அண்மைக்காலமாக Layoff என்பது பழகிப்போன வார்த்தையாக மாறிவிட்டது. பல்வேறு நிறுவனங்களும் சிக்கன நடவடிக்கை, நிறுவனத்தின் மறு சீரமைப்பு உள்ளிட்ட காரணங்களை சுட்டிக்காட்டி தங்களது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
அந்த வகையில் திடீரென ஏற்படக்கூடிய இது போன்ற பணி இழப்புகள் நம்மை மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பெருமளவில் பாதிப்படைய செய்கின்றன. திடீரென பணி இழப்புகள் ஏற்படும் போது நாம் பெரிய அளவிலான நிதிச் சிக்கலை எதிர்கொள்வோம். அப்போது நிதி திட்டமிடலை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான வழிமுறைகளை பார்க்கலாம்.

பொதுவாக நம்முடைய வருவாயில் 50% அத்தியாவசிய தேவைகள், 30% லைஃப்ஸ்டைல் பழக்கங்கள் மற்றும் 20% சேமிப்பு &முதலீடு என்ற வகையில் பிரித்து பயன்படுத்த வேண்டும் என கூறப்படுவதுண்டு.
ஆனால் லே ஆஃப் செய்யப்பட்டிருக்கும் சமயங்களில் லைப் ஸ்டைல் எக்ஸ்பென்ஸ் மற்றும் சேமிப்பு ஒதுக்கீட்டை தற்காலிகமாக நிறுத்தி வைத்துக் கொள்ளலாம். திடீரென இதுபோன்ற பணியிழப்புகள் ஏற்படும் போது நம்முடைய செலவினங்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது.
தற்போது நமது கையில் உள்ள தொகை என்ன ?,அடுத்த வேலை கிடைத்து சம்பளம் கிடைக்கும் வரை இந்த தொகையை நாம் எதற்கெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து முடிவெடுக்க வேண்டியது கட்டாயம்.
இதில் அத்தியாவசிய தேவைகளுக்கு அதாவது வீட்டு வாடகை, மின்சார கட்டணம், மளிகை சாமான்கள் போன்றவற்றுக்கான தொகை உங்களுக்கு எப்பொழுதும் இருக்கின்ற வகையில் உங்களது பணத்தைப் பிரித்துக் கொள்வது நல்லது.
தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும் உதாரணமாக தேவையற்ற சந்தாக்கள், வெளியில் சென்று சாப்பிடுவது போன்றவற்றை தவிர்ப்பது சிறந்ததாக இருக்கும். அதே போல அடுத்த மாதம் உங்களுக்கு இருக்கக்கூடிய நிதி சார்ந்த கடமைகள் என்னென்ன அதற்கு நம்மிடம் இருக்கும் தொகையை எப்படி நாம் பிரித்து கையாள முடியும் என்பது குறித்து திட்டமிடுவது அவசியம்.
ஏனெனில் இஎம்ஐ செலுத்துபவர்களாக இருந்தால் மாதந்தோறும் அதனை கட்டாயம் செலுத்த வேண்டியது அவசியமாகிறது எனவே அதற்கேற்ற வகையில் செலவினங்களை திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
புதிதாக வேலை கிடைத்து செல்லும் வரை முதலீடு மற்றும் சேமிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்கலாம். ஒருவேளை நீங்கள் ஆர்டி அல்லது எஸ்ஐபி முறையில் முதலீடு செய்து வருகிறீர்கள் என்றால் அதனை தற்காலிகமாக நிறுத்துவது சிறந்ததாக இருக்கும்.
ஏற்கனவே நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை எஸ்ஐபி யில் முதலீடு செய்து இருக்கிறீர்கள் என்றால் அதனை சிஸ்டமேட்டிக் வித்ட்ராயல் பிளான் என்ற முறையில் படிப்படியாக நீங்கள் திரும்ப எடுக்கலாம்.
உங்களுடைய ரெசியூமை அப்டேட் செய்ய ஏதுவாக சில திறன்களை கற்றுக் கொள்வதும் அவசியம் . எனவே அதற்காக ஒரு குறிப்பிட்ட தொகையை எடுத்து வைப்பது சிறந்ததாக இருக்கும். தேவைக்கேற்ப சிறிதளவு தொகையை கடனாக பெற்றுக் கொள்ளலாம்.
நகைகளுக்கான தேவை தற்போது இல்லையென்றால் அதனை தற்காலிகமாக வங்கிகளில் வைத்து கடன் பெற்று உங்களுடைய அத்தியாவசிய தேவைகளை கவனித்துக் கொள்ளலாம், ஆனால் கூடுமானவரை எவ்வளவு விரைவாக வேலையை மீண்டும் பெற முடியுமோ அவ்வளவு விரைவாக வேலை பெறுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
புதிதாக பட்ஜெட் போட்டு அதன் அடிப்படையில் நீங்கள் செலவுகளை மேற்கொண்டு வரும் பட்சத்தில் வேலையிழப்பு காலத்தில் வரக்கூடிய நிதி சிக்கல்களில் இருந்து ஓரளவு விடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும்.
More From GoodReturns

நல்லா வேலைசெஞ்சா மட்டும் போதாது! - ஆரக்கிள் பணிநீக்கங்களுக்கு மத்தியில் ஒரு எச்சரிக்கை!

பெங்களூரு IT ஊழியர்களுக்கு ஷாக்!80% பேர் வேலையை இழக்கப்போகிறார்களா? AI-யால் இன்னும் என்ன ஆகுமோ?

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications