இன்றெல்லாம் கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு அதிகரித்துவிட்டன. இதனால் கிரெடிட் கார்டுடன் தொடர்புடைய மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. ஆன்லைன் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ள காரணத்தினால் மோசடிக்காரர்கள் புதுப்புது டெக்னிக்கை பயன்படுத்தி மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திருட முயற்சிக்கின்றனர். எனவே எந்தவித ஆன்லைன் பரிவர்த்தனை செய்தாலும் சரி உங்களுடைய தகவல்களை பத்திரமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.
பல கிரெடிட் கார்டு வழங்குனர்கள் தற்போது போட்டி போட்டுக்கொண்டு மக்களை கவரும் வகையில் ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் இதர போனஸ்களை வழங்குகின்றனர். இதனால் கிரெடிட் கார்டுகள் தற்போது ஸ்டேட்டஸ் சிம்பலாகவே மாறிவிட்டது. கிரெடிட் கார்டு பயன்படுத்தாத நபர்களை பார்ப்பதற்கு அரிதாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

இதுபோன்ற மோசடி சம்பவங்களை தடுப்பதற்கு கிரெடிட் கார்டு பயனர்கள் கீழ்காணும் டிப்ஸ்களை பின்பற்றலாம்.
அறிக்கைகளை தவறாமல் கண்காணித்தல்: உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கைகளை தவறாமல் கண்காணிப்பது, ஏதேனும் சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனை நடந்திருக்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள உங்களுக்கு உதவியாக இருக்கும். கிரெடிட் கார்டுகளுக்கு வட்டி அதிகம் என்பதால் எந்த ஒரு பரிவர்த்தனையும் கார்டுதாரரின் பெயரில் நடந்திருந்தால் அவர்தான் அதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டும். எனவே நீங்கள் செய்யாத குற்றத்திற்கு தேவையில்லாமல் ஆளாவதை தடுக்க அடிக்கடி உங்கள் கிரெடிட் கார்டு அறிக்கைகளை சரி பாருங்கள்.
நோட்டிபிகேஷன்-ஐ ஆன் செய்து வைத்திருங்கள்: எந்த ஒரு கிரெடிட் கார்டு பரிவர்த்தனை நடந்தாலும் அதன் விவரங்கள் குறித்து உங்கள் வங்கியில் இருந்து மொபைல் நம்பருக்கு தெரிவிக்கும் வகையில் நோட்டிபிகேஷன்-ஐ ஆன் செய்து வைத்திருங்கள். இது வேறு ஏதேனும் பரிவர்த்தனை நடந்தால் உங்களுக்கு தெரியப்படுத்தி விடும்.
ஆன்லைன் பரிவர்த்தனைகளில் எச்சரிக்கையாக இருங்கள்: நீங்கள் நம்பும் இணையதளங்களில் மட்டும் ஷாப்பிங் செய்யுங்கள். அதற்கு ஸ்ட்ராங் பாஸ்வோர்ட்களை பயன்படுத்துங்கள்.
ஃபிஷிங் மோசடிகளில் ஜாக்கிரதை: உங்கள் கிரெடிட் கார்டு தகவல்களை ஆள் பேர் தெரியாத நபர்கள் கேட்டால் கண்டிப்பாக வழங்க வேண்டாம். அதேபோல தெரியாத நபர்களிடமிருந்து வரும் மெயில் மற்றும் SMS-களில் உள்ள லிங்குகளை கிளிக் செய்யாமல் இருங்கள்.
பாதுகாப்பு அமைப்புகளை மதிப்பாய்வு செய்யவும்: குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு PIN அல்லது கைரேகை ஸ்கேன் போன்ற கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துங்கள்.
சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டை உடனடியாகப் புகாரளிக்கவும்: உங்கள் கார்டில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான செயல்பாட்டைக் கண்டால், உடனடியாக உங்கள் வங்கியைத் தொடர்புகொண்டு அதைப் புகாரளித்து உங்கள் கார்டை பிளாக் செய்யவும்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications