சென்னை: தற்போது பெரும்பாலானவர்கள் மத்தியில் முன்கூட்டியே ஓய்வு பெற்ற விட வேண்டும் என்ற கருத்து பரவலாக நிலவுகிறது. பலரும் தங்களுடைய நாற்பதுகளிலேயே ஓய்வு பெற்று வாழ்க்கையை அதன் பிறகு அனுபவிக்க வேண்டும் என நினைக்கின்றனர். அந்த வகையில் முன்கூட்டியே ஓய்வு பெற வேண்டும் என விரும்புபவர்கள் சரியான முறையில் கணக்கீடுகளை செய்து முதலீடு செய்து வைக்க வேண்டும் என்கின்றனர் முதலீட்டு துறை சார்ந்த நிபுணர்கள்.
தற்போது 34 வயதாக கூடிய ஒரு நபர் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது தன்னுடைய 45ஆவது வயதிலேயே ஓய்வு பெற வேண்டும் என விரும்பினால் அவர் எவ்வளவு தொகையை சேர்த்து வைத்திருந்தால் 45 வயதிலேயே ஓய்வு பெற முடியும் என்பது குறித்து நாம் இதில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பொதுவாக ஓய்வு காலத்திற்கு திட்டமிடும் போது பணவீக்கத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது நாம் வாங்கும் பொருட்களின் மதிப்பு உயர்ந்து பணத்தை மதிப்பு குறைவதையே பணவீக்கம் என்கிறோம். அதாவது இன்றைக்கு 1000 ரூபாய்க்கு விற்பனையாகும் ஒரு பொருள் அடுத்த ஆண்டு 1006 ரூபாய்க்கு விற்பனையாகும்.
இது ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே போகும். எனவே தற்போதைய மாதாந்திர செலவினம் என்ன என்பதை பணவீக்க விகிதத்துடன் சேர்த்து கணக்கீடு செய்தால் மட்டுமே ஓய்வு காலத்திற்கு எவ்வளவு தொகை தேவைப்படும் என்பதை முழுமையாக புரிந்து கொள்ள முடியும்.
உதாரணமாக ஒருவர் 45 வயதிலேயே ஓய்வு பெற வேண்டும் என விரும்புகிறார் என வைத்துக் கொண்டால், அவர் 85 வயது வரை உயிருடன் இருப்பார் என வைத்துக் கொண்டால் அடுத்த 40 ஆண்டு காலத்திற்கு அவர் வாழ்வதற்கு தேவையான பணத்தை சேர்த்து வைத்திருக்க வேண்டும்.
அதாவது கிட்டத்தட்ட 480 மாதங்களுக்கு தேவையான தொகை அவரிடம் இருக்க வேண்டும். தற்போதுள்ள இதே போன்ற ஒரு வாழ்க்கை முறையை அப்போதும் வாழ வேண்டும் என விரும்புபவர்கள் கணிசமான தொகையை சேர்த்து வைத்திருந்தால் மட்டுமே இதனை எட்ட முடியும்.
தற்போது மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் செலவு செய்கிறார்கள் என வைத்துக் கொண்டால் பணம் வீக்கத்தின் அடிப்படையில் கணக்கிடும்போது அது 2 லட்சம் ரூபாயாக அதிகரிக்கும் . எனவே தற்போது 34 வயதாகும் ஒருவர் அடுத்த 10 ஆண்டுகளில் அதாவது 45ஆவது வயதில் ஓய்வு பெற விரும்பினால் அவரிடம் 45ஆவது வயதில் 10 கோடி ரூபாய் சேமிப்பு இருக்க வேண்டும் என முதலீட்டு நிபுணர்கள் கணிக்கின்றனர்.
முன் கூட்டியே ஓய்வு பெற விரும்புபவர்கள் இது தொடர்பாக முதலீட்டு நிபுணர்களுடன் தீவிரமாக கலந்தாய்வு செய்வது அவசியம், பணவீக்கத்தின் அடிப்படையில் நீங்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு உங்களுக்காக போகும் செலவினம் குறித்து கணக்கீடு செய்து கொள்வது அவசியம்.
ஏனெனில் ஓய்வு பெற்ற பிறகு உங்களுக்கு வருமானமே இருக்காது என்பதால் உங்கள் ஓய்வு காலம் முழுமைக்கும் தேவையான தொகையை தான் நீங்கள் தற்போது திட்டமிட்டு சேமிக்க வேண்டும் என்கின்றனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications