அரசு மானியங்களை பெற.. எஸ்பிஐ சேமிப்பு கணக்கில் கட்டாயம் இதை செய்யுங்கள்..!

அரசு மானியங்களை நேரடியாக பெற, எஸ்பிஐ சேமிப்பு கணக்குடன் ஆதார் நம்பரை லிங்க் செய்ய வேண்டும் என்று எஸ்பிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

இன்றைய காலகட்டத்தில் எல்லா அரசு ஆவணங்கள், வங்கிக் கணக்கு, பான் எண் என அனைத்திலும் ஆதாருடன் இணைக்க அரசு வலியுறுத்தி வருகின்றது.

இந்த நிலையில் அரசு மானியங்களை நேரடியாக பெற, வங்கிக் கணக்குடன் கட்டாயம் ஆதார் எண்ணினை இனைத்திருக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

மானியம் பெற கட்டாயம்

மானியம் பெற கட்டாயம்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி, உங்கள் வங்கிக் கணக்கில் ஆதார் எண் இணைப்பு என்பது கட்டாயமில்லை. இருப்பினும் அரசு மானியங்களை பெற ஆதார் எண்ணை வழங்குவது கட்டாயமாகும். சரி வாருங்கள் எஸ்பிஐ வங்கிக் கணக்கில் எப்படி உங்களது ஆதார் நம்பரை இணைப்பது என பார்கலாம்.

எஸ்பிஐ இணைய வங்கி

எஸ்பிஐ இணைய வங்கி

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் https://www.onlinesbi.com/ என்ற இணைய தளத்தில் சென்று, லாகின் செய்து கொள்ளுங்கள். அங்கு my accounts என்பதன் கீழ் உள்ள link your Aadhaar number என்பதை கிளிக் செய்ய வேண்டும். அங்கு உங்களது ஆதார் எண்ணினை கொடுத்து பதிவிட்டுக் கொள்ளவும். அங்கு உங்களது மொபைல் எண்ணின் கடைசி இரு இலக்கங்கள் தெரியும். அதனை உறுதிபடுத்திக் கொள்ளுங்கள்.

எஸ்பிஐ ஏடிஎம் மூலம் எப்படி இணைப்பது?

எஸ்பிஐ ஏடிஎம் மூலம் எப்படி இணைப்பது?

எஸ்பிஐ ஏடிஎம்முக்கு செல்லுங்கள். உங்களது ஏடிஎம்மினை ஸ்வைப் செய்து, உங்களது பின் நம்பரை பதிவு செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு மெனுவுக்கு சென்று, ஆதார் பதிவு என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது வங்கி கணக்கு சேமிப்பு கணக்கா அல்லது வேறு ஏதேனும் கணக்கா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களிடம் ஆதார் எண்ணினை பதிவிட கேட்கும். அதன் பிறகு நீங்கள் பதிவு செய்து கொள்ளவும். திரும்பவும் மறுமுறையும் பதிவு செய்ய கேட்கும். அதனை கொடுத்து பதிவு செய்த பிறகு, உங்களது மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். அதனை கொடுத்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

எஸ்பிஐ எனிவேர் ஆப்பில் எப்படி?

எஸ்பிஐ எனிவேர் ஆப்பில் எப்படி?

எஸ்பிஐ எனிவேர் ஆப்பினை லாகின் செய்து கொள்ளுங்கள். அதில் requests என்பதை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் ஆதார் என்பதை கிளிக் செய்து, அதன்பிறகு ஆதார் லிங்கிங் என்பதை கிளிக் செய்து கொள்ள வேண்டும். பிறகு உங்களது ஆதார் எண்ணை கொடுத்து பதிவு செய்ய வேண்டும். இங்கும் உங்களது பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும்.

எஸ்பிஐ கிளைக்கு சென்று எப்படி மாற்றுவது?

எஸ்பிஐ கிளைக்கு சென்று எப்படி மாற்றுவது?

உங்களுக்கு அருகில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைக்கு சென்று, உங்காளது ஆதார் கார்டு ஆவணத்தினை அல்லது இ- ஆதாரினை கொடுக்கும். அதோடு letter of requetம் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். இதனைக் கொடுக்கும்போது, ஆதார் ஜெராக்ஸினையும் கொடுக்க வேண்டும். அவர்கள் அதனை உறுதிபடுத்திக் கொண்டு, பதிவு செய்வர். இதனை வங்கி அப்டேட் செய்த பிறகு, பதிவு மொபைல் எண்ணுக்கு ஒரு மெசேஜ் வரும்.

பதிவாகியுள்ளதா? இல்லையா?

பதிவாகியுள்ளதா? இல்லையா?

அதெல்லாம் சரி உங்களது ஆதார் எண் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கிறதா? இல்லையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது? அதற்காக www.uidai.gov.in என்ற இணையதளத்தில் சென்று, அங்கு மை ஆதார் என்பதை கிளிக் செய்து, அங்கு ஆதார் அல்லது வங்கி கணக்கினை சரிபார்த்ததுக் கொள்ளலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+