மத்திய அரசு அறிவித்த திட்டங்களில் ஒய்வுகாலத்திற்கு ஏற்ற திட்டங்களில் ஒன்று அடல் பென்ஷன் யோஜனாவும் (APY) ஒன்று.
இந்த திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு, ஓய்வுக்காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட ஒரு திட்டமாகும். அரசின் இந்த திட்டம் அறிவித்து சில ஆண்டுகளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏனெனில் அரசு பணியில் இல்லாதவர்களுக்கும், இந்த ஓய்வூதிய திட்டம் ஓய்வுகாலத்தில் பென்ஷன் பெறலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது எனலாம். இந்த திட்டத்தில் யாரெல்லாம் இனையலாம்? எப்படி ஆன்லைனில் E- KYC மூலமாக இணைவது? வாருங்கள் இந்த பதிவில் பார்க்கலாம்.
யார் இணைய தகுதியானவர்கள்?
அடல் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 18 முதல் 40 வயது வரையிலான எந்தவொரு இந்திய குடிமகனும் ஒரு கணக்கைத் தொடங்கிக் கொள்ளலாம். இந்தத் திட்டத்தில் வாடிக்கையாளர் தான் கணக்கு வைத்துள்ள வங்கி கிளை அல்லது அஞ்சல் நிலையத்திலிருந்து தொடங்கிக் கொள்ளலாம். தற்போது இதனை ஆன்லைனிலும் E- KYC மூலமாக இணையும் வசதியினையும் கொண்டு வந்துள்ளது.
எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
இந்த ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இணைந்த சந்தாதாரர் தனது கணக்கில் அளிக்கும் பங்களிப்பின் அடிப்படையில் 60 வயதிலிருந்து ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரையில் உத்தரவாத ஓய்வூதியம் பெறலாம். ஒரு வேளை சந்தாதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.
குறைந்தபட்ச முதலீடு?
18 வயதில் நீங்கள் இந்த திட்டத்தில் இணைகிறீர்கள் எனில். தினசரி 7 ரூபாய் முதலீடு செய்தால், மாதம் 210 ரூபாய் முதலீடு செய்வீர்கள். பணம் செலுத்த வேண்டிய வருடம் 42 வருடங்களாகும். இதன் மூலம் உங்கள் 61 வயதில் இருந்து மாதம் தோறும் 5,000 ரூபாய் ஓய்வூதியம் பெறுவீர்கள்.
மாதம் ரூ.4,000 ஓய்வூதியத்திற்கு?
இதே மாதம் 42 ரூபாய் செலுத்தினால், மாதம் 1000 ரூபாயும், மாதம் 64 ரூபாய் செலுத்தினால் 2,000 ரூபாயும், மாதம் 126 ரூபாய் செலுத்தினால் மாதம் 3000 ரூபாயும், மாதம் 168 ரூபாய் செலுத்தினால், மாதம் 4,000 ரூபாயும் உங்களுக்கு ஓய்வூதியமாக கிடைக்கும்.
தாமதமாக இணைந்தால் என்ன செய்வது?
ஒருவர் 30 வயதில் இணைகிறார் எனில், அதற்கேற்ப முதலீட்டினை அதிகரிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் மாதம் 1000 ரூபாய் பென்ஷன் பெறந் மாதம் 116 ரூபாய் தவணையாக செலுத்த வேண்டியிருக்கும்.
இதே நீங்கள் மாதம் 5000 ரூபாய் பெற 577 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். இதே 40 வயது எனில் 1,454 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அப்போது தான் உங்கள் 60 வயதுக்கு பிறகு இந்த ஓய்வூதியம் கிடைக்கும்.
எப்படி இணைவது?
உங்களுக்கு எந்த வங்கிக் கிளையில் சேமிப்பு கணக்கு இருக்கிறதோ, அந்த வங்கிக் கிளையில், இந்த அடல் பென்ஷன் ஓய்வூதிய திட்டத்தில் இணையலாம். இதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, முகவரி சான்று, அடையாள சான்றை கொடுக்க வேண்டும். அதன் பின்னர் வங்கி உங்களுக்கான ப்ரான் எண்ணை பதிவு செய்து கொடுக்கும்.
எவ்வளவு செலுத்தலாம்?
மாதம் எவ்வளவு எவ்வளவு தொகை செலுத்தலாம்? இந்த திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யும் போதே, 60 வருடங்களுக்கு பிறகு எவ்வளவு தொகை உங்களுக்கு ஓய்வூதியமாக வேண்டும் என்பதையும் பூர்த்தி செய்ய வேண்டும். ஆக நீங்கள் பெற நினைக்கும் ஓய்வூதியத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும் பணம் செலுத்த வேண்டியிருக்கும்.
எப்படி பணம் கட்டுவது?
அரசின் இந்த ஓய்வூதிய திட்டத்தின் இணைந்த பின், மாதா மாதம் செலுத்த வேண்டிய சந்தா தொகையை, வங்கிக் கணக்கில் இருந்து ஆட்டோடெபிட் மூலம் செல்லுவது போல் செய்து கொள்ளலாம். அதற்கு ஆதாரமாக உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு மெசேஜ் வரும். பணம் செலுத்தினாலும், பணம் எவ்வளவு பேலன்ஸ் உள்ளது என்பது பலவும் எஸ்எம்எஸ் ஆக வரும்.
தவணை எப்போது செலுத்த வேண்டும்?
இந்த திட்டத்தில் நீங்கள் எப்போது முதல் முறையாக இணைகிறீர்களோ? அதே தேதியில் அடுத்தடுத்த மாதங்களில் பணம் செலுத்த வேண்டியிருக்கும். உதாரணத்திற்கு நீங்கள் அக்டோபர் 28ல் இந்த திட்டத்தினை தொடங்குகிறீர்கள் என்றால், நவம்பர் 28ல் மீண்டும் தவணையை செலுத்த வேண்டியிருக்கும்.
தொகையில் மாற்றம் செய்யலாமா?
ஆரம்பத்தில் 200 ரூபாய் தொகையினை செலுத்தியுள்ளீர்கள் என வைத்துக் கொள்ளலாம். ஐந்து வருங்டங்கள் கழித்து இந்த தொகையினை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியுமா? என்றால் நிச்சயம் முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் மட்டுமே இந்த தொகையில் நீங்கள் மாற்றம் செய்து கொள்ளலாம். ஆக நீங்கள் ஏப்ரல் மாதத்தில், உங்களது தொகையினை கூடுதலாக செலுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும்.
அவசரத் தேவைக்கு எடுக்கலாமா?
அடல் பென்ஷன் திட்டத்தில் சந்தாதாரர் 60 வயதுக்கு பின் இறந்து விட்டால், அவரது இறப்பு சான்றும், இந்த திட்டத்தில் இணைந்ததற்கான சான்றிதழ், ஆதார் ஆட்டை, நாமினியின் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை, பதிவு செய்யப்பட்ட வங்கிக் கிளையில் கொடுத்தால், வங்கி அந்த விவரங்களை PFRDA-வுக்கு அனுப்பும். இந்த நகல்கள் சரிபார்க்கப்பட்டு பின்னர், பென்ஷன் தொகையை நாமினிக்கு வழங்கும்.
செலுத்திய தொகை மட்டுமே கிடைக்கும்?
ஒரு வேளை சந்தாதாரர் 60 வயதுக்கு முன்னரே இறந்தால் அல்லது மிக மோசமான நோய் காரணமாக பணத்தினை எடுக்க வேண்டும் என்றால். சந்தாதாரர் எவ்வளவு தொகையினை செலுத்தினாரோ அதனை மட்டும் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கான சரியான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு இடையில் வழங்கப்படும்.
சிறப்பம்சம் இது தான்?
இந்த திட்டத்தின் சிறப்பம்சமே, ஒரு சந்தாதாரர் 60 வயதுக்கு பின்னர் எத்தனை ஆண்டுகள் வாழ்கிறாரோ, அத்தனை ஆண்டுகள், சந்தாதாரர் கேட்டிருந்த தொகை முழுமையாக கிடைக்கும். ஒரு வேளை சந்தாதாரர் இறந்து விட்டால், நாமினிக்கு அந்த தொகை கிடைக்கும். மொத்தத்தில் ஓய்வுகாலத்திற்கு ஏற்ற ஒரு பயனுள்ள திட்டமாகும்.
நாமினியை மாற்ற முடியுமா?
நீங்கள் உங்களது ஓய்வூதிய திட்டத்தில் குறிப்பிட்டிருந்த நாமினி துரதிஷ்டவ்சமாக இறந்துவிட்டால், அவருக்கு பதிலாக வேறு ஒரு நாமினியை நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். நீங்கள் எந்த வங்கியில் கணக்கை தொடங்கினீர்களோ, அதே வங்கியில் சென்று சரியான ஆவணங்களை கொடுத்து மாற்றிக் கொள்ளலாம்.
வங்கியினை மாற்றிக் கொள்ளலாமா?
நீங்கள் ஆரம்பத்தில் எஸ்பிஐ வங்கியில் பென்ஷன் கணக்கினை தொடங்கியிருந்தால், பின்னர் இதனை வேறு வங்கிக் கிளைக்கு மாற்றிக் கொள்ள முடியும். இப்படி ஒரு திட்டத்தினை இதுவரையில் வங்கிகளிலும், அஞ்சலத்திலும் தொடங்கிக் கொள்ளலாம் என இருந்தது. தற்போது தான் ஆன்லைனில் தொடங்கிக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைனில் எப்படி?
இதனை CRA அமைப்பு மூலம், ஆன்லைனில் E-KYC செய்து கொள்ளலாம். இதன் மூலம் காகிதமற்ற செயல்முறை மூலமாகவே இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும் என PFRDA அறிக்கையில் தெரிவித்துள்ளது. அனைத்து APY service வழங்கும் அனைத்து வங்கிகள் மற்றும் அனைத்து தரப்புக்கும் e- APY Link-னை கொடுத்துவிடும், இந்த லிங்குகள் சேவை வழங்குனர்களின் இணையத்தில் இருக்கும். ஆக அதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
ஆதார் இணைப்பு
அனைத்து APY கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்பட வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் உங்களது அனைத்து சேவைகளும் எளிதாக இருக்கும். எனினும் இது குறித்து விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அனைத்து வகையான அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகளையும் ஆதார் அவசியம். ஆன்லைனிலும் அனைத்து சேவைகளையும் பெற்றுக் கொள்ளும் வசதிகள் வந்துள்ள நிலையில், இதுவும் வரவேற்க தக்க விஷயம் தான்.
More From GoodReturns

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications