இன்றைய காலகட்டத்தில் பெற்றோர் பல்வேறு தியாகங்களை செய்து பணம் சம்பாதித்து சேமித்து வைக்கின்றனர். ஆனால் இப்படி கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எப்படி செலவழிக்க வேண்டும்? எதற்காக செலவழிக்க வேண்டும்? என்பதை தங்களது குழந்தைகளுக்கு எடுத்துரைக்க மறந்துவிடுகின்றனர்.
இதன் விளைவு, சிக்கனப்படுத்தி சேமிக்கப்படும் பணம், ஒரு நொடியில் வீணாக செலவு செய்யப்படுகிறது. எனவே குழந்தைகளுக்கு நிதி மேலாண்மை குறித்து எடுத்துரைக்க வேண்டியது பெற்றோரின் அத்தியாய கடமையாகும். அந்த வகையில் உங்கள் குழந்தைகளின் நிதி மேலாண்மை திறன்களை எப்படி வளர்ப்பது என்பது குறித்து இந்த கட்டுரையில் நாம் விரிவாக பார்க்கலாம்.

1. குழந்தைகள் கேட்கும் போதெல்லாம் பணத்தை கொடுக்காமல் மாதத்திற்கு ஒருமுறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை ஒரு குறிப்பிட்டத் தொகையை அவர்களது கையில் ஒப்படைத்து விடுங்கள். இதன் மூலம் அவர்களின் செலவை அவர்கள் பார்த்துக் கொள்ள வேண்டும் என அவர்களிடம் பொறுப்பை கொடுத்து விட்டால் குழந்தைகள் தங்களுடைய அனுபவங்கள் மூலமாகவே பணத்தை எப்படி செலவு செய்ய வேண்டும், எப்படி சேமிக்க வேண்டும் என்பதை கற்றுக் கொள்வார்கள்.
2. பணத்தை சேமிப்பதற்கும், முதலீடு செய்வதற்கும் என்னென்ன வழிமுறைகள் இருக்கின்றன என்பது குறித்து பெற்றோர் எடுத்துரைக்க வேண்டும். வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கும் சேமிப்பு கணக்குகள், ஃபிக்ஸடு டெபாசிட், ஆகியவற்றின் அடிப்படைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். குழந்தைகளை வங்கிக்கு அழைத்து சென்று அவர்கள் பெயரில் ஒரு கணக்கை தொடங்கி முன் உதாரணமாக செயல்படுங்கள்.
3. குழந்தைகளிடம் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிப்பது பெற்றோரின் தலையாயக் கடமையாகும். உதாரணமாக எது அத்தியாவசியம், எது அனாவசியம் என்பது குறித்து நீங்கள் எடுத்துரைக்க வேண்டும். மேலும் அவர்களுக்கு என ஒரு இலக்கை நிர்ணயம் செய்து அதற்கேற்றபடி அவர்களை பணம் சேமிக்க ஊக்குவிக்க வேண்டும். ஒரு சைக்கிள் வாங்க வேண்டும் என இருந்தால் குறிப்பிட்ட காலத்திற்குள் சைக்கிள் வாங்குவதற்கான பணத்தை அவர்களாகவே சேமிப்பதற்கான ஒரு இலக்கை நிர்ணயித்துக் கொடுங்கள்.
4. குழந்தைகளுக்கு அவர்கள் எதற்காக செலவிடுகிறார்கள் என்பதை கண்காணித்து முடிவெடுக்கச் செய்யும் திறனை கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு டைரியில் இந்த மாதம் முழுவதும் அவர்கள் எதற்காக செலவு செய்தார்கள் இதில் எந்த செலவை குறைத்து இருக்கலாம் என்பன போன்ற விவரங்களை அவர்களால் கைப்பட எழுதச் சொன்னால் அடுத்த மாதம் அவர்கள் தேவையற்ற செலவுகளை குறைப்பார்கள். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே மிகச்சிறந்த நிதி மேலாண்மை திறனை அவர்களால் வளர்த்துக் கொள்ள இயலும்.
5. வீட்டு பட்ஜெட் போடும் போது குழந்தைகளையும் அதில் ஈடுபடுத்துங்கள். அதாவது உங்கள் குடும்ப வருமானம் எவ்வளவு , அதில் அத்தியாவசிய செலவுகளுக்கென ஒதுக்கீடு, வங்கி ஈஎம்ஐ-க்கான ஒதுக்கீடு, சேமிப்புக்கான ஒதுக்கீடு ஆகியவற்றை எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் நிதி மேலாண்மை அறிவை அனுபவமாக பெற்றுக் கொண்டு அதற்கு ஏற்ப முடிவுகளை எடுக்க பழகிக் கொள்வார்கள்.
சிறு வயதிலேயே கற்றுக் கொடுக்கப்படும் பழக்கம் நீண்ட கால நோக்கில் உங்கள் குழந்தைகளின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சிறு வயதிலேயே சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மையை கற்றுக் கொடுத்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும்.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications