ஒவ்வொரு மனிதருக்கும் தன் வாழ்நாளில் சொந்த வீடு ஒன்றை கட்டிவிட வேண்டும் என்ற ஆசை உண்டு. அதிலும் வீடு என்பது மக்கள் செய்யும் மிகப் பெரிய முதலீடுகளில் ஒன்றாகும். எனவே அதில் முதலீடு செய்யும் பணம் மிக முக்கியமானது.
அதைப் பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டும். வீட்டைக் கட்டினால் மட்டும் போதாது அதற்கான பாதுகாப்பு அவசியம் என்பதாக் வீட்டுக்கான இன்சூரன்ஸ் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதை விட முக்கியமாக உலக நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் வேளையில் உங்கள் வீட்டை பாதுகாக்கும் இன்சூரன்ஸ் எடுப்பது எப்படி..? பிற இயற்கை சீற்றத்தில் இருந்து உங்கள் வீட்டை பாதுகாப்பது எப்படி..?
வீட்டிற்கு இன்சூரன்ஸ்!
நீங்கள் புதிதாக வீட்டைக் கட்டினாலோ அல்லது கட்டிய வீட்டை வாங்கினாலும் சரி அதற்கு காப்பீடு இருப்பது அவசியம். இப்பொழுதெல்லாம் பூகம்பம் போன்ற இயற்கைச் சீற்ற செய்திகளை நம்மால் அதிகம் காண முடிகிறது. அதிலும் வெள்ளம், மழை, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர்களால் எப்போது வேண்டுமானாலும் வரலாம் அதனால் வீட்டுக்கும் ஆபத்து வரலாம். எனவே அதற்கான பாதுகாப்பும் நிவாரணமும் அவசியம்.
வீட்டுக்கான இன்சூரன்ஸ் திட்டங்கள்!
வீட்டுக்கு இரண்டு வகையான காப்பீடுகள் உள்ளன. ஒன்று வீட்டுக்கான காப்பீடு, மற்றொன்று வீட்டிலுள்ள பொருட்களுக்கான காப்பீடு. இரண்டுக்கும் சேர்த்தும் காப்பீடு உள்ளது. வீட்டுக்கு இன்சூரன்ஸ் வாங்க முடிவுசெய்துவிட்டால் எந்த இன்சூரன்ஸ் சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்யவேண்டும்.
ஏதுவான காப்பீடு எது
வீட்டுக்கு இன்சூரன்ஸ் எடுப்பதற்கு சரியான புரிதல் தேவை. உங்களுக்கு வீட்டுக்கு ஏதுவான காப்பீடு எது என நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஆன்லைனிலேயே பல்வேறு இன்சூரன்ஸ் திட்டங்களை நீங்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். அதேபோல, இன்சூரன்ஸ் ஏஜெண்ட் மூலமாகவும் இதற்கான புரிதலையும், தகவல்களையும் நீங்கள் பெறலாம். உங்களது வீட்டின் நிலை என்னவென்று கூறி அதற்கு ஏற்றவாறு ஒரு பாலிசியை எடுக்கலாம்.
இன்சூரன்ஸ் காலம்!
வீட்டுக் காப்பீட்டுக் கொள்கைகளின் படி கட்டிடத்திற்கு ஒன்று முதல் முப்பது ஆண்டுகள் வரையிலும், பொருட்களுக்கு ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும், இரண்டிற்கும் கூட்டாக ஒன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரை இருக்கலாம்.
வீட்டுக் கடன் வாங்கும் வங்கி
தற்போதுள்ள நிலையில் நாம் வீட்டுக் கடன் வாங்கும் வங்கியே நம் வீட்டுக்கான இன்சூரன்ஸை அல்லது காப்பீட்டை எடுத்து விடுகிறது. அதற்கான பணத்தையும் உங்கள் மாதத் தவணையிலிருந்து பிடித்தம் செய்தும் கொள்வார்கள். இவ்விவரங்களை நீங்கள் வங்கிகளிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். அதில் வங்கிகள் வீட்டுக்கான காப்பீட்டை எடுக்கவில்லையெனில், நீங்கள் தனிப்பட்ட முறையில் காப்பீட்டை எடுக்கலாம்.
டிஜிட்டல் முறையில் பாதுகாக்க வேண்டும்!
இன்சூரன்ஸ் எடுத்தபிறகு, வீட்டுக்கான காப்பீட்டுப் பணத்தைப் பெறுவதற்கு அதற்குத் தேவையான ஆவணங்களைத் தயார் நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும்.
ஏதேனும் இயற்கை சீற்றங்களால் வீட்டுக்கான ஆவணங்கள் காணாமல் போகவோ அல்லது அழிந்துவிடவோ வாய்ப்பு உள்ளது. அதனால் வீட்டுக்கான ஆவணங்களை நீங்கள் டிஜிட்டல் முறையில் எடுத்து வைத்துக்கொள்வது இன்னும் சிறப்பு. அப்பொழுதுதான் உடனடியாக உங்களால் இன்சூரன்ஸ் பலன்களை அனுபவிக்க முடியும்.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications