உங்களுடைய சிபில் ஸ்கோர் நீங்கள் கடந்த காலத்தில் எப்படி கடனைத் திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள் என்ற விவரங்களை எடுத்துக்காட்டும் ஒரு மதிப்பெண். உங்கள் சிபில் ஸ்கோர் காரணமாக கடன் விண்ணப்பம் வங்கியால் நிராகரிக்கப்பட்டால் கவலைப்பட வேண்டாம். சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடனைப் பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அவை என்ன என்பது குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்ப்போம்.
சிபில் ஸ்கோர் என்றால் என்ன?: சிபில் ஸ்கோர் என்பது 3 எழுத்து எண் ஆகும். இது 750-க்கு மேல் இருந்தால் வங்கிகள் உங்களுக்கு கடன் தருவது குறித்து பரிசீலிக்கும். அதுவே 700-க்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் வங்கிகள் உங்களுக்கு கடன் தரலாமா? வேண்டாமா? என்று யோசித்து முடிவு எடுக்கும். இந்த சிபில் ஸ்கோர் நீங்கள் வாங்கிய கடனை எவ்வாறு செலுத்தி இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்து அமையும்.

எனவே நீங்கள் கடன் பெற விண்ணப்பிக்கும் போது வங்கி உங்களுடைய சிபில் ஸ்கோரை வைத்து நீங்கள் முன்பு வாங்கிய கடனை எந்த தேதியில் திருப்பி செலுத்தி இருக்கிறீர்கள், சரியாக திருப்பி செலுத்தி இருக்கிறீர்களா என்ற விவரங்களை தெரிந்து கொள்ளும்.
எனவே உங்களுடைய அவசர நிதி தேவைகளுக்கு சிபில் ஸ்கோர் குறைவாக இருக்கும் பட்சத்தில் எப்படி கடன் பெறுவது என்பதைப் பார்ப்போம்.
NBFC-களில் விண்ணப்பிக்கவும்: அவசர நிதி தேவைகள் இருக்கும் பட்சத்தில் குறைந்த சிபில் ஸ்கோர் இருந்தாலும் NBFC-களில் கடன் பெற விண்ணப்பிக்கலாம். பெரும்பாலும் NBFC-கள் சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் கடன்களை வழங்குகின்றன. ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால் வங்கிகளில் வழங்கப்படும் வட்டி விகிதங்களை ஒப்பிடும்போது NBFC-களில் வட்டி விகிதங்கள் சற்று அதிகமாக இருக்கலாம்.
ஜாயின்ட் லோன் பெற விண்ணப்பிக்கலாம்: உங்கள் சிபில் ஸ்கோர் சாதகமற்றதாக இருந்தால் உங்களுடைய சிபில் ஸ்கோரை அதிகரிக்கும் பொருட்டு கூட்டு கடன் பெற விண்ணப்பிக்கலாம். நல்ல கிரெடிட் ஸ்கோர் கொண்ட ஒருவரை சேர்த்துக் கொண்டு கடன் பெறுவதன் மூலம் உங்களுடைய கடன் ஒப்புதல் செயல்முறைக்கு எந்தவித தடையும் வராமல் இருக்கும்.
முன்கூட்டியே சம்பளம் பெறுதல்: நீங்கள் வேலையில் இருந்தால், பல நிறுவனங்கள் முன்பண சம்பளம் எனப்படும் கடன் விருப்பத்தை வழங்குகின்றன. இந்த ஏற்பாடானது கடன் தொகையை நேரடியாக உங்கள் கணக்கிற்கு வழங்குகிறது, உடனடி நிதி தேவைகளை பூர்த்தி செய்கிறது. முன்கூட்டியே சம்பளத்தைத் தேர்ந்தெடுப்பது குறுகிய கால தேவைகளை திறம்பட பூர்த்தி செய்ய உதவும்.
FDக்கு எதிரான கடன்: உங்களிடம் FD-கள் போன்ற முதலீடுகள் இருந்தால் அல்லது எல்ஐசி, பிபிஎஃப் போன்ற திட்டங்களுக்கு நீங்கள் பங்களித்திருந்தால், இதற்கு எதிராக கடன் வாங்குவதற்கு அனுமதி வழங்கப்படுகிறது. நீங்கள் முதலீடு செய்த தொகையின் அடிப்படையில் இந்தக் கடன்கள் வழங்கப்படுகின்றன. உங்கள் PPF கணக்கு குறைந்தது ஒரு நிதியாண்டாவது செயலில் இருந்தால் அதன் மீது கடனுக்கு விண்ணப்பிக்கலாம். கடன் வசதி 5 ஆண்டுகள் வரை கிடைக்கும்.
தங்கக் கடன்: தங்கக் கடன் என்பது பாதுகாப்பான கடனாகும். CIBIL மதிப்பெண் குறைவாக இருந்தாலும், இந்த விருப்பத்தை நீங்கள் தேர்வு செய்யலாம். இது குறைந்தபட்ச ஆவணங்களை உள்ளடக்கிய கடன் செயல்முறை. தங்கக் கடனில், உங்கள் தங்கம் பிணையமாகப் பயன்படுத்தப்படுகிறது, மேலும் நீங்கள் தங்கத்தின் தற்போதைய சந்தை மதிப்பில் 75 சதவிகிதம் வரை கடனாகப் பெறலாம்.


Click it and Unblock the Notifications