ஒய்வுக் காலத்திற்கான அரசின் தேசிய ஓய்வூதிய திட்டம்.. எப்படி பகுதி தொகையை பெறுவது?

முந்தைய காலத்தில் இருந்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையை இன்று நினைத்து பார்ப்பதே கடினம் தான். ஆக உங்கள் ஓய்வுகாலத்திலும் யாரையும் எதிர்பாராமல் சுகமாக வாழ, தேசிய ஓய்வூதிய திட்டம் சிறந்த ஆப்சனாக இருக்கும்.

கடந்த 2004ல் அரசு ஊழியர்களுக்காக தேசிய ஓய்வூதிய திட்டம் தொடங்கப்பட்டது. ஆனால் இது பின்னர் 2009க்கு பிறகு தனியார் ஊழியர்கள் மற்றும் சுயதொழில் செய்பவர்கள், இல்லதரசிகள் என அனைவரும் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது. இந்த திட்டமானது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) கீழ் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் வயதானவர்கள் பொருளாதார பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்யும் விதமாக அறிமுகப்படுத்தப்பட்டது. அதோடு மக்களிடம் சேமிக்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தும் நோக்கத்துடனும் இந்த திட்டம் வந்துள்ளது. இந்த திட்டத்தில் 18 வயது முதல் 60 வரையிலானவர்கள் யார் வேண்டுமானலும் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.

NPSல் இருந்து எப்படி பணம் எடுக்கலாம்?

NPSல் இருந்து எப்படி பணம் எடுக்கலாம்?

இன்று நாம் பார்க்கவிருப்பது இந்த திட்டத்தில் இருந்து எப்படி பகுதி தொகையினை எடுக்கலாம் என்பது பற்றி தான். இந்த திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர்கள் முதிர்வு காலத்திற்கு முன்பும், பின்பும் எடுத்துக் கொள்ளும் வசதி உண்டு. எனினும் அது தவிர்க்க முடியாத அவசர தேவை காலங்களில் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.

ஓய்வுகாலத்திற்கு முன்பு எப்படி?

ஓய்வுகாலத்திற்கு முன்பு எப்படி?

அதோடு ஒரு சந்தாதாரர் 60 வயதிற்கு முன்னர் அல்லது ஒய்வு பெறுவதற்கு முன்னரே முதலீட்டினை எடுக்க விரும்பினால், திரும்ப பெறப்பட்ட தொகைக்கு வரி விதிக்கப்படாது. எனினும் திரும்ப பெறக்கூடிய கார்பஸ், முதலீடு செய்யப்பட்ட மொத்த தொகையில் 20% வரையில் எடுத்துக் கொள்ளலாம். அதுவும் 3 வருடத்திற்கு பின்பு தான் பெற முடியும். கார்பஸ் தொகை போக மீதமுள்ள தொகை சந்தாதாரரின் ஓய்வூதியத்தினை வழங்குவதற்கு பயன்படுத்தப்படும்.

அடிக்கடி பணம் எடுக்க அனுமதியில்லை

அடிக்கடி பணம் எடுக்க அனுமதியில்லை

அதோடு இந்த திட்டம் வருடத்திற்கு ஒரு முறை பணம் எடுப்பதை அனுமதிப்பதில்லை. எனினும் தற்போது சந்தாதாரர்கள் தங்களது தனிப்பட்ட தவிர்க்க முடியாத காரணங்களுக்காக எடுக்க அனுமதிக்கிறது. குறிப்பாக குழந்தைகளின் கல்வி மற்றும் திருமணம், மருத்துவ செலவு உள்ளிட்ட தவிர்க்க முடியா காரணங்களுக்கான அனுமதிக்கிறது.

TIER-2 திட்டத்தில் எப்போது வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளலாம்?

TIER-2 திட்டத்தில் எப்போது வேண்டுமானலும் எடுத்துக்கொள்ளலாம்?

இந்த இரண்டாவது ஒய்வூதிய திட்டத்தில் சேருபவர்கள், இந்த திட்டத்தில் இருந்து எப்போது வேண்டுமானாலும் செலுத்திய பணத்தினை எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கணக்கினை முதல் வகையான கணக்கிற்கான கூடுதல் இணைப்புக் கணக்காகவும் எடுத்து கொள்ளலாம். எனினும் இந்த திட்டத்தினை சந்தாதாரர் டயர் 1ல் கணக்கு தொடங்கியிருந்தால் மட்டுமே, டயர் 2ல் கணக்கு திறக்க முடியும். இந்த கணக்கில் வரி சலுகை எதுவும் கிடையாது என்பதை வாடிக்கையாளர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

TIER - 1 திட்டத்தில் எப்படி?

TIER - 1 திட்டத்தில் எப்படி?

இந்த ஓய்வூதிய திட்டத்தில் இணையும் வாடிக்கையாளர், கணக்கு முடிவு பெறும் வரையில் அல்லது ஒய்வு பெறும் வரையில் நிதியினை திரும்ப பெற முடியாது. எனினும் இந்த தேசிய ஓய்வூதிய திட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு வெளியேற்றும் போது மட்டுமே, இக்கணக்கினை முடித்து பணத்தை திரும்ப பெற முடியும். இந்த கணக்கில் சேர்ந்துள்ள வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் 6000 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அவ்வாறு செலுத்தாவிடில் இந்த கணக்கு முடக்கப்படும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+