சென்னை: தற்போது ஒவ்வொரு நாளையும் கடந்து போவதே பெரும் பாடாகத்தான் இருக்கிறது. அதிலும் இருக்கும் விலைவாசி உயர்வில் தேவையான பொருட்களை வாங்குவதற்கும், மற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவும், மருத்துவ செலவுகளை பாதுகாக்கவும் ஒரு சாதாரண மனிதன் படும் சிரமம் கொஞ்சநஞ்சமல்ல. அதிலும் ஒரு சில குடும்பங்களில் ஒருவருடைய சம்பளத்தை கொண்டே முழு மாதத்தையும் ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அதிலும் அவர்களுக்கு மாதம் ரூ. 10,000 தான் சம்பளம் என்றால் இன்னும் சற்று கடினம் தான். எனவே, இந்த பதிவில் ரூ. 10,000 சம்பளத்தை வைத்து குடும்ப செலவை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
வெறும் ரூ. 10,000 ரூபாய் சம்பளத்தை வைத்து குடும்ப செலவை பார்த்து பார்த்து செய்யும் குடும்பங்கள் நிறைய உள்ளன. அதிலும் தற்போதுள்ள விலைவாசி விண்ணை எட்டியுள்ள நிலையில், இந்தத் தொகையை வைத்து செலவு செய்வது கொஞ்சம் கடினம் தான். இருந்தாலும், திறமையான நிர்வகிப்பு இருந்தால் இதுவும் சாத்தியமே.. இந்த தொகையை வைத்து ஒரு மாதத்திற்கும் குடும்ப செலவை எப்படி நிர்வகிப்பது என்ற யுக்திகளைப் பார்ப்போம்.

திட்டமிடல்: வாங்கும் சம்பளம் எவ்வளவு குறைவானதாக இருந்தாலும் அதனை திறம்பட நிர்வகிக்க சரியான திட்டமிடல் முக்கியம். அதற்கு முதலாவதாக உங்களின் வரவு மற்றும் செலவு விவரங்களை ஒரு தெளிவான குறிப்பாக எடுத்து வைத்து கொள்ளுங்கள். வரவு மற்றும் செலவு பற்றிய தெளிவான புரிதல் உங்களுக்கு கிடைக்கும் பட்சத்தில், அதற்கேற்றார் போல் நீங்கள் செலவு செய்யலாம். மேலும் உங்கள் செலவு விவரங்களில் ஏதேனும் தேவையில்லாத வீண் செலவுகள் இருந்தால் அவற்றை நீக்கலாம்.
கல்வி, மருத்துவம், உணவுப் பொருட்களுக்கான செலவு, தங்கும் இடத்திற்கான செலவு போன்றவற்றிற்கு முன்னுரிமை தந்து மற்ற செலவுகளை இரண்டாம் பட்சமாக வைத்துக் கொள்ளுங்கள். இவை அல்லாத பிற செலவுகள் யாவையும் கவனத்துடன் கையாளுங்கள். அன்றாட செலவுகளைக் கூட எங்கே மலிவான விலையில் பொருட்கள் கிடைக்கிறதோ, அந்த இடத்திற்கு சென்று பொருட்களை வாங்குவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்கள்: தரமான பொருட்கள் தள்ளுபடியில் கிடைக்கும் பொழுது உடனடியாக வாங்கிக் கொள்ளுங்கள். மளிகை சாமான்கள், ஆடைகள்,காய்கறிகள், வீட்டு உபயோகப் பொருட்கள் என அனைத்து பொருட்களும் இப்பொழுது ஆன்லைனில் மலிவான விடையில் கிடைக்கிறது. அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தேவையான பொருட்களை ஆன்லைனில் வாங்கிக் கொள்ளுங்கள்.
சேமிப்பு: எல்லாவற்றிற்கும் முதலாக ஒரு சிறு தொகையை கொஞ்சம் கொஞ்சமாக சேமிக்க தொடங்குங்கள். அந்த சிறுதொகைக் கூட ஒருநாள் மிகப்பெரிய தேவைக்காக பயன்படலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதை குறைத்து விட்டு, வீட்டுக்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். விலை உயர்ந்த உணவகங்களில் உண்பதை நிறுத்திவிட்டு வீட்டில் சமைப்பதை வழக்கமாக்குங்கள். நண்பர்களுடனும் உறவினர்களுடனோ வெளியே செல்லும் பொழுது கூட கட்டுப்படியாகும் விலையில் இருக்கும் உணவகங்களில் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
சிறுசேமிப்பு திட்டங்கள் எப்படி உங்களுக்கு சேமிப்பை அதிகமாக்கி தருகிறதோ அதைப்போல சிறு தொழில்களின் மூலம் உங்களின் வருவாயை நீங்கள் அதிகப்படுத்திக் கொள்ள முடியும். இதன் மூலமாக உங்களின் தேவைகளை நீங்கள் எளிதில் பூர்த்தி செய்து கொள்ள முடியும். ஏதேனும் சிறு தொழில் தொடங்க முடியுமா என்ற விவரங்களை பற்றி சிந்தியுங்கள்.
உயர்ந்து கொண்டே இருக்கும் விலைவாசிக்கு மத்தியில் அன்றாட செலவுகளை கையாளுவது பெரும் சவாலாகவே இருக்கிறது. இந்த சூழ்நிலையை சமாளிக்க எந்தெந்த வகையில் நம்மால் தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ள முடியுமோ அதை முறையாக பின்பற்றி வந்தால் கை மீறி போகும் கடன் தொல்லையில் இருந்து கூட நாம் விடுபட்டு விடலாம்.
பணத்தைப் பிரித்து வையுங்கள்: 1 முதல் 15ஆம் தேதி வரை ஒரு குறிப்பிட்ட தொகையையும், 15ஆம் தேதிக்குப் பிறகு செலவு செய்ய வேண்டிய விஷயத்திற்காக ஒரு குறிப்பிட்ட தொகையையும் பிரித்து எடுத்து வையுங்கள். இதன் மூலம் 1 முதல் 15ஆம் தேதிக்குள் அனைத்து பணத்தையும் செலவு செய்து விட்டு, பிறகு கடன் வாங்குவதைத் தவிர்க்கலாம். உங்களுக்குள் ஒரு வரையறை வைத்து செலவு செய்யும்போது, இது போன்ற தவறுகள் நடக்காமல் பார்த்துக் கொள்ள முடியும்.
செலவு செய்யாத நாள்: ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நாளை தேர்வு செய்து, அன்றைய தினம் ஒரு ரூபாய் கூட செலவு செய்யாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். இதனை ஆங்கிலத்தில் "No Spending Day" என்று கூறுவர். இது போல் உங்களுக்குள், நீங்கள் சில முயற்சிகளை மேற்கொள்வதால் அன்றைய தினம் செலவாகும் சிறு தொகையை நீங்கள் சேமிக்கலாம்.
சரி இடையில் வரும் கல்யாணம், காது குத்து போன்ற விழாக்களுக்கு சென்று மொய் எழுத வேண்டுமே.. அதற்கு இந்த தொகையை வைத்து என்ன செய்வது? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது. இது போன்ற விசேஷங்கள் மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறையோ தான் வரும். அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை தனியாக சேர்த்து வையுங்கள். வெளியில் நீங்கள் செய்யும் எந்த ஒரு செலவுக்கும் இது போன்ற சேமிப்பு தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
More From GoodReturns

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications