந்து கொள்ளலாம். EPFOவின் உறுப்பினர் சேவா போர்டல் மூலமும், எஸ்எம்எஸ் அல்லது மிஸ்டு கால் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.
Umang app ஆப் மூலம் எப்படி?
ஊழியர்கள் தங்களது வருங்கால வைப்பு நிதியினை மொபைல் மூலமாக பார்த்துக் கொள்ள, Umang app ஆப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம். அரசின் பல்வேறு சேவைகளுக்காக வழங்கப்பட்ட இந்த உமாங் ஆப் மூலம் ஒருவர் EPF பாஸ் புத்தகத்தினையும் பெற முடியும். இதன் மூலம் உங்களது இருப்பினையும் தெரிந்து கொள்ள முடியும்.
EPFO portal மூலம் எப்படி தெரிந்து கொள்வது?
Unified portal போர்டலுக்கு பதிலாக, இப்போது தொழிலாளர்கள் மற்றொரு இணையதளத்திலும் அணுக முடியும். தொழிலாளர்களின் பாஸ்புத்தகம் www.epfindia.gov.in என்ற இணையத்திலும் இருக்கும். இந்த இணையதளத்தில் our services என்ற லிங்கினை கிளிக் செய்து, பின்பு, for employees என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். இதனையடுத்து member passbook என்பதை க்ளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது யுஏஎன் நம்பரை பதிவு செய்து, பாஸ்வேர்டையும் கொடுத்து லாக் இன் செய்து கொள்ள முடியும். பின்பு இங்கு உங்களது இருப்பு உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பெற முடியும்.
எஸ்எம்எஸ் மூலம் எப்படி?
உங்களது வருங்கால வைப்பு நிதி இருப்பினை தெரிந்து கொள்ள 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். நீங்கள் இந்த மொபைல் எண்ணிற்கு மொழியினை தேர்வு செய்ய EPFOHO UAN ENG என்று அனுப்பலாம். அதாவது ENGLISH என்ற வார்த்தையில் ENG-யை மட்டும் எடுத்து அனுப்ப வேண்டும். இந்த எஸ்எம்எஸ் சேவையானது ஆங்கிலம், ஹிந்தி, பஞ்சாபி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் உள்ளது.
மிஸ்டு கால் மூலமும் தெரிந்து கொள்ளலாம்
நீங்கள் யுஏஎன் நம்பரில் பதிவு செய்யப்பட்ட எண்ணிலிருந்து 011-22901406 என்ற எண்ணிக்கு, மிஸ்டு கால் கொடுத்தும் தெரிந்து கொள்ளலாம். இதிலும் உங்களது யுஏஎன் எண், வங்கி கணக்கு, ஆதார் மற்றும் பான் மூலம் இணைக்கப்பட்டுள்ளதா என்பதையும் உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். இந்த சேவையினை பெறுவதற்கு, செலவும் அதிகம் இல்லை.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications