பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு ஏற்ற சுகன்யா சமிரிதி யோஜனா.. SBI-யில் தொடங்குவது எப்படி?

இந்திய அஞ்சல் துறை வழங்கும் சேமிப்பு திட்டங்களில் செல்வ மகள் சேமிப்பு திட்டம் என்பது பிரபலமான பெண் குழந்தைகளுக்கான திட்டம்.

இது அவர்களது எதிர்காலத்தில் நிதி ரீதியாக பெரும் ஆதாரவினைக் கொடுக்கும். அதிலும் அரசின் ஆதரவுடைய இப்படி ஒரு சேமிப்பு திட்டத்தினை எளிதில் தொடங்க முடியும். சேவைகளை எளிதில் பெற முடியும். எல்லாவற்றிற்கும் மேலாக இந்த திட்டத்தினை சில வங்கிகளிலும் தொடங்க முடியும். இதனால் நகர்புறங்களிலும் இந்த திட்டம் மிக பிரபலமானதாக உள்ளது.

ஆக இன்றைய காலகட்டத்தில் பல முதலீட்டு திட்டங்கள் இருந்தாலும், மக்கள் மனதில் முதலிடம் வகிப்பது அரசின் சேமிப்பு திட்டங்களே. அதிலும் பெண் குழந்தைகளுக்கு எனும்போது அதில் சிறப்பான கவனம் செலுத்தி, முதலீடு செய்ய நினைக்கின்றனர். ஆனால் அப்படி நினைப்பவர்களில் பலருக்கு எந்த திட்டத்தில் முதலீடு செய்வது என்ற குழப்பமே ஏற்படுகிறது. அப்படி நினைப்பவர்களுக்கு அரசின் இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் ஒரு நல்ல ஆப்சனே.

அரசின் முதலீட்டு திட்டம்

அரசின் முதலீட்டு திட்டம்

அதெல்லாம் சரி, இந்த திட்டத்தில் எப்படி இணைவது? என்னென்ன பலன்கள்? வயது தகுதி என்ன? இதனை வைத்து கடன் வாங்க முடியுமா? இன்றைய நெருக்கடியான காலகட்டத்தில் குழந்தைகளுக்காக பல முதலீட்டு திட்டங்கள் உள்ளன. ஆனால் அதனுடன் ஒப்பிடும் போது இந்த திட்டம் எப்படி சிறந்தது. அஞ்சலக சேமிப்பு திட்டமான இந்த சேமிப்பு திட்டத்தில், எப்படி வங்கியிலும் இணைவது குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தில் எப்படி இணைவது வாருங்கள் பார்க்கலாம்.

பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்

பெண் குழந்தைகளுக்கான சிறந்த சேமிப்பு திட்டம்

இந்த திட்டம் பெற்றோர்களுக்கு தங்களது பெண் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாக்க, பெற்றோரை ஊக்குவிக்கும் விதமாக உருவாக்கப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மைனர் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது. ஒரு பெண்
குழந்தையின் பிறப்பு முதல் 10 வயது வரை எந்த நேரத்திலும், இந்த சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தினை தொடங்க முடியும். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 ஆண்டுகளாகும்.

 

 

வயது ஆதாரம்

வயது ஆதாரம்

அரசின் பெண் குழந்தைகளுக்கான இந்த திட்டத்தில், பெண் குழந்தைகள் மட்டுமே கணக்கு வைத்திருக்க தகுதியுடையவர்கள். இந்த கணக்கினை தொடங்க பெண் குழந்தையின் வயது ஆதாரம் கட்டாயமாகும். ஒரு பெற்றோர் இந்த திட்டத்தின் மூலம் இரண்டு கணக்குகளை தொடங்கிக் கொள்ள முடியும்.

முதலீடு எவ்வளவு செய்யலாம்?

முதலீடு எவ்வளவு செய்யலாம்?

இந்தியாவில் எந்தவொரு அஞ்சல் அலுவலகமும், சேமிப்பு வங்கி வேலையினை செய்கின்றன. சில் வங்கிகளும் இந்த சேவையினை செய்து வருகின்றன. குறிப்பாக நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இந்த திட்டத்தினை வழங்கி வருகின்றது. இந்த திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் வைப்பு ஒவ்வொரு ஆண்டும் 250 ரூபாய் தேவைப்படுகிறது. இதே ஒரு வருடத்தில் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த சுகன்யா சம்ரிதி திட்டத்திற்கு வட்டி விகிதம், நிலவரத்திற்கு ஏற்றப்படி அவ்வப்போது இந்திய நிதி அமைச்சகத்தால் மாற்றியமைக்கப்படுகிறது.

இந்த சேமிப்பு திட்டத்திற்கு வட்டி உண்டு

இந்த சேமிப்பு திட்டத்திற்கு வட்டி உண்டு

பெண் குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து 21 ஆண்டுகள் நிறைவடையும் போது இந்த திட்டமும் முதிர்ச்சியடைகிறது. நிலுவைத் தொகை மற்றும் கணக்கில் நிலுவையில் உள்ள வட்டியுடன், கணக்கு வைத்திருப்பவர்களுக்கு செலுத்தப்படும். இந்த கணக்கு முதிர்ச்சியடைந்த பிறகும் இந்த கணக்கு மூடப்படாவிட்டால், மீதமுள்ள தொகைக்கு தொடர்ந்து வட்டி கொடுக்கப்படும். ஆக உண்மையில் இது பெண் குழந்தைகளுக்கு ஏற்ற ஓரு சேமிப்பு திட்டமாக பார்க்கப்படுகிறது.

வட்டி விகிதம்?

வட்டி விகிதம்?

மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள அரசின் இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 21 வருடங்கள் அல்லது அந்த பெண் 18 வயதிற்கு மேல் திருமணம் ஆனாலும் அந்த கணக்கு தானாகவே மூடப்படும். இதற்கான வட்டி விகிதம் நடப்பு
காலாண்டிற்கு 7.6% ஆகும். இந்த திட்டத்திற்கான வட்டி விகிதம் காலாண்டிற்கு ஒரு முறை அரசால் மாற்றம் செய்யப்படும். இது முதலீட்டுக்கு பங்கமில்லாமல், கணிசமான லாபத்தினை கொடுப்பதால், பெண் குழந்தைகளின் வருங்காலத்திற்கு ஏற்ற ஒரு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

 

 

எப்படி SSY கணக்கினை தொடங்குவது?

எப்படி SSY கணக்கினை தொடங்குவது?

இந்தியாவில் உள்ள எந்தவொரு எஸ்பிஐ கிளையிலும் இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ள முடியும். இதற்காக இணையத்தில் இருந்து டவுன்லோடு செய்யப்பட்ட விண்ணப்பத்தில் குழந்தையின் பெயர், பெற்றோரின் பெயர், எவ்வளவு தொகை ஆரம்பத்தில் முதலீடு செய்யப்போகிறீர்கள். அதனை டிடியாக கொடுக்க போகிறீகளா? அல்லது செக் என்றால் அதன் எண், மற்றும் தேதி குறிப்பிட வேண்டியிருக்கும். அதனுடன் குழந்தையின் பிறந்த தேதி, பிறப்பு சான்றிதழ் விவரங்கள், பெற்றோரின் அடையாள ஆவணங்கள், பான் எண் என பல விவரங்கள் கொடுக்கப்பட வேண்டியிருக்கும்.

இந்த படிவத்தினை ஆர்பிஐயின் இணையதளத்தில் https://rbidocs.rbi.org.in/rdocs/content/pdfs/494SSAC110315_A3.pdf டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்தினை எங்கு கொடுக்கலாம்?

விண்ணப்பத்தினை எங்கு கொடுக்கலாம்?

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தில் கையொப்பமிட்டு, அதனை சம்பந்தபட்ட எஸ்பிஐ கிளையில் கொடுக்க வேண்டும். இந்த விண்ணப்பத்துடன் சரியான ஆவணங்களையும் இணைத்து இந்த கணக்கினை தொடங்கிக் கொள்ளலாம். இங்கு அடையாள அட்டையாக பெற்றோரின் ஆதார் அல்லது ஓட்டுனர் உரிமம், அடையாள ஆவணமாக பான் அட்டையும் கொடுத்துக் கொள்ளலாம். அதோடு குழந்தையின் பிறப்பு சான்றிதழ் கொடுக்க வேண்டும்.

இருப்பை எப்படி தெரிந்து கொள்வது?

இருப்பை எப்படி தெரிந்து கொள்வது?

உங்களது SSY கணக்கின் நிலுவையை எஸ்பிஐயின் நெட் பேங்கிங் மூலமாக எளிதாக தெரிந்து கொள்ளலாம். அதற்காக உங்களது இணைய வங்கியிலேயே ஆப்சன் உள்ளது. அல்லது பாஸ்புக் மூலமாகவும் நீங்கள் அவ்வப்போது வங்கிக் கிளைக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம். இதே அஞ்சல் அலுவலகத்தில் நீங்கள் கணக்கினை தொடங்கியிருந்தால், நேரடியாக அலுவலகத்திற்கு சென்று மட்டுமே பேலன்ஸினை தெரிந்து கொள்ள முடியும்.

வரிச் சலுகை உண்டா?

வரிச் சலுகை உண்டா?

இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் ஒரு வேளை 21 வயது பூர்த்தியாவதற்குள் திருமணம் முடிந்துவிட்டால் கணக்கு தானாகவே மூடப்படும்.

இந்த சுகன்யா சமிரிதி திட்டத்தின் கீழ் செய்யப்படும் டெபாசிட் தொகைக்கு வருமான வரி சட்டத்தின் கீழ் 80சி-ன் படி அதிகபட்சமான 1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. ஆக சேமிப்புடன் கூடுதலாக வரிச்சலுகையும் உண்டு.

 

முன்கூட்டியே பணம் பெற முடியுமா?

முன்கூட்டியே பணம் பெற முடியுமா?

பெண் குழந்தையானது 18 வயதை அடைந்த பிறகே பணம் திரும்ப பெற முடியும். ஆனால் அதுவும் நிலுவையில் 50% தொகையினை குழந்தையின் கல்விச் செலவினங்களுக்காக பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் நீங்கள் ஒரு வேளை உங்களது சுகன்யா சம்ரிதி கணக்கினை இடையில் தொடராவிட்டால், 15 வருடங்கள் கழித்து வட்டியுடன் திரும்ப பெற முடியும்.

இடையில் நிறுத்தப்பட்ட கணக்கினை மீண்டும் தொடர முடியுமா?

இடையில் நிறுத்தப்பட்ட கணக்கினை மீண்டும் தொடர முடியுமா?

இடையில் நிறுத்தப்பட்ட கணக்கினை நிச்சயம் மீண்டும் தொடங்கலாம். எனினும் இதற்காக குறிப்பிட்ட தொகை அபராதம் விதிக்கப்படும். இந்த அபராதத்தினை செலுத்தி விட்டு மீண்டும் கணக்கினை தொடரலாம். ஆக குறிப்பிட்ட காலம் செலுத்திவிட்டு, தவிர்க்க முடியாத காரணங்களால் இடையில் முதலீட்டினை தொடர முடியாமல், பின்னர் தொடரலாம் என நினைப்பவர்களுக்கு இது மிக உபயோகமாக இருக்கும்.

வேறு கிளைக்கு கணக்கை மாற்றலாமா?

வேறு கிளைக்கு கணக்கை மாற்றலாமா?

சரி ஒரு வங்கிக் கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாற்ற முடியுமா என்றால், நிச்சயம் முடியும். அது இந்தியாவின் வேறு எந்தவொரு பகுதிக்கும் மாற்றிக் கொள்ள முடியும். இதற்காக நீங்கள் டிரான்ஸ்பர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, உங்களது கணக்கு நிர்வகிக்கப்படும் சம்பந்தபட்ட கிளையில் கொடுக்க வேண்டும்.

முதிர்வு காத்திற்கு முன்பே கணக்கினை மூட முடியுமா?

முதிர்வு காத்திற்கு முன்பே கணக்கினை மூட முடியுமா?

எதிர்பாராத விதமாக ஏற்படும் முக்கிய காரணங்களுக்கான இந்த கணக்கினை மூடிக் கொள்ளலாம். அதாவது தீவிர நோய், அல்லது முதன்மை கணக்கு வைத்திருப்பவர் ஒரு வேளை எதிர்பாராத விதமாக இறந்து விட்டால், கணக்கினை முடித்துக் கொள்ளலாம். குழந்தையின் பெண் குழந்தையின் மேற்படிப்பு செலவுக்கு பணம் தேவையென்றால், 18 வயது நிரம்பியவுடன் 50% சேமிப்பு நிதியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

பிணயமாக வைத்து கடன் வாங்க முடியுமா?

பிணயமாக வைத்து கடன் வாங்க முடியுமா?

சில திட்டங்களில் சேமிப்புக்கான ஆதாரத்தினை காட்டி கடன் வாங்க முடியும். ஆனால் பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் அப்படி கடன் வாங்க முடியாது. ஆக இது இன்னும் நல்ல விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஆக நாட்டில் பல சேமிப்பு திட்டங்கள் இருந்தாலும், இதுபோன்ற திட்டங்களில் ரிஸ்க் இல்லாத, பாதுகாப்பான முதலீட்டு திட்டங்கள் மக்களிடம் அதிக வரவேற்பினை பெற்றுள்ளது இந்த திட்டம். அதிலும் இந்த திட்டத்தினை அஞ்சல் அலுவலகம் தவிர, வங்கிகளும் பெற முடியும் என்பது இந்த திட்டத்தின் கூடுதல் சலுகையே. .

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+