மத்திய அரசு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அரசால் மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் அவரது கணவரோ/மனைவிக்கோ ஓய்வூதியம் செல்லும். அவர்கள் இல்லையெனில் குழந்தைகளுக்கு செல்லும்.
பெண் ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கை: மத்திய அரசின் துறைகளில் பணியாற்றி ஓய்வூதியம் பெறும் பெண்கள் இறந்துவிட்டால், அவரது கணவருக்கு இந்த ஓய்வூதியம் வழங்கப்படும். ஆனால் இதில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மத்திய அரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

விவாகரத்து மற்றும் குடும்ப வன்முறையால் பிரிவு போன்ற காரணங்களால் , தங்களது ஓய்வூதியம் கணவருக்கு செல்லாமல் நேரடியாக குழந்தைகளுக்கு செல்ல வேண்டும் என்பது பெண் ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் அதற்கு சட்டம் இடம் அளிக்கவில்லை. இனி பெண்களே முடிவெடுக்கலாம்!
பாலின சமத்துவத்தை உறுதி செய்தல் மற்றும் திருமண உறவுகள் முறிவதால் ஏற்படும் சவால்களை களையும் நோக்கில், ஓய்வூதிய விதிகளில் திருத்தம் செய்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மத்திய அரசு பெண் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறும் பெண்கள், தங்களது இறப்புக்கு பிறகு கணவருக்கு பதிலாக தனது குழந்தைகளில் தகுதியான ஒருவருக்கு குடும்ப ஓய்வூதியம் அளிப்பதற்காக அவரை வாரிசுதாரராக நியமனம் செய்யலாம் என அதில் கூறியுள்ளது.
குழந்தைகளை வாரிசாக நியமிப்பது எப்படி?: மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் அதற்கான வழிகாட்டியும் இடம்பெற்றுள்ளது. தனக்கு பிறகு தனது கணவருக்கு அல்லாமல் குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் செல்ல வேண்டும் என நினைக்கும் மத்திய அரசு பெண் ஊழியர்கள்/ஓய்வூதியதாரர்கள், இது குறித்து தங்களின் அரசு துறைத் தலைவரிடம் எழுத்து மூலமாக எழுதித் தர வேண்டும். அவர்கள் அதனை ஏற்றுக் கொண்டு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் உங்கள் கோரிக்கையானது நிறைவேற்றப்படும்.
யாரெல்லாம் பயன்படுத்தலாம்: மத்திய அரசின் இந்த அறிவிப்பை அனைத்து பெண் ஊழியர்களும்/ஓய்வூதியதாரர்களும் பயன்படுத்தி கொள்ளலாம். குறிப்பாக விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கும் பெண் ஊழியர்கள், கணவருக்கு எதிராக வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்டம், குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு தொடர்ந்த அரசு பெண் ஊழியர்கள் ஆகியோர் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.
குழந்தை இல்லையென்றால்..: பெண் ஊழியருக்கு குழந்தை இல்லாதபட்சத்தில் அவரது கணவருக்குக் குடும்ப ஓய்வூதியம் சென்றடையும். ஒருவேளை அவரின் பிள்ளைகள் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு ஊழியரின் கணவர் பாதுகாவலராக நியமிக்கப்பட்டு இருந்தால், அப்பெண்ணின் கணவருக்குக் குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

டிரம்ப்-ன் அந்த ஒரு வார்த்தை.. ஈரான் அரசு கடும் கோபம்.. வெளியான உச்சக்கட்ட எச்சரிக்கை..!!



Click it and Unblock the Notifications